ஈரோடு - தமிழக மாவட்டங்கள்
விவசாயம்:
மொத்த விவசாய பரப்பு 9 இலட்சம் ஏக்கர்; முக்கிய விளை பொருட்கள்: நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, சோளம், பருத்தி, புகையிலை, எள். விவசாயத் தொழிலாளர்கள்: 10,78,256 பேர்கள். மஞ்சள் சந்தை தமிழகத்திலேயே ஈரோட்டில்தான் நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்ட சந்தைகளும், கூடும் நாட்களும்:
மொடச்சூர் - சனிக்கிழமை
நம்பியூர் - ஞாயிறு
அந்தியூர் - திங்கள்
சத்தி - செவ்வாய்
சிறுவலூர் - செவ்வாய்
கவுந்தம்பாடி - புதன்
புஞ்சைப்புளியம்பட்டி - வியாழன்
குருமந்தூர் - வெள்ளி
வணிக வளர்ச்சி
தொழில்கள்:
பெருந்தொழில் நிறுவனங்கள் - 2; சிறு தொழிற்சாலைகள் 7,249. மற்றும் 1301 குடிசைத் தொழில்கள்
நடைபெறுகின்றன.
கைத்தறி:
நெசவுத் தொழில் பெருந்துறை, தாராபுரம், ஈரோடு, பவானி ஆகிய இடங்களில் நடக்கிறது. அந்தியூரில் மட்டும் 3000 விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் 5000 பேர் பணியாற்றுகின்றனர். இங்கு டையிங் பேக்டரிகள் அதிகமாக உள்ளன. சென்னிமலை, பவானி ஆகிய இடங்களில் ஜமுக்காளம், போர்வைகள், படுக்கை விரிப்புகளுக்கு புகழ்பெற்றது. கோபிச்செட்டிப் பாளையம், தாளவாடி,சத்தியமங்கலத்தில் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.
ஈரோடு:
இங்கு வேளாண்மைக் கருவிகள், இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில், தமிழ்நாடு சிறுதொழில் துறையினரால் நடத்தப்படுகிறது. இவை தவிர எண்ணெய், தோல், பருத்தி ஆலைத் தொழில் சிறப்பாக நடை பெறுகிறது. இதன் அருகில் முட்டையை பெளடராக்கி பேக்கிங் செய்யும் தொழில் ஏற்றுமதியில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. பாத்திரத் தொழிலும் நடந்து வருகிறது. ஈரோடு துணி மார்க்கெட்இந்திய அளவில் 5ஆம் இடம் பெறுகிறது. மாநிலத்தில் குழந்தைகள் இறப்பு வீதம் குறைவு. சிறு சேமிப்பு திட்டத்தில் 33.65 கோடி ரூபாயில் இம்மக்கள் முதலீடு செய்துள்ளனர்.
சர்க்கரை:
சத்திநகர், சித்தோடு, பெருந்துறை, கவுந்தபாடி முதலிய இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.
மரம் அறுப்பு:
சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையத்தில் மரம் அறுக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மீன்பிடிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடிப்பே நடந்து வருகிறது. காவிரி, பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகளில் அதிக அளவில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. தாலக்குளத்தில் மீன் குஞ்சுகள் விற்கப்படுகின்றன. பவானிசாகர் அணையிலும், உப்பாறு அணையிலும் மீன்பிடிப்பு சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு பிடிக்கப்படும் மீனுக்கு 'பவானிகெண்டை' என்றே பெயர் உள்ளது. ஏரி மீன்பிடிப்பில் ஓடத்துறை ஏரி, தலைக்குளம் ஏரியில் மீன்பிடிப்பு நடக்கிறது. இங்கு இறால் மீன் பக்குவப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகிறது. செம்படவ பாளையத்தில் கையினால் மீன்வலை பின்னும் நிலையம் ஒன்று உள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஈரோடு - Erode - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - ஈரோடு, தொழில், இங்கு, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, ஆகிய, இடங்களில், வருகிறது, மீன்பிடிப்பு, சிறப்பாக, பவானி, தகவல்கள், தமிழ்நாட்டுத், districts, நடந்து, பெறுகிறது, அளவில், erode, | , உள்ளது, அணையிலும், மீன், மரம், செய்யப்படுகிறது, பெருந்துறை, நடைபெறுகிறது, சிறு, தொழில்கள், பருத்தி, மஞ்சள், உற்பத்தி, நடக்கிறது, information, செவ்வாய்