தஞ்சாவூர் - தமிழக மாவட்டங்கள்
கலைகள்:
கோவிற்கலைகள்:
தஞ்சை, குடந்தை, மானம்பாடி, தாராசுரம், திருவிடைமருதூர், புள்ளமங்கை, திருவையாறு முதலிய இடங்களில் கோவில்கட்டடக் கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை முதலியவை பெருமளவு வளர்ந்துள்ளதை இங்கு காணலாம்.
இசை:
தமிழிசை மும்மூர்த்திகளான அருணாசல கவிராயர் (1711-78) முத்துத் தாண்டவர் (1560-1670); மாரிமுத்தாப்பிள்ளை (1712-87) பிறந்தது பழைய சோழ மண்டலம்தான். தெலுங்கிசை மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள் (1767-1847); முத்துசாமி தீட்சதர் (1775-1834), சியாமா சாஸ்திரிகள் (1762-1827) இவர்கள் பிறந்தது சோழமண்டலம்தான். தெலுங்கிசை எவ்வாறு தமிழிசையை அப்பட்டமாகக் கவர்ந்து வளர்ந்தது என்பதையும், அவ்விசைக்கு இசை இலக்கணம் சரியாக அமையவில்லை என்பதையும் கண்டிபிடித்த ஆபிரகாம் பண்டிதர் இயற்றிய 'கருணாமிருதசாகரம்' தஞ்சையில் தான் உருவானது. 'யாழ்நூல்' இயற்றிய விபுலானந்தர் அந்நூலை தஞ்சை கொள்ளாம்புத்தூரில் தான் அரங்கேற்றினார். பதிப்பித்தது கரந்தை தமிழ்ச் சங்கம். இது தவிர வாய்ப்பாட்டில் வல்லவர்களும் இங்குதான் தோன்றினார்கள். தமிழிசைச் கருவிகளான நாதசுரம், தவில், மிருதங்கம், வீணை முதலியன இங்கு செய்யப்படுகின்றன. நாதசுர சக்கரவர்த்தி திருவாடுதுறை இராஜரத்தினம், திருவிடைமருதூர் வீராசாமிபிள்ளை, வலங்கை மான் சண்முகசுந்தரம் முதலியோர் சாதனையாளர்கள். பிடில் இராஜமாணிக்கம் பிள்ளை புகழ் வாய்ந்த் கலைஞர். வயலினை கர்நாடக இசையில் பயன்படுத்தியவர் தஞ்சை நால்வர்களில் ஒருவரான வடிவேல்பிள்ளை ஆவார். ஆங்கிலேய பேண்ட் வாத்தியமும் இங்குதான் முதன்முதலில் நம்மூர் விழாவில் வாசிக்க ஆரம்பித்தனர். வீணை தனம்மாள், தாகூர் முன்பு வாசித்துப் புகழ் பெற்றவர்.
நடனம்:
ஆடவல்லானின் அழகான செப்புத் திருமேனிகளை சோழநாடு முழுவதும் காணலாம். 108 கரணங்களில் 81 கரணங்கள் சிவபெருமான் ஆடுவது போல தஞ்சையில் உள்ள சிற்பங்களும், சாரங்கபாணிக் கோவில் சிற்பங்களும் பரதத்திற்கு எடுத்துக் காட்டுடாக இருக்கின்றன. தமிழகம் தவிர பரத முத்திரைக் காட்டும் சிற்ப தொகுதிகள் வேறு மாநிலத்தில் கிடையாது.
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தஞ்சை நால்வர்களான பொன்னையா, சிவானந்தம், சின்னையா, வடிவேலு ஆகியோரே சதிராக இருந்த நடனக் கலையை புதிய பாணிகளைச் சேர்த்து பரதத்திற்கு புத்துயிர் ஊட்டினர். பரத பள்ளிகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்திரையைப் பார்க்கலாம். பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, வழுவூர் இராமய்யா பிள்ளை போன்ற புகழ்பெற்ற நட்டுவனார்கள் பல பள்ளிகளையும், நடன மணிகளையும் உருவாக்கினார்கள். தஞ்சை மரபில் வந்தவர்தான் தஞ்சை பால சரஸ்வதி அம்மையார். இவர் உலகப் புகழ்பெற்றவர் ஆவார். இவர் பற்றிய திரைப்படம் சத்யஜித்ரேயால் எடுக்கப் பட்டுள்ளது.
நாடகம்:
இராஜராஜன் காலத்திலேயே பெரிய கோவிலில் நாடகமாடி வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. 'இராஜராஜவிஜயம்' என்ற நாடகம் பெரிய கோவில் நாடக மேடையில் அக்காலத்தில் நடந்ததாம். சரபோஜி காலத்தில் 'சபோஜி பூபாலா குறவஞ்சி' இக்கோவிலில் அரங்கேற்றப்பட்டுள்ளது.
நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை இங்கு பல நாடகங்கள் நடித்துள்ளார். சங்கரதாச சுவாமிகள் இங்கிருந்த 'கல்யாணராமய்யர்' நாடக மன்றத்தில் பணியாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து குடந்தை வாணிவிலாச சபை, தஞ்சை சுதர்சன சபை, குமார கான சபை போன்றவை தோன்றின. இங்குதான் எம்.ஜி.ஆர். சக்ரபாணி, சாரங்கபாணி, காளி என். ரத்தினம், பெரியநாயகி முதலியோர் தோன்றினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தஞ்சாவூர் - Thanjavur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தஞ்சை, tamilnadu, தஞ்சாவூர், மாவட்டங்கள், தமிழக, இங்குதான், இங்கு, தகவல்கள், தமிழ்நாட்டுத், புகழ், ஆவார், வீணை, முதலியோர், சிற்பங்களும், பிள்ளை, நாடகம், நாடக, | , பெரிய, இவர், பரதத்திற்கு, கோவில், என்பதையும், திருவிடைமருதூர், காணலாம், குடந்தை, information, thanjavur, districts, மும்மூர்த்திகளான, பிறந்தது, தஞ்சையில், தான், இயற்றிய, சுவாமிகள், தெலுங்கிசை, தவிர