தாய்லாந்தில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
மேலே குறிப்பிட்ட சொற்களில் தமிழில் இடம்பெறும் சில திராவிட சமஸ்கிருத மொழிச்
சொற்களும் உள்ளன. இவைதவிர தமிழ்நாட்டு மக்கள் இன்றும் கூட பொதுவாக சூடிக்கொள்ளும்
பெயர்கள் தாய்லாந்திலும் வழங்கப்படுகின்றன. இருண், வசந்தா, ரத்னாவலி, மணி, காஞ்சனா,
மாலவிகா, சக்தி, வாசுதேவ், பத்மாவதி, பிரியா, மான்சூலா, புசுபா, சாந்தி, சுசிலா,
வருணி, அருணி, குமார், சூர்யா, சந்திரா, ஸ்வர்ணா, ராசன், லக்ஷ்மி, மீனா, சுரேஷ்,
ரமேஷ், பிரேமா, சம்பா, கருணா, ராதா, கிருஷ்ணா, மனோஹர், சுகன்யா, பிரசாத் போன்ற
தமிழ்ப் பெயர்களை தாய்லாந்து மக்கள் சூடி வருகிறார்கள். பல்லவ, சோழப்
பண்பாட்டுத்தாக்கம், தமிழ் மொழித்தாக்கம், தமிழ்ப் பண்பாட்டுத் தாக்கம் தாய்லாந்தில்
ஆட்கொண்டிருந்ததால் இத்தமிழ்நாட்டுப் பெயர்கள் தாய்லாந்தில் பரவலாக வழங்கி
வருகின்றன.
தாய்லாந்தில் உள்ளூர் பெண்கள் ஆடும் நடனங்கள், மேஜிக் ஷோ, சர்க்கஸ் போன்ற பொழுது போக்கு அம்சங்கள் உண்டு. சிங்கப்பூர் வழியாகப் புதிதாக வரும் வீடியோ தமிழ்ப்படங்கள் 100 அல்லது 150 நாட்களுக்குள் தாய்லாந்துக்கு வருகின்றன. எல்லோரும் தமிழ்ப்படம் மட்டும் விரும்பிப் பார்ப்பார்கள். ஒரு தனிப்பட்ட ஹீரோ அல்லது ஹீரோயின் வழிபாடு கிடையாது. தனித்தமிழர் மன்றம் இல்லை. தமிழ் அச்சகம் கிடையாது. குமுதம், மங்கையர் மலர், சுமங்கலி, ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், தராசு, தினமணி, முதலிய தமிழ் இதழ்கள் சிங்கப்பூர் வழியாக வந்து தாய்லாந்தில் கிடைக்கின்றன.
தமிழர் சாதனை
இன்று தாய்லாந்து நாட்டிற்குப் போனால் அங்குத் தாய்லாந்து மக்கள் வாழ்க்கையில் தமிழ் பண்பாட்டின் தாக்கத்தை ஓரளவு மகிழ்ச்சியுடன் காணலாம். 15,16 ஆம் நூற்றாண்டு வரை தமிழர்கள் தாய்லாந்துடன் வாணிப உறவு வைத்திருந்தனர் என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத் தமிழர்களே முதன்முதலில் பாங்காக்கில் வைரம் முதலிய கல் வணிகம் தொடங்கினர். 1830 இல் குடியேறிய தமிழர் பலர் தமிழையும் தமிழ்ப் பெண்களையும் மறந்து வாழ்கின்றனர். தாய்லாந்தில் பல ஊர்களின் பெயர்கள் தமிழ்நாட்டுப் பெயர்களைத் தழுவியிருக்கின்றன.
உதாரணம் காஞ்சினபுரம், பத்தேயா, சகுந்தா, ஆரணியபிரதாப், சிதம்பராத், ராஜசிம்மா, சோழலங்காரா, பட்டாணி, ராமா, சூரதாணி, சாந்தபுரி, பதம்புரி, நந்தபுரி முதலியன. இந்த ஊர்களில் உள்ள வரலாற்றுச் சின்னங்களும் புதைபொருள்களும் கல்வெட்டுகளும் தமிழர்-தாய்லாந்து உறவைப்பற்றி மேலும் பல செய்திகளை அளிக்கலாம். தாய்லாந்தில் ஜப்பானியர் ஆட்சி நடந்தபோது மரண இரயில்வே பாலம் அமைக்க 10000 தமிழர்கள் சென்றார்கள். மோல்மினுக்கும் மேற்குத் தாய்லாந்து பகுதியான காஞ்சனபுரிக்கும் இடையில் இந்நாடுகளை இணைக்கும் 428 கி.மீ நீளமுள்ள இப்பாலம் 1948 இல் கைவிடப்பட்டது. இருந்தாலும் தற்காலத்திய தமிழர்கள் எழுப்பிய நினைவுச் சின்னமாய் இன்று தாய்லாந்தில் இருக்கின்றது. தாய்லாந்து தமிழர்களுக்கான சியாங்ராய்மணியம் என்பவர் தாய்-தமிழ் அகராதி ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார்.
