மதுரை - தமிழக மாவட்டங்கள்
அழகர் கோயிலில் கருடன் பறக்காது என்பது நம்பிக்கை. அழகர் மலைத்
தொடரின் இயற்கைச் சிறப்பினை நக்கீரர் திருமுருகாற்றுப் படையில்
விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். இம்மலைத்தொடரின் உயர்ந்த
பகுதியில் சமணத் துறவியார் வாழ்ந்த இடம் பஞ்ச பாண்டவர் படுக்கை
என்று வழங்குகிறது. புத்த, சைவ, வைணவப் பெருமக்கள் இம் மலையுடன்
நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இம்மலை மீது பல சுனைகள் உள்ளன.
அனுமார் தீர்த்தமும் நுபுரகங்கைத் தீர்த்தமும் உள்ளன. மூலவாவி என்னும் குளம் நாக்கீரர் உண்டாக்கியது. இதில் வேனிற்காலத்தில் நீர் மிகுந்தும், மாரிக் காலத்தில் நீர் குறைந்தும் இருக்கும். இவை தவிர, சரவணப் பெய்கை என்னும் தெப்பக்குளமும், சக்கரதீர்த்தமும் உள்ளன. அமாவாசை நாளில் அழகர் கோவிலுக்குத் திரளாக மக்கள் செல்கின்றனர். அழகர் கோவிலில் கள்ளர் ஒருவர் அறங்காவலராக இருப்பது மரபு. தேர்வடம் பிடிப்பவர்களாதலால் இவர்களுக்குப் பரிவட்டம் முதலியன கட்டும் மரபு திருவிழாக்களில் இருந்து வருகிறது. இங்குள்ள பதினெட்டாம்படி கறுப்பனசாமி கள்ளர் சமூகத்தார் வழிபடும் தெய்வங்களுள் தலைமையானது. இதற்கு உருவம் கிடையாது.
கோவில் பிரசாதமாக பெரிய அளவில் செய்யப்படும் நெய்தோசை பனையோலைப் பெட்டியில் வைத்து வழங்கப்படுகிறது. விமானத்துக்குப் பொன்தகடு போர்த்தி இக் கோவில் திருப்பணியைச் செய்தவர்கள் பாண்டிய மன்னர்கள். திருமலைநாயக்கர் கோயிலைச் சுற்றி கோட்டை, பள்ளியறை மண்டபம் முதலியவற்றைக் கட்டினார். இரண்டாம் நந்திவர்மப் பல்லவனின் தந்தையார் பெயரால் இரணியவர்மன் கோட்டை கட்டப்பட்டதென்பர். பரிபாடல், சிலப்பதிகாரம், திருப்புகழ், அழகர் அந்தாதி ஆகியவையும் இத்தலப் புகழைப் பாடியுள்ளன.
பழமுதிர்ச்சோலை:
![]() |
பழமுதிர்ச்சோலை |
செல்லத்தமன் கோவில் :
சிம்மக்கல்லுக்கு தெற்கே உள்ள இக்கோயிலைக் கண்ணகிக் கோவிலாகக் கருது கின்றனர். இக்கோவிலில் ஒற்றைச் சிலம்பை கையிலேந்திய நிலையில் கண்ணகி திருவுருவம் காணப்படுகின்றது.
மாரியம்மன் கோவில் :
வண்டியூரிலுள்ள மாரியம்மன் கோவிலும் கண்ணகி கோவில்தான். கண்ணகி மழைவளம் சுரக்கச் செய்த காரணம் கருதி, கண்ணகியை மாரியம்மன் என்றனர். ஆடிமாதத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நடக்கும் திருவிழாக்களுக்குப் பெண்கள் பெருங் கூட்டமாக இக்கோயிலுக்கு வருகின்றனர்.
சீனிவாசப் பெருமாள் கோவில் :
கல்லாக்குளத்தில் அமைந்துள்ள இக்கோயில் ஒரு புராதன வைணவக் கோவில். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புகழ் பெற்று விளங்கியது.
மதன கோபாலசாமி கோவில் :
நாயக்கர் ஆட்சியில் கட்டப்பட்ட இக்கோயில், மதுரையில் தெற்கு, மேற்கு மாசி வீதிகள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இதில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பதினாறு கால் மண்டபம் இருந்ததாகவும், அதிலிருந்த சிற்பங்கள் தற்போது அமெரிக்காவிலுள்ள பிலடல்பியா அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோவில், மேலே குறிப்பிட்ட மண்டபம் ஆகியனப் பற்றி பேரறிஞர் நார்மன் என்பவர் விரிவான நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கோவில், அழகர், தமிழக, மதுரை, tamilnadu, மாவட்டங்கள், முருகன், மண்டபம், பழமுதிர்ச்சோலை, கண்ணகி, தமிழ்நாட்டுத், மாரியம்மன், தகவல்கள், இக்கோயில், | , கோயில், அமைந்துள்ள, கோட்டை, இங்கு, மக்கள், தீர்த்தமும், information, districts, madurai, என்னும், இதில், மரபு, கள்ளர், நீர், உருவம்