சிவகங்கை - தமிழக மாவட்டங்கள்
பாகநேரி:
இது நாட்டார்களாலும் நகரத்தார்களாலும் புகழ் பெற்ற ஊர். சிவகங்கை வட்டத்திலுள்ள இவ்வூரில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைவர் காசி விசுவநாதன் செட்டியாரால் ஏற்படுத்தப்பட்ட பெரிய நூலகம் உள்ளது. இங்கு பல அரிய நூல்கள் உள்ளன.
மானாமதுரை:
இவ்வூரிலிருந்து மதுரை 48 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு இரயில் சந்திப்பு நிலையம். பல ஊர்களுக்கும் பஸ் வசதி உண்டு. இவ்வூரின் நடுவே வைகை ஆறு ஓடுகிறது. இராமேஸ்வரம் தீவை இவ்வூர் வழியாகச் சென்றடையலாம். 14ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட மானவீரன் எனும் பாண்டியனால் இவ்வூர் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிராமணர்களும், கிருத்துவர்களும்,
முஸ்லீம்களும் நிறைய வாழுகின்றனர். ஆனந்தவல்லி அம்பாள் கோயில் வைகையின் மேல்கரையில் உள்ளது. மண்பாண்டம், ஓடு, செங்கல் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. கடம் என்னும் வாத்திய இசைக் கருவிக்கு பெயர் பெற்ற ஊராகும்.
திருப்புவனம்:
திருப்புவனம் |
திருப்பாச்சேத்தி:
திருபுவனத்திற்கு 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இதற்கு சேரை மாநகர் என்ற இன்னொரு பெயரும் வழங்குகிறது. இரயில் நிலையம் உள்ளது. இது அரிவாள் உற்பத்திக்குச் சிறந்த இடமாகும். இவை அழகானதும், நீளமானதுமாகும். நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, கத்தரிக்காய் முதலியன இங்கிருந்து மிகுதியாக ஏற்றுமதியாகின்றன.
புகழ்பெற்றோர்:
மருதுபாண்டியர், வேலுநாச்சியார், கணியன் பூங்குன்றனார், மாசாத்தியார், மாசாத்தனார் (சங்ககாலம்), பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கவியரசு கண்ணதாசன், வள்ளல் அழகப்ப செட்டியார் முதலியோர் இம்மாவட்டத்தில் பிறந்து வாழ்ந்து புகழ் பெற்றோர் ஆவார். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் சிவகங்கையை ஆண்ட மருது சகோதரர்கள் ஏகாதிபத்திய வெறியர்களான ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி இறந்தனர். இப்போரில் ராணி வேலு நாச்சியார் காட்டிய வீர உணர்ச்சி அளப்பரியது.
கவியரசு கண்ணதாசன் |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவகங்கை - Sivaganga - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - செட்டியார், உள்ளது, சிவகங்கை, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, புகழ், தகவல்கள், தமிழ்நாட்டுத், முத்துராமலிங்கத், போகத்தில், கரும்பு, பசும்பொன், கவியரசு, வாழை, பிறந்து, கவிஞர், | , ராஜா, நாடு, இம்மாவட்டத்தில், இங்கிருந்து, கண்ணதாசன், இவ்வூர், தலைவர், இங்கு, பெற்ற, information, sivaganga, districts, மானாமதுரை, மதுரை, என்னும், பெயர், ஆண்ட, நிலையம், தொலைவில், இரயில், திருப்புவனம்