அரியலூர் - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | அரியலூர் |
பரப்பு : | 1949.31 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 7,54,894 (2011) |
எழுத்தறிவு : | 480,604 (71.34%) |
ஆண்கள் : | 374,703 |
பெண்கள் : | 380,191 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 389 |
வரலாறு :
அரியலூர் மாவட்டம் ஜனவரி 1, 2001-இல் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002 ல் அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பொருளாதாரத்தை காரணம் கூறி அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 ல் உருவாக்கப்பட்டது.
எல்லைகள் :
வடக்கில் கடலூர் மாவட்டத்தையும், கிழக்கில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களையும், தெற்கில் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களையும், மேற்கில் பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களையும் பெரம்பலூர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
பொது விபரங்கள் :
வருவாய் நிர்வாகம் :
கோட்டங்கள்-3 (அரியலூர், உடையார்பாளையம், செந்துறை); வருவாய் கிராமங்கள்-195.
உள்ளாட்சி நிறுவனங்கள் :
நகராட்சி-2 ; ஊராட்சி ஒன்றியம்-6 (ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், திருமானூர், த.பழூர், அரியலூர், செந்துறை); பேரூராட்சி-2, ஊராட்சிகள் : 201.
சட்டசபைத் தொகுதிகள் :
3 (அரியலூர், ஜெங்கொண்டம், ஆண்டிமடம்).
பாராளுமன்றத் தொகுதி :
1 (சிதம்பரம், பெரம்பலூர் பகுதியாக)
வழிபாட்டுத் தலங்கள் :
கங்கை கொண்ட சோழபுரம் :
கங்கை கொண்ட சோழபுரம் |
கங்கை கொண்ட சோழபுரம் கோயில் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை விடச் சற்று உயரம் குறைந்தது எனினும் கட்டிட அமைப்பில் நுணுக்கத்தில் மிகச் சிறந்தது. பல்வகை உறுப்புக்களைப் புதுமையாக அமைத்து இணைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் சிற்பங்களும் மிகச் சிறப்பாக விளங்குகின்றன. கங்கை கொண்ட சோழபுரத்திலும் விமானமே மிகவுயர்ந்ததாக விளங்குகிறது.
இதன் முன்னர் இருந்த மகாமண்டபத்தின் பெரும்பகுதி இழந்து போய், அதன் கற்கள் கீழணை கட்ட எடுத்துச் செல்லப்பட்டன. இப்போதுள்ள மண்டபம் பின்னர் சீர்செய்யப்பட்டது. இக்கோயிலைக் சுற்றி இரண்டு நிலைகளைக் கொண்ட திருச்சுற்று இருந்தது. அதன் ஒரு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது. கோயிலுக்கு முன் நின்ற கோபுரத்தின் ஒரு பகுதியே எஞ்சியுள்ளது. இக்கோயில் விமானம் தஞ்சையில் உள்ளதினின்றும் சற்று வேறுபட்ட அமைப்பை உடையது. இதன் கீழ்நிலை சதுரமாகவும், மேல்நிலைகள் எண் பட்டையாகவும், சிகரம் வட்டமாகவும் அமைக்கப் பெற்றுள்ளது. இதன் உயரம் 186 அடி ஆகும்.
தஞ்சை விமானத்தின் புறத்தோற்றத்தில் நேர்கோடுகள் அமைய, இதில் வளைகோடுகள் அமைகின்றன. விமானத்தின் மூலைகள் சிறிது உட்குழிவாகவும், பக்கங்கள் சற்று வளைந்து புறக்குழிவாகவும் உள்ளன. இங்குள்ள சிவலிங்கம் மிகவும் பெரியது. பெருவுடையார் என்ற பெயருக்கேற்ப அமைந்துள்ளது. கங்கை கொண்ட சோழபுரம் கோயிலிலுள்ள சிற்பங்கள் அழகில் ஒப்பற்றவையாக காணப்படுகின்றன. ஞானத்தின் உருவாய், கலைகளின் இருப்பிடமாய் பத்மாசனமிட்டு வெள்ளைத் தாமரை மீது அமர்ந்திருக்கும் கலைமகள் சிற்பம் மிகவும் அழகியதாய் அமைந்திருக்கிறது.
சிவபிரான் |
அடியான் சண்டிக்கு முடியிலே மலர்மாலை சூட்டி அருள்பாலிக்கும் சண்டீச்வர பிரசாத தேவராக காட்சியளிக்கும் சிவபிரானின் சிற்பமும் கண்ணைக் கவர்கிறது. இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போல், முகத்தில் தெய்வீகப் புன்னகையுடன் காலைத் தூக்கி கூத்தாடும் பெருமானின் அற்புதத் திருக்கோலம் அமைந்திருக்கிறது. அந்த அற்புதக் கூத்தனின் காலடியிலே எலும்பின் உருவாய் கையிலே தாளம் கொண்டு அமர்ந்திருக்கும் காரைக்கால் அம்மையார் சிற்பமும் சிறப்பாய் அமைந்திருக்கிறது. கங்கை கொண்ட சோழபுரம் தஞ்சாவூரிலிருந்து 71 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து வடக்கே 35 கி.மீ தொலைவிலும் உள்ளது.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரியலூர் - Ariyalur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கொண்ட, கங்கை, அரியலூர், சோழபுரம், பெரம்பலூர், சோழன், தமிழக, மாவட்டம், tamilnadu, மாவட்டங்கள், சற்று, இதன், மாவட்டங்களையும், இராஜேந்திர, தமிழ்நாட்டுத், அமைந்திருக்கிறது, தகவல்கள், மிகச், பகுதியே, உயரம், மிகவும், சிற்பமும், தொலைவிலும், | , அமர்ந்திருக்கும், உருவாய், சிகரம், விமானத்தின், தஞ்சை, எஞ்சியுள்ளது, ariyalur, மீண்டும், பின்னர், உருவாக்கப்பட்டது, மக்கள், districts, information, தமிழகத்தின், கடலூர், வடக்கே, கோயில், ஆண்டிமடம், செந்துறை, திருச்சி, வருவாய், பிறகு