கன்னியாகுமரி - தமிழக மாவட்டங்கள்
பழங்குடியினர்:
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியல், பெருஞ்சாணி, பேச்சிப்பாறை, வெள்ளாம்பி, கூவைக்கல், ஐந்து காணி என்னும் இடங்களில் 'காணிக்காரர்' மலையின் மக்கள் இருக்கின்றனர். இன்று ரப்பர் தோட்டங்களில் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். குக்கிராமங்களில் தங்கள் பழைய முறையிலான விவசாயம், வேட்டை போன்றவைகளை இன்றும் விடவில்லை. இவர்கள் தமிழ்தான் பேசுகின்றனர். 'கொக்கரை' என்ற இசைக் கருவியை நன்கு வாசிக்கின்றனர்.
இயற்கை வளங்கள்
கனிம வளம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு எங்குமே கிடைக்காத 'இல்மனைட்' மணலில் கிடைக்கிறது. இதிலிருந்து டிட்டானியம், ரூட்டைல், மோனசைட், சர்க்கான் போன்ற பிற கனிமங்கள் பெறப்படுகின்றன. இந்தக் கனிவளங்கள் மணலில் இருப்பதால் மணல் பொன்வண்ணமாக காட்சியளிக்கிறது. இது தவிர பலவித வண்ண மணல்கள் கன்னியாகுமரியில் கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இல்மனைட்டில் 8% கன்னியாகுமரியிலிருந்து கிடைக்கிறது.
இல்மனைட்டிலிருந்து டிட்டானியம் பிரித்தெடுக்கப்பட்டு டிட்டானியம் ஆக்ஸைடு வெடிமருந்து, வெள்ளை பெயின்ட் செய்ய பயன்படுகிறது. இதுதவிர கடைசல் வேலைக்கு டிட்டானியம் கலந்த எஃகு பயன்படுத்தப்படுகிறது. வர்ணங்கள் ஒளிகுன்றாமல் இருக்கவும், ரப்பர்களில் ஏற்படும் வெடிப்புகளைத் தவிர்க்கவும், பிளாஸ்டிக் பொருள்களில் பளபளப்பு ஏற்படுத்தவும், தாள் தயாரிப்பதற்கும் இது
பயன்படுகிறது. தமிழகத்தில்- இங்கு மட்டுமே கிடைக்கும் மோனாக்சைட்டில் 10 விழுக்காடு தோரியம் காணப்படுகிறது. இது அணுகுண்டு செய்ய பயன்படுவதால் பாதுகாக்கப்படுகிறது.
அதிக வெப்பத்தைத் தாங்கும் சர்க்கான், பீங்கான் எஃகு தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இத்தொழில்கள் இன்னும் பெருமளவில் வளராத காரணத்தால், இந்த வளத்தை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. உப்புத்தாள் தயாரிக்க உதவும் கார்னட் மணல் மண்டைக்காடு முதல் கடியபட்டினம் வரை காணப்படுகிறது. கல்குரியஸ் என்னும் கடினமான பாறை வகைகள் இம்மாவட்டத்தில் பல இடங்களில் கிடைக்கின்றன. இது தவிர கிராபைட், சுண்ணாம்புக் கல் போன்றவையும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இரவிப்புதூர், மருங்கூர் முதலிய ஊர்பகுதிகளில் இரும்பு கலந்த கற்களும், ஆரல்வாய் மொழியிலிருந்து வெள்ளமடம் வரை சுண்ணாம்புப் படிவங்களும் படிவுகளாக உள்ளன.
காட்டுவளம்:
நீலகிரி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிகளவு மலையினை கன்னியாகுமரி மாவட்டம் பெறுகிறது. இதனால் இங்கு காடுகள் செழித்துக் காணப்படுகின்றன. காடுகளின் மொத்த பரப்பளவு 449 ச.கி.மீ. ஆகும். இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 4000 அடி வரை செல்கிறது. இங்கு யானை, மான், மிளாவு என்ற மான் வகை, சிறுத்தை, புலி, கரடி, பன்றி, உடும்பு, குரங்கு, செந்நாய், நரி முதலிய விலங்குகள் காணப்படுகின்றன. இங்கு தேக்கு, மட்டிப்பால், முன்னிலவு போன்ற மரங்கள் வளர்கின்றன. 800 ஏக்கர் பரப்பளவில் தேக்கு மரங்களும், 600 ஏக்கர் பரப்பில் தீக்குச்சி மரங்களும், 15 ஏக்கர் பரப்பில் அரக்கு உற்பத்திற்காக பூவன்மரத் தோட்டங்களும் வளர்க்கப் படுகின்றன. பல மருத்துவ மூலிகைகள் மருத்துவ மலையில் காணப் படுகின்றன.
வேளாண்மை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 'நாஞ்சில் நாட்டில்' மட்டுமே நெல் விளைகிறது. மற்ற இடங்களில் மரவள்ளிக் கிழங்கு, வாழை, சோளம், உளுந்து, பயறு, பருப்பு ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. நாஞ்சில் நாட்டில், சம்பா, வால் சிறுமுண்டதும் என்ற இருவகை நெல் வகைகள் பாரம்பரியமாக விளைவிக்கப்பட்டு வருகின்றன. நெல்லுக்கு அடுத்து தென்னை 40,000 ஏக்கரில் பயிராகிறது. கன்னியாகுமரி முதல் தேங்காய்ப் பட்டினம் வரை தென்னை வளர்க்கப்படுகிறது. நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் தென்னை நாற்றுப்பண்ணை உள்ளது.
பனைமரம்- கல்குளம், விளவங்கோடு, வட்டங்களில் மிகுந்து காணப்படுகிறது. நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், பதநீர், பனை வெல்லம் போன்றவை பெறப்படுகின்றன. தோவாளை வட்டத்தில் ஆரல்வாய்மொழிப் பகுதியில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. ஊடுபயிராக நீண்ட இழைப் பருத்தி, மலைச்சாரல்களிலும் ரப்பர் தோட்டங்களிலும் பயிராகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கன்னியாகுமரி - Kanniyakumari - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கன்னியாகுமரி, டிட்டானியம், மாவட்டங்கள், tamilnadu, இங்கு, தமிழக, இடங்களில், காணப்படுகிறது, தென்னை, தமிழ்நாட்டுத், ஏக்கர், தகவல்கள், தேக்கு, மான், முதலிய, வகைகள், மரங்களும், காணப்படுகின்றன, நாட்டில், பயிராகிறது, பருத்தி, | , சாகுபடி, நெல், படுகின்றன, மருத்துவ, நாஞ்சில், பரப்பில், பயன்படுகிறது, மாவட்டத்தில், மணலில், கிடைக்கிறது, ரப்பர், என்னும், kanniyakumari, districts, information, சர்க்கான், போன்ற, கலந்த, எஃகு, பயன்படுத்தப்படுகிறது, செய்ய, கிடைக்கின்றன, பெறப்படுகின்றன, மணல், தவிர, மட்டுமே