வணிகம்/தொழில்
பாங்காக்கில் சிலம் ரோட்டில் தமிழ் முஸ்லீமான சதார் என்பவரின் 'சென்னை உணவகம்' இயங்குகிறது. சதார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படையில் சேர்ந்து இந்திய விடுதலைப் போரில் பங்கேற்றவர். இவரது சென்னை உணவகத்தில் தமிழ்நாட்டு உணவு வகைகள் அனைத்தும் கிடைக்கின்றன. சியாம் சாலையில் மற்றொரு தமிழ் முஸ்லீம் தமிழ்நாடு ரெஸ்டாரெண்டு என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் பாங்காக் சுகம் விட் சாலையிலுள்ள பாங்காக் பிரிந்தாவன் ஓட்டலில் தென் இந்திய உணவு கிடைக்கிறது.
தமிழரைச் தவிர பிற இந்தியரும் தாய்லாந்தில் இருக்கின்றனர். சுமார் 30,000 பிற இந்தியர் வசிக்கின்றனர். பெரும்பான்மையோர் சீக்கியர். அவர்களுக்கு அடுத்ததாகப் பிற வட இந்தியர் இருக்கின்றனர். இவர்களில் ஏராளமானோர் பாங்காக் பவுரத் பகுதியில் வாழ்கின்றனர். இப்பகுதி துணி வணிகத் தலமாக விளங்குகிறது. பிற இந்தியர் பெரும்பாலும் தங்கள் நாட்டுப் பெண்களையே திருமணம் செய்து கொள்கின்றனர். ஹோலி, தீபாவளி பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். இவர்கள் வாழும் பவுரத்தில் வாட்தான் நியூ ரோட்டில் விஷ்ணு கோயில் இருக்கின்றது. வட இந்தியர்களுக்கான இக்கோவிலுக்குத் தமிழர்களும் சென்று வருகிறார்கள்.
தொகுப்பு : ஜெ. சாந்தாராம்.
கட்டுரைக்கு உதவிய நூல்கள் :
1. தாய்லாந்தில் தமிழ்பண்பாட்டுக் கூறுகள் - முனைவர் எஸ். நாகராஜன் (1993)
2. தென்கிழக்கு ஆசியநாடுகளில் தமிழ்ப்பண்பாடு - டாக்டர் க.த. திருநாவுக்கரசு (1987)
3. அயல்நாடுகளில் தமிழர் (1989).ராஜன் (1993)
2. தென்கிழக்கு ஆசியநாடுகளில் தமிழ்ப்பண்பாடு - டாக்டர் க.த. திருநாவுக்கரசு (1987)
3. அயல்நாடுகளில் தமிழர் (1989).
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய்லாந்தில் தமிழர் - Tamils in Thailand - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தாய்லாந்தில், தமிழர், தமிழ், தாய்லாந்து, வாழும், நாடுகள், பெயர்கள், தமிழ்ப், தமிழர்கள், பாங்காக், இந்தியர், மக்கள், தகவல்கள், தமிழ்நாட்டுத், ரோட்டில், அயல்நாடுகளில், சதார், ஒன்றை, இருக்கின்றது, | , சென்னை, மேலும், உணவு, ஆசியநாடுகளில், வாழ்கின்றனர், இருக்கின்றனர், தமிழ்ப்பண்பாடு, டாக்டர், தென்கிழக்கு, திருநாவுக்கரசு, இந்திய, விகடன், countries, tamilnadu, information, living, persons, tamils, thailand, tamil, தமிழ்நாட்டு, வருகிறார்கள், கிடைக்கின்றன, இன்று, பாங்காக்கில், முதலிய, கிடையாது, வருகின்றன, சிங்கப்பூர், அல்லது, வணிகம்