சிவகங்கை - தமிழக மாவட்டங்கள்
வழிபாட்டிடங்கள்:
கண்ணத்தாள் கோவில், காளையார் கோவில், காளீஸ்வரர் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருகோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் கோவில் மற்றும் குன்றக்குடி முருகன் கோவில் ஆகியன இம்மாவட்டத்திலுள்ள முக்கியமான கோவில்களாகும்.
கண்ணாத்தாள் கோவில் :
ஆடி, தை மாத வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு பூசைகள் நடைபெறுவதால் மக்கள் திரளாக கூடுகின்றனர். மருதுபாண்டியர் திருப்பணி செய்த காளையார் கோவிலில் மூன்று சிவன் கோயில்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளது இவ்வூரின் சிறப்பாகும். அவை காளீசர் கோவில், சோமேசுவரர் கோவில், சுந்தரேசுவரர் கோவில் ஆகியனவாகும். வைகாசியில் பிரமோற்சவ திருவிழாவும், தை மாதத்தில் காளிசுரருக்கு திருவிழாவும், ஆடி மாதத்தில் பூரம் திருவிழாவும் மற்றும் தெப்பத் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.
வலம்புரி விநாயகர் |
பிள்ளையார்பட்டியிலுள்ள கற்பக விநாயகர் கோவில் தமிழ்நாட்டிலுள்ள முக்கியமான கோவில்களில் ஒன்றாகும். தலையில் சடையுடன் யோகநிலையில் காணப்படும். விநாயக இறையுருவில் வயிறு குறைவாக மெலிந்துள்ளது; வலது கையில் சிவலிங்கத்துடன் வலம்புரி விநாயகராக காட்சி தருகிறது. மாதச் சதுர்த்திகளிலும், ஆவணியின் வளர்பிறைச் சதுர்த்தியுடன் முடியும் பத்து நாட்களிலும் விழாக்கள் நிகழ்கின்றன.
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் :
பெருமாள் கோவில் |
குன்றக்குடி முருகன் கோயில் :
முருகன் கோயில் |
காரைக்குடி :
நகர சிவன் கோவில் |
சிவகாமி அம்மன் கோயில் 1920 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இப்பெரிய கோவிலில் உள்ள அலங்கார மண்டபமும் சுரங்கக் கிணறுகளும் காணத்தக்கவை. இக்கோவிலில் நடராசர் வலக்கையிலிருக்கும் உடுக்கை ஒலி தரவல்ல உலோகத்தால் அமைக்கப்பட்டுள்ளது அரிய படைப்பாகும். சிங்கம்புணரி ஐயனார் கோவிலில் வைகாசியில் பத்துநாள் திருவிழா நடைபெறுகிறது. இக்கோவிலுக்கு நேர்த்திக் கடனாக மாடுகள் விடப்படுகின்றன. முப்பது மைல் சுற்றுவட்டத்தில் வாழும் மக்கள் இக்கோவிலில் பாக்கு வைத்து, கோவில் மாடுகளை தத்தம் ஊர் மஞ்சுவிரட்டுக்கு அழைக்கிறார்கள். சோழர்களால் கட்டப்பட்ட சிங்கம்புணரி சிவன் கோவில் சிவபுரிப் பட்டியில் அமைந்துள்ளது. இங்குள்ள நந்தி ஆள் உயரம் உடையது. சித்தி விநாயகர் சிலையும் அதே அளவினதாக உள்ளது. வள்ளல் பாரி மன்னன் ஆண்ட இடம் பிரான்மலையாகும். ஆண்டுக்கொருமுறை மாசி சிவராத்தி நாளில் பிரான்மலையில் பாரி வேட்டை எனும் நிகழ்வு நடந்து வருகிறது. பிரான்மலையை அடுத்த தனிக்குன்றில் மூன்று கோவில்கள் உள்ளன. பாடல் பெற்ற முக்கியமான பெரிய கோவில் அடிவாரத்திலுள்ளது. மலையில் புடைப்புச் சிற்பங்களாய் இறை உருவங்கள் அமைந்துள்ளன. சித்திரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் தேர்த்திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது. திருக்கார்த்திகையன்று மலை மீது விளக்கு ஏற்றுவர். அதன் ஒளி 20 கி.மீ. சுற்றளவுக்குத் தெரியும். அமாவாசை தினங்களில் ஏராளமான மக்கள் கூடுவார்கள். சோலையாண்டவர் கோவில் பள்ளத்தூரில் கொத்தடி என்னும் பகுதியில் உள்ளது.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இங்கு பூச்சொரித் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரா பெளர்ணமியன்று மூன்று கி.மீ. தொலைவிலுள்ள ஒரு சிற்றுரிலிருந்து மண்குதிரைகளைச் சுமந்து வந்து இக்கோவிலில் திருவிழா நடத்தப்படுகிறது. திருப்பூவணநாதர் கோவிலில் பத்துநாள் விழா ஐப்பசி மாதத்தில் நடைபெறும். அம்பாள் கோலாட்டம் போடுவது கண்நிறைந்த காட்சியாகும். இத்தலத்துக்கு சிவப்பிரானே சித்தராக வந்ததாக திருவிளையாடற்புராணம் கூறுகிறது. கருவூர்த்தேவரும் இவ்வூரைப் பற்றி எழுதியுள்ளார். இக்கோவிலில் உள்ள உற்சவர் உருவங்கள் நல்ல தங்கத்தால் ஆனவை. திருப்பூவணத்தில் உயிர்நீத்தால் மோட்சம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். மாணிக்கவாசகரும் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார். திருப்பாச்சேத்தி சிவன் கோயில் நளமகாராஜாவால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுந்தரவல்லி அம்மன் கோவிலுக்கு மருது சகோதரர்கள் மரகதப் பச்சையில் சிவலிங்கம் செய்து வழங்கியுள்ளனர். இன்றும் அதை வைத்து வழிபடுகின்றனர். தேவக்கோட்டையில் சேக்கிழாருக்காக ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவகங்கை - Sivaganga - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கோவில், விநாயகர், சிவன், திருவிழா, கோவிலில், பெருமாள், நடைபெறுகிறது, கோயில், மீது, அமைந்துள்ளது, உள்ள, கோவிலும், திருவிழாவும், மக்கள், இங்கு, இக்கோவிலில், மாதத்தில், சிவகங்கை, மூன்று, tamilnadu, முருகன், மாவட்டங்கள், தமிழக, தமிழ்நாட்டுத், உள்ளது, முக்கியமான, தகவல்கள், சிங்கம்புணரி, அமைந்துள்ளன, பத்துநாள், புடைப்புச், | , வைகாசி, பற்றி, தேர்த்திருவிழா, நாளில், உருவங்கள், பாரி, வைத்து, நடைபெறும், அம்மன், திருக்கோஷ்டியூர், பிள்ளையார்பட்டி, கற்பக, குன்றக்குடி, காளையார், information, sivaganga, districts, வைகாசியில், நடைபெறுகின்றன, காலத்து, ஏராளமான, கூறப்படுகிறது, வந்து, கோவிலாகும், வலம்புரி, பத்து, மலையின்