நாகப்பட்டினம் - தமிழக மாவட்டங்கள்
வேதாரண்யம்:
வடமொழியில் மாற்றபெற்ற ஊர் பெயர்களில் இந்த ஊரும் ஒன்று இங்கு மான்கள் அதிகம் இருந்ததால் பண்டையக் காலத்தில் இவ்வூரை 'திருமரைக்காடு' என்று அழைக்கப்பட்டது. இரை உணராத வேற்றுமொழியினர் 'மரை'யை மறை எனக் கொண்டு வேதம் + ஆரண்யம் = வேதாரண்யம் என்று தங்கள் போக்குக்கு ஏற்ப மாற்றி விட்டனர். வேதாரண்யம், நாகையிலிருந்து 55 கி.மீ தொலைவிலுள்ளது சிவன் மணவாளசுவாமியாக அகத்தியருக்கு காட்சி கொடுத்த இடம் என்பது ஐதீகம். திருநாவுக்கரசர் 11 பாடல்கள் பாடி இக்கோயிலின் கதவை
வேதாரண்யம் |
யாழ்ப்பாணத்தார் இக்கோயிலுக்கு நிறைய திருப்பணி செய்திருக்கிறார்கள் இக்கோயிலில் சரசுவதி கையில் வீணையின்றி ஏடுமட்டும் இருப்பது, நவக்கிரகங்கள் கிழமை வரிசைப்படி ஒரே நேர்கோட்டு வரிசையில் அடுத்தடுத்து இருப்பது, சோழர் வரலாற்றைக் கூறும் 84 கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.
இங்கு காண வேண்டியவை:
மரகத புவினி விடங்கர், இராமர் வழிபட்டலிங்கம், கதோபநிஷத்தை இயற்றிய நசிகேதர் தவம் செய்த இடம், விசுவாமித்திர தீர்த்தம், தேர் முதலியவை.
1930-ஆண்டு சர்தார் வேதரத்தினம் பிள்ளை தலைமையில் ராஜாஜி 'உப்பு சத்தியாகிரகம்' செய்த இடமானதால் இந்தியா முழுவதும் இந்த ஊரைப்பற்றி செய்தி பரவியது. மீன், உப்பு, மிளகாய், காய்கறிகள், கவுதாரி, மாம்பழம் முதலியன இவ்வூரிலிருந்து ஏற்றுமதியாகிறது.
அகத்தியாம் பள்ளி:
இவ்வூர் வேதாரண்யத்திலிருந்து 2 1/2 கி.மீ தொலைவிலுள்ள கடற்கரையூர். இங்குதான் உப்பு சத்தியாகிரகம் நடத்தப்பட்டது. அதற்கான நினைவுத்தூன் இங்கு கட்டப்பட்டுள்ளது. இங்கு அகத்தியருக்கு ஒரு கோவில் உண்டு.
கோடியக்கரை:
கோடியக்கரை |
வடக்கே இருந்து தெற்கு நோக்கிச் செங்குத்தாக வந்து கொண்டிருக்கும் நமது கடற்கரை இந்த முனையில் நேர் கோணமாக மேற்கு நோக்கிச் செல்லத் தொடங்குகிறது. கோடிக்கரையில் காலையில் கீழைக்கடலில் கதிரவன் தோன்றுவதையும், மாலையில் தெற்குக் கடலில் சூரியன் மறைவதையும் பார்க்கலாம். இதுபோன்ற காட்சியை கன்னியாகுமரியில் மட்டும்தான் பார்க்கலாம். கடற்கரையில் நீராட, ஆடி, தை அமாவாசைகளில் மக்கள் பெருங்கூட்டமாக வருகின்றனர். 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அர்த்தோத்திரய விழாவன்று கடலில் நீராடுவது சிறப்பாகக் கருதத்தக்கது. அடுத்த விழா கி.பி. 2006.இல் நடக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாகப்பட்டினம் - Nagapattinam - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, நாகப்பட்டினம், tamilnadu, மாவட்டங்கள், வேதாரண்யம், தமிழக, இவ்வூரை, தமிழ்நாட்டுத், உப்பு, தகவல்கள், கோடியக்கரை, சத்தியாகிரகம், வேதாரண்யத்திலிருந்து, கடலில், | , பார்க்கலாம், செய்த, நோக்கிச், தொலைவிலுள்ளது, information, districts, nagapattinam, இந்தியா, அகத்தியருக்கு, இக்கோயிலில், இடம், இருப்பது