தஞ்சாவூர் - தமிழக மாவட்டங்கள்
ஒரத்த நாடு:
இப்பகுதி 99 கிராமங்களைக் கொண்டது. 1954 முதல் தனிவட்டமாகச் செயல்பட்டு வருகிறது. நெல், கரும்பு, வேர்க்கடலை போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட 'கல்சவுக்கம்' வேலைப்பாட்டோடு காணப்படுகிறது. இவ்வூரைச் சுற்றி உழூர், கண்ணந்தங்குடி, பாப்பா நாடு, தென்னமநாடு போன்றவை உள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பெருமக்கள் பாப்பா நாடு ஜமீன்தார், மலையப்பன் ஐ.ஏ.எஸ்.; எல். கணேசன், முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம், தோழர் சிவராமன் முதலியோர்.
மீன்பிடிப்பு:
அதிராம்பட்டினம் சாளுவநாயக்கன்பட்டினம், சேதுபாவாசத்திரம், அம்மிணி சத்திரம் போன்ற ஊர்களில் மீன்பிடிப்பு முக்கிய தொழிலாகும். இங்குப் பிடிக்கப்படும் மீன்களும் உள்நாட்டில் மிகுந்த வரவேற்பிருக்கிறது. கருவாடுக்கும் இவ்வூர்கள் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. உப்பளத் தொழில் பெருமளவு நடந்து வருகிறது.
அதிராம்பட்டினம்:
இங்கு மேட்டூர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் ரசாயன முறையிலான உப்பு தயாரித்தல் நன்கு நடந்து வருகிறது.
செங்கிப்பட்டி:
இங்கு 'காசநோய் பிரிவை' மருத்துவர்கள் பார்க்கும் செங்கிப்பட்டி சானிடோரியம் அமைந்துள்ளது.
திருப்பனந்தாள்:
குடந்தைக்கு அருகில் அமைந்துள்ள ஊர். மடத்திற்குச் சொந்தமான செந்தமிழ்க் கல்லூரி பல ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இங்கு தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு உண்ண உணவும், இருக்க இடமும் இலவசமாக தந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.
திருவாடுதுறை:
திருவாடுதுறை மடம் 15ஆம் நூற்றாண்டில் தோன்றியது. சைவத்தையும், தமிழையும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்குதான் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை தமிழ் கற்பித்து வந்தார். அவருடைய மாணவரே உ.வே. சாமிநாதய்யர். பழைய கால குருகுலக் கல்வி முறையில் மடத்திலேயே தங்கி, உணவு வுண்டு படித்தவர் உ.வே.சா. மடத்தின் வாயிலாக 100க்கும் மேற்பட்டநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல கொடைகள் நிறுவப்பட்டுள்ளன.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்:
தமிழ்ப் பல்கலைக் கழகம் |
கலை வளர்க்கும் தஞ்சை:
உழவுத் தொழில் வளமாக நடந்ததால் மற்ற நேரங்களில் கலை வளர்வதற்கு தஞ்சை மக்கள் மிகுந்த ஊக்கம் அளித்ததால் இங்கு ஆடல், பாடல், நாடகம், கல்வி, கலை, கைத் தொழில்கள், நாட்டுப்புறக்கலைகள் முதலியவை பெருமளவு வளர்ந்து இன்று தமிழகம் முழுவதற்குமான கலைஞர்களை அளித்துள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தஞ்சாவூர் - Thanjavur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, வருகிறது, தமிழக, தஞ்சாவூர், tamilnadu, தமிழ், மாவட்டங்கள், தமிழ்ப், ஆண்டு, தகவல்கள், நாடு, கல்வி, தமிழ்நாட்டுத், திருவாடுதுறை, பல்கலைக், அமைத்தல், தஞ்சை, | , உலகத், வெளியிடுவது, அவற்றை, கழகம், தொழில், செயல்பட்டு, போன்றவை, information, districts, thanjavur, பாப்பா, மீன்பிடிப்பு, நடந்து, செங்கிப்பட்டி, பெருமளவு, மிகுந்த, அதிராம்பட்டினம், அமைந்துள்ளது