மதுரை - தமிழக மாவட்டங்கள்
உமையாண்டவன் கோவில் :
திருப்பரங்குன்றத்தின் தென்பகுதியில் உள்ள இது குகைக் கோயிலாகும். இங்கு உமை யொருபாகன், பஞ்சமுக கணபதி, ஆறுமுகன், வயிரவர், நடராசர் திருவுருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இது பல்லவர் கலையைப் பின்பற்றி பாண்டியர் அமைத்த கோயிலாகும்.
காசி விசுவநாதர் கோவில் :
திருப்பரங்குன்றம் மலையுச்சியில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இக் கோவிலுக்கு அடிவாரத்திலுள்ள முருகன் கோவில் திருக்கைவேல் எடுத்துக் செல்லப்பட்டு விழா எடுக்கப்படுகிறது. இக்கோயிலின் அருகே காசிச் சுனை இருக்கிறது.
அம்மாட்சி அம்மன் கோவில் :
பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் கருவறையில் சங்கும் சக்கரமும் ஏந்திய துர்கைச் சிலை உள்ளது.
முத்தையா கோவில் :
நின்ற நிலையில் கையில் அரிவாளும் கதையும் ஏந்தி விளங்கும் இவிவிறைவனை சேரி வாழ்நர் வழிபடுகின்றனர்.
பிட்டு வாணிச்சியம்மன் கோயில் :
இக்கோவிலில் வழிப்படப் பெறும் சப்த கன்னிகைகளுக்கு இவ்வூரார் பிட்டு வாணிச்சி யம்மன் என்று பெயரிட்டுள்ளனர். திருவிளையாடற் புராணத்தில் சிவம்பெருமானுக்குப் பிட்டு அளித்த வாணிச்சி இப்பகுதியில் பிட்டு விற்றதாக வரலாறு. இன்றும் மதுரையில் நடைபெறும் பிட்டுத் திருவிழாவின் போது அமைக்கப்படும் மண்டபத்தின் ஒரு கால், கோச்சடை செட்டியார்களுக்கு உரியது. கோச்சடை நாட்டாண்மைக் காரருக்கு அவ்விழாவின் போது பரிவட்டம் கட்டப்படுகிறது. வைகை ஆற்றில் சிவபெருமான் குளிக்க, ஊற்று வெட்டும் உரிமை கோச்சடை செட்டியார்களுக்கே உரியது.
நாகர் கோயில் :
நாகர் கோயில் வைகைக் கரையில் அமைந்துள்ளது. இக்கோவில் முகமண்டபத்தில் எண்ணிடலங்கா நாகர் உருவங்கள் உள்ளன. மக்கட்பேறு இல்லாதவர்கள், அப்பேறு வேண்டி நேர்ந்து கொள்வதும், குழந்தை பிறந்த பிறகு நாகர் உருவத்தைப் பிரதிட்டை செய்வதும் வழக்கம். மதுரையில் பிராமணர்கள் கூட இம்மரபைப் பின்பற்றி வழிபடு கின்றனர்.
முத்தண்ணன் கோவில் :
மதுரையில் நாயக்கர் காலத்தில் குடியேறிய மறவர் குலத்து மக்கள், வேம்பு அரசு போன்ற மரங்களின் கீழ் முத்தண்ண சுவாமி வடிவத்தை அமைத்து வழிபடுகின்றனர். முத்தையா கோவில் பிரகாரத்தில் சன்னாசி, ஆதிபூசாரி, பேச்சியம்மன், முத்துக் கருப்பணசாமி, இருளப்பசாமி, வீரண்ணன் சாமி, இராக்காயி அம்மன், இருளாயி அம்மன், சப்பாணிச் சாமி, சேனைச் சாமி முதலிய தேவதைகள் சுடுமண்ணால் செய்யப் பட்டு வழிபடப்படுகின்றன. வனப்புமிகு சுடுமண் சிற்பங்களை இக்கோவிலில் கண்டு மகிழலாம். மூன்று மீட்டர் உயரமுள்ள நீண்ட குதிரை உருவத்தின் மீது கடுஞ்சீற்றத்துடன் முத்தையாவின் உருவம் காணப்படும். குதிரையின் பின்புறத்தில் அம்புகளும் வில்லும் காணப்படுகின்றன. இவை கிராமத் தெய்வங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.
முனியாண்டிக் கோவில் :
கிராமத் தெய்வமாக முனியாண்டியையும் இம்மாவட்டத்து மக்கள் பெரும்பாலோர் வழிபடுகின்றனர். முனியாண்டிக் கோவில் இல்லாத கிராமம் மிகச்சிலவே.
வாதபுரீசுவரர் கோவில் :
பழைமையும், எழிலார்ந்த தோற்றமும், அழகிய வேலைப்பாடும் கொண்டு பெரிய அள வினதாய் இக்கோயில் திகழ்கிறது. இக்கோயில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தான ஆட்சிக்குட்பட்டது. ஐந்தடுக்கு கோபுரம் கொண்ட இக்கோயிலின் உட்பகுதியில் சிற்ப வேலைப்பாடு கூடிய மண்டபம் இருக்கிறது. சைவ சமண வாதம் நிகழ்ந்த மண்டபம் இதுவே. இது மாணிக்கவாசரால் கட்டப்பட்டதென்றும், இம்மண்டபம் நூறு தூண்களைக் கொண்டதாக விளங்கியது என்றும் சொல்லப் படுகிறது. இக்கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை. ஆனால் சனி, ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று கடவுளருக்கும் தனித்தனிச் சந்நிதிகள் காணப்படுகின்றன. மாணிக்கவாசரது மூலத்திருவுருவமும் உற்சவ உருவமும் இக்கோவிலில் உள்ளன.
ஆவணி மூல விழாவுக்கு உற்சவ உருவ மாணிக்கவாசகர் மதுரைத் தலைநகர்க்கு எடுத்துச் செல்லப் படுகின்றார். நடராசருக்கு இக்கோவிலில் தனிச் சந்நிதி உண்டு. மார்கழி மாதத்தில் திருப்பள்ளி எழுச்சி சிறப்பாக நடைபெறுகிறது. இது திருவாதவூரில் அமைந்துள்ளது. இவ்வூரில் கண்ணொளி பெற மக்கள் வழிபடும் முழிச்சிப் பிள்ளையார் கோவிலும், திரெளபதி அம்மன் கோவிலும் உள்ளன. திரெளபதி அம்மன் தீமிதி விழா சிறப்பானதாகும். இது சங்கப்புலவர் கபிலரும், பாண்டியனின் தலைமை அமைச்சரான மாணிக்கவாசரும் பிறந்த ஊராகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கோவில், அம்மன், இக்கோவிலில், மதுரை, பிட்டு, நாகர், தமிழக, மாவட்டங்கள், tamilnadu, வழிபடுகின்றனர், சாமி, கோச்சடை, மதுரையில், மக்கள், கோயில், தகவல்கள், இக்கோவில், தமிழ்நாட்டுத், கிராமத், madurai, காணப்படுகின்றன, மூன்று, முனியாண்டிக், இக்கோயில், திரெளபதி, | , கோவிலும், உற்சவ, மண்டபம், districts, அமைந்துள்ளது, பின்பற்றி, விழா, முத்தையா, இக்கோயிலின், கோயிலாகும், வாணிச்சி, இருக்கிறது, உரியது, போது, information, பிறந்த