திருவண்ணாமலை - தமிழக மாவட்டங்கள்
திரக்கோல் :
வந்தவாசிக்கு எட்டுமைல் தொலைவில் உள்ளது. இங்குள்ள குன்றில் மூன்று குகைகளும், மூன்று ஜினாலயங்களும் காணப்படுகின்றன. அக்கோயிலின் அடியாகத் திருக்கோவில் என்னும் பெயரே "திரக்கோல்" என்றாகி விட்டது. இம்மாவட்டத்தில் பொன்னுர், வெம்பாக்கம், முதலிய இடங்களிலும் சமணக் கோயில்களைக் காணலாம்.
ஜைனர் :
குறைந்தளவு மக்கள் தொகை கொண்ட தமிழ் சமணர்கள் இம்மாவட்டத்தில் காணப் படுகின்றனர். வந்தவாசி, பொன்னுர், வெம்பாக்கம் முதலிய ஊர்களிலும், போளூர் வட்டத்திலும் இவர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் பொதுவாக நைனார் என்ற பட்டப் பெயரைக் கொண்டிருந்தாலும், மற்ற சாதியினரின் பட்டப் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனர்.
ஆரணி :
ஆற்காட்டுக்குத் தென் பகுதியில் ஆரணி உள்ளது. ஆரணியும் நகராட்சி நிருவாகத்தில் உள்ளதாகும். மைசூர் மன்னன், ஐதர் அலி, ஆங்கிலேயரிடம் தோல்வி அடைந்தது இவ்வூரில்தான் பழங்கால கோட்டையின் பகுதிகளை இங்கே காணலாம். இந்நகரம் கைத்தறிப் பட்டுச் சேலைகளுக்குப் புகழ் பெற்றதாகும். ஆரணிப்பட்டு உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் விற்பனையாகிறது.
செங்கம் :
நன்னன் ஆண்ட மலை. இங்குள்ள கோவிலில் நன்னனைப் பற்றிய கல்வெட்டொன்று காணப்படுகிறது.
மருதநாடு :
வந்தவாசி வட்டத்திலுள்ளது இவ்வூர். விக்ரம சோழ நல்லூர் என்னும் பெயரும் உண்டு. இராசராசன் கல்வெட்டும் காணப்படுகிறது. பெருந்திருக்கோயில் என வழங்கப்பட்ட இவ்வூர் கோயில் புரந்தீசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது.
தென்னாறு :
வந்தவாசி வட்டத்தில் தென்னாறு உள்ளது. இங்குதான் தென்னாற்றில் நிகழ்ந்த போரில், பாண்டியனது பெருஞ்சேனையை நந்திவர்மன் வென்று, "தெள்ளாற் றெரிந்த நந்திர்மன்" என்று நந்திக் கலம்பகத்தால் அழைக்கப்படுகிறான்.
வழுவூர் :
இவ்வூரில் உள்ள பழமையான கோவிலின் பெயர் அயனீச்சுரம் ஆகும். மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் இக்கோயிலை பழுது பார்ப்பதற்காகவும், பூசனை புரிவதற்காகவும் சம்புவராயம் 'தேவதான' மாக அளித்த நிவந்தம் கல்வெட்டில் காணப்படுகிறது.
தொழில் வளம் :
வேலூர் மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் பிரிந்துள்ளதால் இங்கு தொழில் வளம் இனித்தான் ஏற்பட வேண்டும் திருவண்ணாமலை மாவட்டமும் இன்னமும் ஒரு வேளாண்மை மாவட்டமாகத் தான் இருக்கிறது.
செய்யாறில் ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கிறது. தனியார் நூற்பாலைகள் சில உண்டு. ஆரணியில் அரிசி மண்டி பெருமளவில் உள்ளது. நவீன பட்டு நெசவுக்காக, ஆரணியைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பட்டி நெசவு நடந்து வருகிறது. பொன்னுரை ஒட்டியுள்ள பிரதேசங்களில் கைத்தறி நெசவுத்தொழில் வளர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் வேளாண்மையையொட்டி வளரும் சாத்தியக்கூறுள்ள தொழில்களானவன:
1. உமியிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஆலை.
2. வைக்கோளிலிருந்து அட்டை தயாரிப்பு.
3. கயிறு திரித்தல் மற்றும் கயிற்றின் துணைப்பொருள்களைக் கொண்டு செய்யப்படும் பொருள்கள்.
4. சந்தான எண்ணெய் ஆலை.
5. பட்டுப்பூச்சி வளர்ப்பு
6. உள்நாட்டு நீர்நிலைகளில் மீன் வளர்ப்பு.
வந்தவாசி :
ரூ.11 லட்சம் செலவில் ஆர்.சி.சி.பைப் தயாரிக்கும் தொழிற்சாலை இங்குள்ளது. ரூ.12 இலட்சம் செலவில் செங்கள் தயாரிக்கும் தொழிலகம் உள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவண்ணாமலை - Tiruvannamalai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருவண்ணாமலை, உள்ளது, tamilnadu, மாவட்டங்கள், வந்தவாசி, தமிழக, இம்மாவட்டத்தில், காணப்படுகிறது, தகவல்கள், தமிழ்நாட்டுத், இவ்வூர், தென்னாறு, கோயில், தொழில், உண்டு, வளர்ப்பு, தயாரிக்கும், | , செலவில், எண்ணெய், இருக்கிறது, வளம், முதலிய, இங்குள்ள, மூன்று, information, districts, tiruvannamalai, என்னும், ", இவர்கள், பட்டப், காணலாம், வெம்பாக்கம், பொன்னுர், ஆரணி