சிவகங்கை - தமிழக மாவட்டங்கள்
பள்ளத்தூர்:
இச்சிறுநகரம் காரைக்குடி-புதுக்கோட்டை சாலையில் உள்ளது. ஒவ்வொரு தெருவிலும் ஒரு வீட்டின் தரைமட்டம் அடுத்தடுத்த வீடுகளின் மாடிமட்டமாக இருக்கும். சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியும், பெண்கள் உயர்நிலைப் பள்ளியும், பாத்திரத் தொழிற்சாலையும் பள்ளத்தூருக்குப் பெருமை சேர்க்கின்றன. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் உதவி புரிந்த ஏ.எம்.எம். முருகப்ப செட்டியார் இவ்வூரினர். 1921 இல் பெரியார் ராமசாமி நாயக்கர் தலைமையில் இங்கு ஓர் அரசியல் மாநாடு நடைபெற்றது.
செட்டிநாடு:
செட்டிநாடு |
குன்றக்குடி:
செட்டிநாட்டின் பகுதிகளுக்கு எல்லையாக இது அமைந்துள்ளது. காரைக்குடியிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவண்ணாமலை ஆதீனத்தின் தலைமை மடம் இங்குள்ளது. பெரிய மருது பாண்டியரால் மலை மீது கோபுரமும், மண்டபமும் கட்டப்பட்டன. முருகனுக்குத் திருவிழா நாட்களில் அணிவிக்கப்படும் பொற்கவசம் சின்ன மருது பாண்டியரின் உபயமாகும். மலையைச் சுற்றி பக்தர்கள் தங்க சத்திரங்கள் கட்டப்பட்டுள்ளன.
சிவகங்கை:
சிவகங்கை ஒரு நகராட்சியாகும். கெளரி மகால் என்னும் பழைய அரண்மனை இங்குள்ளது. இந்த அரண்மனையில் அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் மண்டபமும், அதன் நான்கு மூலைகளிலும் யாளிச் சிற்பங்களும், மணிகூண்டும், அரசக் குடும்பத்தினரின் நீச்சல்குளமும் உள்ளன. இந்த அரண்மனைக்குள் ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவில் உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சின்னமருது இந்த அரண்மனையில்தான் அடைக்கலம் கொடுத்தார். மேலும் கோகலே மண்டபம், அரசர் கல்லூரி, உயர்நிலைப்பள்ளி, நீதிமன்றம், கத்தோலிக்க ஆலயம், ஏராளமான அரசு அலுவலகங்களும் இந்நகரில் உள்ளன.
இளையான்குடி:
தொழில் வளமும், வரலாற்றுச் சிறப்பும் மிகுந்துள்ள இவ்வூர் பரமக்குடியிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாற நாயனார் இந்த ஊரைச் சேர்ந்தவர். இந்நாயனார் பாண்டிய சிற்றரசர்களுள் ஒருவர். இங்கு இரண்டு சிவன் கோவில்கள், இரண்டு பெருமாள் கோவில்கள், நான்கு பள்ளி வாசல்கள், ஒரு தேவாலயம், வாள் மேல் நடந்த அம்மன் கோவில் முதலியன உள்ளன. வெற்றிலைக் கொடிக் கால்கள் இங்கு ஏராளம். பெரிய ஏரி இருப்பதால் இருபோகம் நெல் விளைகிறது.
காளையார் கோவில் |
மதுரையிலிருந்து 61 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இது மாணிக்கவாசகர் வருகை புரிந்த ஊராகும். சிங்கள படையை வென்ற வேங்கை மார்பன் ஆட்சி செய்த ஊர் இது. இடிபாடுகளுடன் பாண்டியன் கோட்டை இங்குள்ளது. காளீசுரர் சந்நிதியின் எதிரில் மருது பாண்டியரின் சமாதிக் கோவில் உள்ளது. பாண்டிய மன்னர்களின் நாணயச்சாலை இவ்வூரில் இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. பல இசைப்புலவர்கள் காளையார் கோவிலில் தோன்றியுள்ளனர். அப்பர், சேக்கிழார், அருணகிரியார், குமரகுருபரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். சித்தாந்த மடமும், வேதாந்த மடமும் உள்ளன.
நாட்டரசன் கோட்டை:
இது கவிச்சக்கரவர்த்தி கம்பன் சமாதி உள்ள ஊராகும். கம்பன் இங்குதான் உயிர் துறந்தார் என்பர். இங்கு ஆண்டுதோறும் கம்பன் விழா எடுக்கப்படுகிறது. கம்பன் குளம், கம்பன் ஊருணி, கம்பன் செய், கம்பன் நடுகல் முதலியனவும் உள்ளன. இதற்கு களவழிநாடு என்ற பெயரும் இருந்தது. கண்ணகிக்கு கோவில் உள்ளது. இந்த ஊர்த் திருவிழாக்களில் கள்ளர் வகுப்பினருக்கு 'நாட்டரசன்' என்ற பட்டம் கூறி திருநீறு வழங்கப்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவகங்கை - Sivaganga - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கம்பன், உள்ளது, சிவகங்கை, கோவில், இங்கு, மாவட்டங்கள், தமிழக, tamilnadu, செட்டிநாடு, காளையார், தொலைவில், மருது, இங்குள்ளது, என்னும், தமிழ்நாட்டுத், தகவல்கள், தொழில், இரண்டு, இளையான்குடி, பாண்டிய, இவ்வூர், நாட்டரசன், மடமும், ஊராகும், கோவில்கள், | , கோட்டை, அமைந்துள்ளது, புரிந்த, செட்டியார், information, districts, sivaganga, கட்டப்பட்டன, அண்ணாமலைச், பாண்டியரின், மண்டபமும், பெரிய, இவ்வூரில், நான்கு