தாய்லாந்தில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
விஜயதசமி அன்று சூரசம்ஹாரம் பண்ணி, சாமி ஊர்வலம் வருகின்றது. இரதத்தில் கடவுள்
விக்கிரங்களை வைத்து ஊர்வலம் வருகின்றனர். சீனரும் தாய்மக்களும் இவ்விழாவில் மிகுதி
யாகக் கலந்து கொள்கின்றனர். குறைந்தது 30,000 பேர் இவ்வூர் வலத்தில் கலந்து
கொள்கின்றனர். கோயிலிலும், உற்சவ வீதியுலாவிலும் தமிழிலேயே வழிபாட்டு மந்திரங்கள்
ஓதப் படுகின்றன.
கம்பராமாயணத்தின் செல்வாக்கு :
தாய்லாந்திலும் இராமாயணம் இருக்கின்றது. இது இராமாகீயான் என்ற பெயரில் இதிகாசமாகவும் காப்பியமாகவும் தாய்லாந்தில் தலைச்சிறந்து விளங்குகிறது. தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாட்டுத் தாக்கங்களைத் தாய் இராமாயணத்திலும் பார்க்கலாம். வால்மீகி இராமாயணத்தை விட கம்பராமாயணத்தின் நெருங்கியத் தொடர்பையே தாய் இராமாயணத்தில் பார்க்கலாம். 21 நிகழ்வுகளில் தாய், தமிழ் இராமாயணங்களிடையே ஒப்புமை இருக்கின்றது. ஆனால் 22 நிகழ்வுகளில் தாய், வால்மீகி (சமஸ்கிருத) இராமாயணங்களிடையே வேறுபாடுகள் உள்ளன.
சோழர் காலத்தில் புத்த கோயில் சுற்று மண்டபங்களில் இராமணயக் காட்சிக்குரிய ஓவியங்கள் கம்பராமயணத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டதாய் கூறுகின்றனர். தாய்லாந்தில் வழங்கும் மீகாலாக்கதை மணிமேகலைக் கதையைத் தழுவியிருக்கிறது. மேலும் தாய்லாந்து மயில் இராவணன் கதைக்கும் தமிழ்நாட்டு மயில் இராவணன் கதைக்கும் மிகுதியான ஒப்புமை இருக்கின்றது. தாய்லாந்தியரின் கோன் (khon) நாட்டிய நாடகம் இராமாயணக் கதை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது. இந்நாட்டிய நாடகம் தாய்லாந்தின் தேசிய நடனக்கலையாக உலகப் புகழைப்பெற்றுள்ளது. இதில் பெண்கள் இடம்பெற்று நடிப்பதில்லை. இந்நாடகத்திற்கு இசையே உயிராகக் கருதப்படுகிறது. இந்த நாட்டிய நாடகத்தைக் தொடங்குவதற்கு முன்னர் அரங்கில் நடராசர் சிலையை வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்வது தாய்லாந்து நாடக அரங்குகளில் இன்றும் காணப்படும் நிகழ்ச்சியாகும். தாய்லாந்து பொம்மலாட்டக் கலையிலும் இராமாயணக் கதை நிகழ்ச்சிகளே சிறப்பிடம் பெறுகின்றன.
தமிழ் மொழி
தாய்லாந்து மக்கள் பேசும் தாய்-மொழியில் கிழமை, "வாரம்" என்று வழங்கப்படுகிறது. இந்திய, தமிழ் முறைப்படியே ஒரு வாரத்திற்குரிய ஏழுநாட்களின் பெயர்களும் வழங்கி வரு கின்றன. மற்றும் இன்றைய பேச்சு வழக்கில் தமிழில் வழங்கும் சொற்கள் தாய்-மொழியில் ஏராளமாகத் திரிந்த நிலையில் வழங்கி வருகின்றன. எடுத்துக்காட்டுகள் கீழ் வருமாறு :
தமிழ் மொழி | தாய்-மொழி |
1. தங்கம் | தொங்கம் |
2. கப்பல் | கம்பன் |
3. மாலை | மாலே |
4. கிராம்பு | கிலாம்பு |
5. கிண்டி | கெண்டி |
6. அப்பா | பா |
7. தாத்தா | தா |
8. அம்மா | மே, தான்தா |
9. குரு | க்ரு |
10. ஆசிரியர் | ஆசான் |
11. பாட்டன் | பா, புட்டன் |
12. பிள்ளை | புத், புத்ரா |
13. வீதி | வீதி |
14. மூக்கு | சாமுக் |
15. நெற்றி | நெத்தர் |
16. கை | கை |
17. கால் | கா |
18. பால் | பன் |
19. சாதி | சாத் |
20. தொலைபேசி | தொரசாப் |
21. தொலைக்காட்சி | தொரதாட் |
22. குலம் | குல் |
23. நங்கை | நங் |
24. துவரை | துவா |
25. சிற்பம் | சில்பா |
26. நாழிகை | நாளிகா |
27. வானரம் | வானரா |
28. வேளை | வேளா(Time) |
29. மல்லி | மல்லி |
30. நெய் | நெய்யி |
31. கருணை | கருணா |
32. விநாடி | விநாடி |
33. பேய்/பிசாசு | பிச/பிசாத் |
34. கணம் | கணா(Moment) |
35. விதி | விதி |
36. போய் | பாய் |
37. சந்திரன் | சாந் |
38. ரோகம் | ரூகி |
39. தூக்கு | தூக் |
40. மாங்க் | மாங்காய் |
41. மேகம் | மேக்,மீக் |
42. பிரான், எம்பிரான் | பிரா |
43. யோனி | யூனி |
44. சிந்தனை | சிந்தனக்கம், சிந்தனா |
45. சங்கு | சான்க் |
46. தானம் | தார்ன் |
47. பிரேதம் | பிரீதி |
48. நகரம் | நகான் |
49. பார்வை | பார்வே |
50. ஆதித்தன் | ஆதித் |
51. உலகம் | லூகா |
52. மரியாதை | மார-யார்ட் |
53. தாது(Elements) | தாட் |
54. உலோகம் | லூகா |
55. குரோதம் | குரோதீ |
56. சாமி | சாமி (Husband) |
57. பார்யாள் | பார்யா (wife) |
58. திருவெம்பாவை | த்ரீயம்பவாய் |
59. திருப்பாவை | திரிபவாய் |
60. கங்கை | கோங்கா |
61. பட்டணம் | பட்டோம் |
62. ராஜா | ராஜ் |
63. ராணி | ராணி |
64. தர்மசாத்திரம் | தம்மசாட் |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய்லாந்தில் தமிழர் - Tamils in Thailand - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், தாய், தாய்லாந்தில், நாடுகள், தாய்லாந்து, வாழும், தமிழ், தமிழ்நாட்டுத், மொழி, இருக்கின்றது, தகவல்கள், கதைக்கும், இராவணன், மயில், வழங்கும், நாட்டிய, மொழியில், விதி, லூகா, ராணி, | , மல்லி, வீதி, இராமாயணக், அடிப்படையாகக், வழங்கி, நாடகம், பார்க்கலாம், countries, tamilnadu, information, living, persons, tamils, thailand, tamil, சாமி, ஊர்வலம், வால்மீகி, நிகழ்வுகளில், இராமாயணங்களிடையே, கம்பராமாயணத்தின், கொள்கின்றனர், வைத்து, கலந்து, ஒப்புமை