திருவண்ணாமலை - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | திருவண்ணாமலை |
பரப்பு : | 6,188 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 2,464,875 (2011) |
எழுத்தறிவு : | 1,626,813 (74.21 %) |
ஆண்கள் : | 1,235,889 |
பெண்கள் : | 1,228,986 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 398 |
திருவண்ணாமலை கோயில் உள்ள இறைவன் பெயர் அண்ணாமலை. சிவபெருமான் ஐம்பூதங்களுள் ஒன்றாகிய தீயின் வடியில் இங்குள்ளார் என்பது ஐதீகம். பிரம்மன் -விஷ்ணு இருவரும் தாமே பரம்பொருள் என செருக்கு கொண்டபோது சிவபெருமான் நெருப்புத்தூண் வடிவில் தோன்றியதாகவும் அந்த தூனே 'திருவண்ணாமலை' என்றும் கூறப்படுகிறது.
இப்பகுதி தொண்டை நாட்டின் 24 கோட்டங்களில் ஒன்றான 'பல்குன்ற கோட்டத்தில் உள்ளது. சங்க காலத்தில் இப்பகுதியில் உள்ள செங்கத்தில நன்னன் ஆண்டதாக சங்க இலக்கியம் கூறுகிறது. பெரும்பாணாற்றுப் படை இப்பகுதிகளின் ஊர் வளத்தை மெச்சு கிறது. பல்லவர்கள் இப்பகுதியை ஆண்டனர் அவர்கள் நந்திவர்மன் பல்லவன் தென்னாற்றில் பாண்டியனைத் தோற்கடித்ததை 'நந்திக் கலம்பலம்' விதந்து பாராட்டு கிறது. சுந்தரச் சோழன் ஆட்சி முதல் அதி ராஜேந்திரன் ஆட்சிகாலம் வரை இப்பகுதி சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
சோழர்களுக்குப் பின்னர் 'சம்புவராயர்'கள் என்ற குறுநில மன்னர்கள் இப்பகுதிகளை ஆண்டனர். சம்புவராயர்களுக்குப் பின் இப்பகுதி விஜயநகர நாயக்கர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பின்னர் ஆற்காட்டு நவாப்பின் ஆளுகையின் கீழ் இருந்து ஆங்கி லேயர் ஆட்சிக்குக் கைமாறியது. சுந்திரத்திற்குப் பின்னர் வேலூர் மாவட்டத்தில் இருந்து 1989 செப்டம்பரில் 30ந் தேதி இம்மாவட்டம் புதிதாக உருவாக்ப்பட்டது.
பொது விபரங்கள்:
மழையளவு: 1074 மி.மி.; வங்கிகள் : 148; காவல் நிலையங்கள்-35;
சாலைநீளம்-5478கி.மீ; பதிவு பெற்ற வாகனங்கள் 5665;
அஞ்சலகங்கள்-464; திரையரங்குகள்-82.
எல்லைகள் :
கிழக்கில் காஞ்சிபுரம் மாவட்டம்; வடக்கில் வேலூர் மாவட்டம்;
மேற்கில் தர்மபுரி; தெற்கில் விழுப்புரம் மாவட்டத்தை எல்லைகளாகக்
கொண்டுள்ளது.
உள்ளாட்சி நிறுவனங்கள் :
நகராட்சிகள்-4; ஊராட்சி ஒன்றியங்கள்-18; பேரூராட்சி-11;
ஊராட்சி-865; கிராமங்கள்-1067.
சட்டசபை தொகுதிகள் :
9. செங்கம், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை, கலசப்பாக்கம், ஆரணி,
செய்யார், வந்தவாசி, பெரணமல்லூர்.
பாராளுமன்றத் தொகுதி :
1. வந்தவாசி
கல்வி :
தொடக்கப்பள்ளிகள் : 1,773; நடுநிலை : 248; உயர்நிலை : 132;
மேல்நிலை : 56; கல்லூரிகள் : 4.
மருத்துவம் :
அரசுமருத்துவமனைகள் : 6; தொடக்கமருத்துவநல மையம் : 84.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
திருவண்ணாமலை - Tiruvannamalai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருவண்ணாமலை, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, பின்னர், தகவல்கள், இப்பகுதி, தமிழ்நாட்டுத், இருந்து, tiruvannamalai, வேலூர், மாவட்டம், | , வந்தவாசி, ஊராட்சி, உட்பட்டிருந்தது, ஆண்டனர், உள்ள, மக்கள், information, சிவபெருமான், districts, கிறது, சங்க, ஆட்சிக்கு