கன்னியாகுமரி - தமிழக மாவட்டங்கள்
கைத்தறித் தொழில்:
குமரி மாவட்டத்தில் 2 இலட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 30 தறிகள் செயல்பட்டு வருகின்றன. கோட்டாறு, வடசேரி, இரணியல், மார்த்தாண்டம் முதலிய ஊர்கள் துணி நெசவுக்கு பேர் பெற்றவை. வடசேரியில் சாலியர்களும், கோட்டாற்றில் பட்டுநூல்காரரும் இத்தொழிலில் சிறந்துள்ளனர். திருப்பூருக்கு பிறகு குமரி மாவட்டமே கதர் உற்பத்தியில் சிறப்பிடம் பெறுகிறது. மீன்பிடி வலைகள்கூட கதர் நூலால் தயாரிக்கப்படுகின்றன. கையால் நுற்ற நுலைக் கொண்டு கதர் தேங்காய்ப்பூத் துண்டுகள் இம்மாவட்டத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
கூட்டுறவு நுற்பு ஆலை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழியில் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நுற்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்தத் துறையில் 24,960 கதிர்களும், 3588 முறுக்கு நூல் கதிர்களும், 960 கோன் வைண்டிங் உருளைகளும் உள்ளன. 20,40,60 எண்ணிக்கை கொண்ட நூல்கள் இங்கு தயாராகின்றன. ஆண்டொன்றுக்கு ரூ.6 கோடி விற்பனையாகிறது. இது தவிர இம்மாவட்டத்தில் "நாகம்மாள் பஞ்சாலை" என்பதும் செயல்பட்டு வருகிறது.
ஓடு செய்தல்:
கொட்டாரத்திலும், செட்டிக்குளத்திலும் ஓடு செய்யும் தொழில்சாலைகள் உள்ளன.
தேனீ வளர்ப்பு:
மார்த்தாண்டத்தில் தேனி வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் 1937 இல் தோற்றம் கொண்டது. சுமார் 80,000 பங்கு மூலதனத்துடன் தொடங்கி 1000 உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டது. தேனிக் குடும்ப எண்ணிக்கை 85,000 ஆகும். தேன் மெழுகு தயாரிப்பது இச்சங்கத்தின் துணைத் தொழிலாகும்.
பால் உற்பத்தி:
1949 முதல் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 4,41,725 லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர் சங்கங்களால் 8000 குடும்பத்தினர் பயனடைகின்றனர். 'கன்னியா மில்க்' பாலுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
பிற தொழில் ஊர்கள்:
ஆரல்வாய்மொழி: சோளம், கம்பு, கடலை, விளைச்சல் அதிகம். கீரைக்கு பெயர் பெற்றது. குழித்துறை: முந்திரி பருப்பு விற்பனையுள்ள ஊர். கோட்டாறு: மிளகாய், நெல் மண்டிகள் நிறைந்த ஊர். தோவாளை: முல்லை, பிச்சி, அரளி, மருக்கொழுந்துக்கு புகழ்பெற்றது.
தேங்காய்ப்பட்டினம்: தேங்காய், கயிறு, மீன்பிடி தொழிலுக்கு பேர் போனது.
நல்லூர்: பால், நெய், தயிர் உற்பத்தி.
புத்தேரி: மருத்துவமனை நிறைந்தது.
மிளகுமூடு: தையல் தொழில் பயிற்சி.
மயிலாடி: கல் சிற்பத் தொழில்.
முட்டம்: மீன், தவளை பாடம் பண்ணும் தொழில்.
வெள்ளமடம்: கால்நடை பண்ணை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கன்னியாகுமரி - Kanniyakumari - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கன்னியாகுமரி, தொழில், tamilnadu, செயல்பட்டு, தமிழக, மாவட்டங்கள், பால், கதர், பேர், வருகிறது, கூட்டுறவு, தமிழ்நாட்டுத், தகவல்கள், நுற்பு, கொண்டது, | , உற்பத்தி, இம்மாவட்டத்தில், எண்ணிக்கை, கதிர்களும், ஊர்கள், குமரி, information, districts, மாவட்டத்தில், இத்தொழிலில், மீன்பிடி, கோட்டாறு, kanniyakumari, தயாரிக்கப்படுகின்றன