ஈரோடு - தமிழக மாவட்டங்கள்
கல்வி:
பள்ளிகள்:
தொடக்க நிலை-1,455; நடுநிலை-185; உயர்நிலை-77; மேநிலை-52; கல்லூரிகள் - 8; தொழிற்கல்வி நிறுவனங்கள்-9, தொழிற்பயிற்சி நிறுவனங்கள்-1.
இயற்கை வளங்கள்
மலைவளம்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைகள்: தாளவாடி மலை, திம்பமலை, தல்ல மலை, தவளகிரி மலை, பவள மலை, பன்னாரி மலை, பெருமாள் மலை, பருவாச்சி மலை, பூனாட்சி மலை, அந்தியூர் மலை,வட்டமலை, சென்னிமலை,மலைப்பாளையம்மன் மலை, எழுமாத்தூர் மலை, எட்டிமலை, அருள்மலை, சிவகிரி மலை, அறச்சலூர் மலை, அரசன்னா மலை, திண்டல் மலை, விசயகிரி மலை, ஊராட்சி கோட்டை மலை ஆகியவையாகும்.
இம்மாவட்டத்தின் வடக்குப் பகுதி கர்நாடக பீடபூமியின் தொடர்ச்சியாயுள்ளது. இங்கு 900 மீ. முதல் 1700 மீ. உயரம் உள்ள மலைகள் காணப்படுகின்றன. இங்கு வரட்டுப்பள்ளம், வழுக்குப் பாறைப் பள்ளம், தென்வாரிப் பள்ளம், கோரைப் பள்ளம் போன்ற பல பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
காட்டுவளம்:
இம்மாவட்டத்தில் காடுகள் நிறைந்து காணப்படுகின்றன. காட்டின் மொத்தப் பரப்பளவு 2,42,953.28 ஹெக்டேர்களாகும். தமிழ்நாட்டிலுள்ள வனக் கோட்டங்களில் ஈரோடு மாவட்ட வனக் கோட்டமே மிகப் பெரியது. இவற்றை 4 ஆக பிரித்துள்ளனர். அவை: சத்தியமங்கலம் சரகம், தல்ல மலை சரகம், பர்கூர் சரகம், அந்தியூர் சரகம் ஆகியவையாகும். தமிழகத்தின் மொத்த சந்தனத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரோடுமாவட்டத்திலிருந்து கிடைக்கிறது. சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு அரசின் சந்தன மரக்கிடங்கு ஒன்று உள்ளது. மேட்டூர் சந்தன எண்ணெய்த் தொழிற்சாலைக்கு இங்கிருந்தே மரங்கள் செல்கின்றன. அந்தியூர், பர்கூர் மலைப் பகுதிகளில் தேக்கு மரங்களும், சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர்ப் பகுதிகளில் மூங்கில் மரமும் அதிகமாக வளர்கின்றன. இவை காகிதத் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இம்மாவட்டத்திலுள்ள காடுகளில் வேங்கை, கருங்காலி. ஈட்டி, மருது போன்ற பல்வேறு மரங்களும் காணப்படுகின்றன.
விலங்குகள்:
பவானி சாகர், தெங்க மராடா, மோயாறு, பன்னாரி ஹாசனுர் காட்டுப் பகுதிகளில் யானைகள் அதிகமாக வாழ்கின்றன. இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக கூறுகின்றனர். தல்லமலைப் பகுதிகளில் புலிகள் வசிக்கின்றன. இப்பகுதியில் காட்டு எருமை, முள்ளம் பன்றி, மான்கள் அதிகமாக உள்ளன.
காடுபடு பொருள்கள்:
குங்கிலியம், மட்டிப்பால், சிகைக்காய், தேன் கொம்பரக்கு, பட்டை வகைகளும், கடுக்காய், புங்கம் விதை ஆவாரம்பட்டை கொன்னைப் பட்டை ஆகியவையும், எருமை, மான் கொம்புகளும், யானைத் தந்தங்களும் சேகரிக்கப்படுகின்றன.
கனிவளம்:
இரும்பு - கீழ்பவானி அணை, தொப்பம்பாளையம், கரிகொட்டாம் பாளையம், பங்களாபுத்தூர் பகுதியின் வடக்கு மலைப்பகுதியில் கிடைக்கிறது.
தங்கம் - கோபிச்செட்டிப்பாளையம், எக்காத்தூர், ஊதியூர், எழுமாத்தூர்.
மைக்கா - வைரமங்கலம், குறிச்சி, புளியம்பட்டி, ஏரப்ப நாயக்கன் பாளையம்.
கருங்கற்கள் - பவானி பாலமலைப் பகுதி. இவை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆஸ்பெஸ்டாஸ் - பெருந்துறை, பர்கூர்.
ஜிப்சம் - தாராபுரம்.
படியூரில் பெரில்ஸ் என்னும் கடல்நிற வைரக்கற்களும், சிவன்மலை, சலங்கிப் பாளையம், சின்ன தாராபுரம் பகுதியில் உயர்தரக் கற்கள் கிடைக்கின்றன. குவார்ட்ஸ் எனப்படும் வெள்ளைக் கல்லும்,பெல்ஸ்பர் என்ற சிவப்புக் கல்லும் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஈரோடு - Erode - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - ஈரோடு, பகுதிகளில், tamilnadu, சரகம், மாவட்டங்கள், தமிழக, பகுதி, அந்தியூர், பள்ளம், கிடைக்கிறது, பாளையம், பர்கூர், தமிழ்நாட்டுத், தகவல்கள், காணப்படுகின்றன, அதிகமாக, தொழிற்சாலைக்கு, மரங்களும், யானைகள், தாராபுரம், கல்லும், | , பட்டை, எருமை, பவானி, சந்தன, இப்பகுதியில், கோபிச்செட்டிப்பாளையம், போன்ற, உள்ள, மலைகள், நிறுவனங்கள், information, erode, districts, தல்ல, பன்னாரி, இம்மாவட்டத்தில், வனக், இங்கு, ஆகியவையாகும், எழுமாத்தூர், சத்தியமங்கலம்