தஞ்சாவூர் - தமிழக மாவட்டங்கள்
கும்பகோணம்:
அப்பர், ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பழைய நகரம். இவ்வூரை தேவாரம் குடமூக்கு, குடந்தை கீழ்கோட்டம் என்று அழைக்கிறது. இங்கு கும்பேஸ்வரர், நாகேஸ்வரர் போன்ற சைவக் கோவில்களும், சக்கரபாணி, சாரங்கபாணி, இராமசாமிக் கோவில் முதலிய வைணவக் கோயில்களும் இருக்கின்றன. முன்னிரண்டும் மங்களாசாசனம் செய்யப்பட்டவை. வைணவர்களின் 108 திருப்பதிகளில் இவ்வூரும் ஒன்றாகும். குடந்தை சாரங்கபாணிக்
கும்பகோணம் |
பட்டீஸ்வரம்:
தாராசுரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் பட்டீஸ்வரம் உள்ளது. சோழரின் கருவறை இருந்த பழையாறைக்கு இது அருகில் இருக்கிறது. கோவில் பல சுற்றுக்களைக் கொண்ட பெரிய கோவில். சோழர் கால துர்க்கையை இங்கு காணலாம். நாயக்கர் கால ஓவியங்களைக் காணலாம். நாயக்கரின் பிரதானி. கோவிந்த தீட்சதரின் சிலை இங்குள்ளது.
சுவாமிமலை:
சுவாமிமலை |
திருபுவனம்:
இது தஞ்சையிலிருந்து 44 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது குலோத்துங்க சோழனின் திருப்பணி. திருவிடை மருதூர்: குடந்தைக்கு இவ்வூர் அருகில் உள்ளது. இங்கு நாயக்கர் கால திருப்பணியைக் காணலாம். சுதை சிற்பங்கள், ஓவியங்கள், போன்றவையும், வீதி அழகும் காணத்தக்கவை. திருப்பனந்தாளுக்கு அருகில் உள்ள மானாம்பாடியில் சோழர்கால கோவிலில் அற்புதமான சிற்பங்கள் உள்ளது. இதுபோலவே தஞ்சைக்கு அருகில் உள்ள பசுபதி கோவிலுக்கு அருகில் உள்ள புள்ளமங்கையில் முற்கால சோழர்களின் சிற்பங்களைக் காணலாம்.
மனோரா:
இது சரபோஜி காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். மினார் என்னும் முஸ்லீம் பாணி உயர்ந்த கோபுரம்; அகழி சூழ்ந்து காணப்படும் கோட்டை, கடற்கரை அருகில் உள்ளது. சேதுபாவா சத்திரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. சிறந்த சுற்றுலாத் தலமாகும். இக்கோட்டையுள் ஆங்கிலம், தமிழ், மராட்டிய மொழிகளில் உள்ள கல்வெட்டு கூறுகிறது: ஃபிரெஞ்சு அரசன் போனபர்ட்டேவை ஆங்கிலேயர் வென்றதை குறிக்கும் முகமாக கட்டப் பட்டதாக கூறுகிறது.
வேளாண்மை:
2000 ஆண்டு காலமாக தஞ்சை மாவட்டத்து மக்கள் வேளாண்மையை சிறப்பாக செய்து வருவதை இலக்கியங்கள் பேசுகின்றன. கல்லணை ஒன்றே இதற்கான சான்றாகும். "சோழநாடு சோறுடைத்து" என்ற கூற்று இதனால்தான் உருவானது. இன்றும் தஞ்சைதான் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக திகழ்கிறது. மூன்று போகம் விளைந்து வந்த தஞ்சை, இன்று காவிரி நீர் குறைப்பால் 2 போகமே நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தின் மிகப் பெரிய தொழிலாக விவசாயமே இருந்து வருகிறது. விவசாயத்தின் சாகுபடி பரப்பு: 2,56,247 ஹெக்டெர். இதில் நெல் சாகுபடி மட்டும் 2,29,079 ஹெக்டேர். விவசாயத்தை மட்டும் சார்ந்திருப்போர் 4,70,735 பேர்கள். உற்பத்தியாகும் நெல்லை சேமிக்க உதவும் மிகப் பெரும் கிடங்குகள் அந்தந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளன. இதுதவிர அம்மன் பேட்டையில் உள்ள நவீன அரிசி ஆலையின் மூலம் அரிசியாக மாற்றப்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தஞ்சாவூர் - Thanjavur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ள, காணலாம், அருகில், உள்ளது, தொலைவில், தமிழக, இங்கு, tamilnadu, தஞ்சாவூர், மாவட்டங்கள், கோவில், காணத்தக்கவை, வருகிறது, கோவிலில், தஞ்சை, தமிழ்நாட்டுத், தகவல்கள், சுவாமிமலை, | , ஓவியங்களைக், தஞ்சையிலிருந்து, மட்டும், சிற்பங்கள், கூறுகிறது, மிகப், சாகுபடி, நாயக்கர், இருந்து, ஓவியம், குடந்தை, இராமசாமிக், கும்பகோணம், information, districts, சிற்பங்களும், திருப்பணி, பட்டீஸ்வரம், இருக்கிறது, சிலை, thanjavur, பிரகாரத்தில், பெரிய