சிவகங்கை - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | சிவகங்கை |
பரப்பு : | 4,233 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 1,339,101 (2011) |
எழுத்தறிவு : | 959,744 (79.85 %) |
ஆண்கள் : | 668,672 |
பெண்கள் : | 670,429 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 316 |
சிவகங்கை மாவட்டம் பல நூற்றாண்டுகள் இராமநாதபுர மாவட்டத்துடன் இணைந்திருந்தது. எனவே இராமநாதபுர மாவட்டத்தின் பண்டைய வரலாற்றுச் சிறப்புகள் சிவகங்கை மாவட்டத்திற்கும் பொருந்துவனவாகும். (காண்க: இராமநாதபுரம் மாவட்டம்)
பொதுவிவரங்கள்
எல்லைகள்:
வடக்கில் புதுக்கோட்டை, தெற்கில்
இராமநாதபுரம்; கிழக்கில் புதுக்கோட்டை, இராமநாதபுரம்; மேற்கில்
மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சிவங்கை மாவட்டம் எல்லைகளாகக்
கொண்டுள்ளது.
மழையளவு:
சராசரி 904.7 மி.மீ. மழை பெய்கிறது.
மருத்துவமனைகள்: 57
வங்கிகள்: 124.
காவல் நிலையங்கள்: 34 (காவலர்கள்-1108)
தபால் நிலையங்கள்: 448
தொலைபேசிகள்: 3700
பதிவுப் பெற்ற வாகனங்கள்: 11,602
வருவாய் நிர்வாகம்:
கோட்டங்கள்-2 (தேவக்கோட்டை, சிவகங்கை); வட்டங்கள்-6
(தேவக்கோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை,
இளையான்குடி); வருவாய் கிராமங்கள்-497; வளர்ச்சிக் கோட்டங்கள்-2
(சிவகங்கை, தேவக்கோட்டை); ஊராட்சி ஒன்றியங்கள்-12. (சிவகங்கை,
காளையார் கோவில், தேவக்கோட்டை, திருபத்தூர், சாக்கோட்டை,
சிங்கம்புணரி, கல்லல், கண்ணங்குடி, திருபுவனம், மானாமதுரை,
இளையான்குடி, எஸ்.புதூர்).
உள்ளாட்சி நிறுவனங்கள்:
நகராட்சிகள்-3 (சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை)
பஞ்சாயத்துகள்-437; குக்கிராமங்கள் - 2,366.
சட்டசபைத் தொகுதிகள்:
5 சட்டசபை தொகுதிகள் (சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி,
காரைக்குடி, திருப்பத்தூர்)
பாராளுமன்றத் தொகுதி: 1 தொகுதி (சிவகங்கை)
கல்வி:
பள்ளிகள்: துவக்கநிலை-957, நடுநிலை-150;
உயர்நிலை-76; மேனிலை-45. மெட்ரிகுலேஷன்-8; கல்லூரிகள்-9 (அரசு
ஆர்.டி.எம். கல்லூரி, சிவகங்கை; ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள்
கல்லூரி, திருப்பத்தூர்; சீதாலட்சுமி ஆச்சி பெண்கள் கல்லூரி;
பள்ளத்தூர்; டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரி, இளையான்குடி; சேவுகன்
அண்ணாமலை கலைக் கல்லூரி, தேவக்கோட்டை; அழகப்பா கலை மற்றும்
பொறியியல் கல்லூரி, காரைக்குடி; உடற்பயிற்சிக் கல்லூரி,
காரைக்குடி; இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி; அரசு கலைக்
கல்லூரி, பூலாங்குறிச்சி); பல்கலைக்கழகம்- அழகப்பா பல்கலைக்
கழகம், காரைக்குடி.
சாலை வழி:
சரளைப் பாதையின் நீளம்- 198 கி.மீ.
சரளையல்லாத பாதையின் நீளம் - 759 கி.மீ.
கச்சாப் பாதையின் நீளம் - 567 கி.மீ.
நல்ல சாலை வசதி - 498 கி.மீ.
இருப்புப்பாதையின் நீளம் - 115 கி.மீ.
சிவகங்கை - Sivaganga - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - சிவகங்கை, கல்லூரி, காரைக்குடி, தேவக்கோட்டை, நீளம், தமிழக, tamilnadu, இளையான்குடி, மாவட்டங்கள், திருப்பத்தூர், மானாமதுரை, இராமநாதபுரம், மாவட்டம், பாதையின், தகவல்கள், தமிழ்நாட்டுத், | , சாலை, தொகுதி, தொகுதிகள், அரசு, அழகப்பா, கலைக், வருவாய், information, districts, sivaganga, மக்கள், பெண்கள், நிலையங்கள், புதுக்கோட்டை, இராமநாதபுர, கோட்டங்கள்