நாகப்பட்டினம் - தமிழக மாவட்டங்கள்
இங்கு வரையாடு (Black Buck) என்ற மான் இனமும், புள்ளிமானும்,
குதிரை, நரி முதலிய விலங்குகள் உள்ளன. இக்காடு சதுப்பு நிலத்தில்
இருக்கிறது. ஆறுகளுக்கும் கடலுக்கும் இடைப்பட உப்பங்குழிகளில்
பூநாரை செங்கா, நாரை, வக்கா, கூழக்கடா, சிரவி, உல்லான் போன்ற
பறவை இனங்களை ஐப்பசி மாதம் முதல் தைமாதம் வரை காணலாம்.
இங்குள்ள காடுகளில் (type one para) ஒருவகைப்பறவை (Flamingo) கோடியக்கரைக்கு நவம்பர் முதல் ஏப்ரல் வரை ஆண்டுதோறும் வந்து செல்கிறது. இது சிவப்பு நிறமும், அழகிய தோற்றமும் கொண்டது. நான்கடி உயரம், நீண்டு சுருங்கிய கால்கள், குழாய் போன்ற வளைந்த கழத்து, ஆரஅமர உண்ணும் தன்மை, ஒற்றைக்காலில் நின்று கொண்டே உறங்கும் ஆற்றல் இத்தகைய இயல்புகள் நிறைந்தது. கோடியக்கரையில் கடலோரத்திலுள்ள நண்டு இனங்களில் சாறைக் குடிக்கவே இவை இங்கு வருகின்றன.
மாவட்டத்தின் முக்கிய ஊர்கள்:
ஆக்கூர்:
தரங்கம்பாடிக்குச் செல்லும் வழியில் இவ்வூர் இருக்கிறது. 'தான் தோன்றிமாடம்' என்பது இங்குள்ள கோயிலின் பெயர். சோழர்கள் திருப்பணி செய்திக்கின்றனர்.
கொள்ளிடம்:
காவிரியின் அதிகமான நீரை கொள்ளுவதால் 'கொள்ளிடம்' எனப்பட்டது. நறுமணப் பொருள்களும், தைலங்கள் செய்யவும், மாலைகளில் கட்டப்படும் 'வெட்டிவேர்' இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மகாராஜாபுரம்:
இவ்வூரிலிருந்தே மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், சந்தானம் போன்ற புகழ்பெற்ற பாடகர்கள் தமிழகத்திற்கு தெரியவந்தனர்.
சீர்காழி:
சீர்காழி |
தென்திருமுல்லைவாசல்:
சம்பந்தரால் பாடப்பெற்ற தலம். சீர்காழியிலிருந்து 15கி.மீ தொலைவில் உள்ள கடற்கரையூராகும். 1941 வரை துறைமுகநகராகவும் இருந்தது. ஆசிரியர் பயிற்சி பள்ளி
வைத்தீஸ்வரன் கோயில் |
வைத்தீஸ்வரன் கோயில்:
'புள்ளிருக்கும் வேளூர்' என்று இவ்வூரை தேவாரம் குறிப்பிடுகிறது. இக்கோயிலில் சிவனுக்குப்பெயர் வைத்தியநாதர். இங்குள்ள முருகனுக்கு, செல்வமுத்துக்குமாரசாமி என்று பெயர். செவ்வாய்க் கிரகமாகிய அங்காரகனுக்கு உரிய தலமாக இவ்வூர் உள்ளது. இக்கோயில் தருமபுர ஆதீனத்தின் கீழ் வருகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாகப்பட்டினம் - Nagapattinam - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இவ்வூர், நாகப்பட்டினம், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, இங்குள்ள, கோயில், சீர்காழி, வைத்தீஸ்வரன், இருக்கிறது, போன்ற, இங்கு, தமிழ்நாட்டுத், தகவல்கள், தேவாரம், | , districts, nagapattinam, கொள்ளிடம், information, வந்து, பெயர், புகழ்பெற்ற