பெரம்பலூர் - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | பெரம்பலூர் |
பரப்பு : | 1,756 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 565,223 (2011) |
எழுத்தறிவு : | 375,823 (74.32 %) |
ஆண்கள் : | 282,157 |
பெண்கள் : | 283,066 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 322 |
வரலாறு :
பெரம்பலூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றாகும். பெரம்பலூர் மாவட்டம், 1995-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் பெரம்பலூர் ஆகும்.
எல்லைகள் :
இம்மாவட்டம் வடக்கில் கடலூர் மாவட்டம், தெற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், கிழக்கில் அரியலூர் மாவட்டம், மேற்க்கில் நாமக்கல் மாவட்டம் மற்றும் தென்மேற்க்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆல் சூழப்பட்டுள்ளது.
பொது விபரங்கள் :
வருவாய் நிர்வாகம் :
கோட்டங்கள்-1; வருவாய் வட்டங்கள் - 4 (பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை); வருவாய் கிராமங்கள்-152.
உள்ளாட்சி நிறுவனங்கள் :
நகராட்சி-1 (பெரம்பலூர்); ஊராட்சி ஒன்றியம்-4 (பெரம்பலூர், வேப்பந்தட்டை, அரியலூர், திருமானுர், வேப்பூர், ஆலத்தூர், ஜெயங்கொண்டம், தா.பளூர், ஆண்டிமடம், செந்துறை); பேரூராட்சி-4 (அரும்பாவூர், இலப்பைகுடிக்காடு, குறும்பாளூர், பூலாம்பாடி).
சட்டசபைத் தொகுதிகள் :
2 (பெரம்பலூர், உப்பிலியாபுரம்).
பாராளுமன்றத் தொகுதி :
1 (பெரம்பலூர்)
வழிபாட்டுத் தலங்கள் :
மதுர காளியம்மன் |
இந்தக் கிராமத்தில் அமைந்த மதுர காளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக் கிராமம் பெரம்பலூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இக் கோவில் வாரம் இரண்டு முறை மட்டும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறக்கப்படும்.
செட்டிகுளம்
குன்னம் வட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி ஆகும். இவ்வூர் பழங்காலத்தில் கடம்ப வனமாக இருந்ததாகவும், இப்பகுதியில் இறைவன் ஏகாம்பரேஸ்வரன் சுயம்புவாக எழுந்தருளி மன்னன் குலோத்துங்க சோழன் மூலமாக ஆலயம் எழுப்பித்துக் கொண்டதாகவும் ஐதீகம். இவ்வூரிலுள்ள கோயில்கள்: அருள்மிகு காமாட்சி உடனமர் ஏகாம்பரேஸ்வரர் (பூதம்-நிலம்) திரூக்கோவில், அருள்மிகு பாலதண்டாயுதபானி திருக்கோவீல் (வடபழனி) ஆகும்.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெரம்பலூர் - Perambalur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - பெரம்பலூர், மாவட்டம், தமிழக, tamilnadu, மாவட்டங்கள், ஆகும், ஆலத்தூர், வருவாய், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாட்டுத், தகவல்கள், மதுர, ஊராட்சி, காளியம்மன், | , அருள்மிகு, வேப்பந்தட்டை, districts, perambalur, மக்கள், information, அரியலூர், தலைநகரம், வேப்பூர்