தாய்லாந்தில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
தாய்லாந்தில் சிவன், திருமால், பிரம்மா, உமை இலக்குமி முதலிய இந்து சமயத்
தெய்வங்களின் வெண்கலச் சிலைகளும் கிடைத்துள்ளன. அவை நேர்த்தியும் கீர்த்தியும்
வாய்ந்தவை. இவை
சோழர் காலத்திய (கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) கலைப்பாணிகள் நிறைந்தனவாக உள்ளன. மேலும்,
இன்று கூட, தாய்லாந்து அருங்காட்சியகத்தில் மிகுதியான சிவன், விஷ்ணு, கணேசர்
சிலைகளைக் காணலாம். தாய்லாந்து நாட்டின் நுண்கலைகள் துறையில் (Fine Arts Deptt.)
சிறப்பு அடையாளச் சின்னம் (emblem) கணேசர் ஆகும். சியாங் ரய்யில் ஒரு கணேசர் கோயில்
இருக்கின்றது. பழைய தமிழ்க் கோயில்கள் சியாங்ரய், சியாங்மை,
காஞ்சினபுரம், அயுத்யா, பாங்காக், பிகியூத் முதலிய பகுதிகளில் இருக்கின்றன.
பாங்காக்கில் உள்ள அரசருடைய கோயில் அழகு வாய்ந்தது. இதில் இராமாயணத்திலிருந்து பல காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப் பட்டுள்ளன. இந்து சமயப் புராணக் கதைகள் தாய்லாந்து ஓவியர்களுக்கும் சிற்பிகளுக்கும் எண்ணற்ற கருப்பொருள்களை எளிதில் கொடுத்துதவின. திருமால் கருடன் மீது அமர்ந்துள்ள கோலத்தில் பல சிற்பங்களும் சிலைகளும் அங்கு கிடைத்துள்ளன. காளை அமர்ந்து விளங்கும் சிவபெருமான் மற்றும் இந்திரன், யமன் முதலிய தெய்வங்களின் சிலைகளும் கோயில்களை அணி செய்கின்றன. சிவபெருமான் தோள் மீது புத்தர் அமர்ந்திருக்கும் கோலத்தில் ஒரு புதுமையான சிலையும் புத்தர் கோயிலில் காணப்படுகிறது.
மகாமாரியம்மன் கோவில் :
தாய்லாந்தில் தமிழர் கட்டிய கோயில்கள் பல உள்ளன. அவை முன்னூறு ஆண்டு காலத்திற்கு உட்பட்டனவாகும். அவற்றுள் சில பெருஞ்சிறப்பும் பெருஞ்செல்வமும் வாய்ந்த கோயில்களாகும். பாங்காக் நகரில் வாழ்வோரில் தமிழர்கள் ஒரு முக்கியப் பிரிவினராக (8000 பேர்) இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அண்மைக்காலத்துக்குரிய தமிழ்க் கோயில் பாங்காக்கில் சிலாம் சாலையிலுள்ள மாரியம்மன் கோவிலாகும். வைத்தி படையாட்சி என்பவர் இக்கோயிலைக் கட்டினார். 1888 ஆண்டு இக்கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்கோவில் முன்கோபுர முகப்பில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. "சிய்யாம் பெங்காக் 1888 யேப்பிரல் மாத செல்வ விநாயக மாரியம்மன் பாலதண்டாயுதபாணி கோவில் மண்டபம்...." சிங்கப்பூர் மகாமாரியம்மன் கோபுரம் எழுப்பிய தஞ்சைச் சிற்பி சிதம்பரநாதன் என்பவரே இதனையும் கட்டினார்.
முதலில் கரும்புத் தோட்டங்கள் இருந்த இடத்தில் ஒரு கூடார மண்டபத்தைக் (pavillion) கட்டினர். இதை மாரியம்மன் கூடார மண்டபம் என அழைத்தனர். அக்கூடார மண்டபத்தில் மாரியம்மனைப் பிரதிஷ்டைச் செய்தனர். இங்குத்தான் எல்லா இந்தியர்களும் 200 ஆண்டுகளுக்கு முன் வந்து தொழுதனர். தமிழர் தொகை மிகுதியானவுடன் இவ்விடத்தில் இப்போதிருக்கும் இக் கோவிலைக் கட்டினார்.
1955 ஆம் ஆண்டில் இக்கோயிலின் குடமுழுக்கு நடந்தது. இக்கோயிலில் இருக்கும் முதற்கடவுள் மாரியம்மன் ஆகும். ஆனாலும் சிவன், பிரம்மா, முருகன், கணேசர், சைவ நாயன்மார் விக்கிரகங்களும் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஐயனார், சப்தகன்னி, பேச்சாயி, அக்னி வீரன், பெரியாச்சி, மதுரை வீரன், காத்தவராயன் முதலிய சிறு தெய்வங்களின் சிலைகளும் உள்ளன. காத்தவராயனைக் காத்தலே என்று அழைக்கின்றனர். பலிபீடம் அருகில் சிவனுக்கு ஒரு கோயில் அமைந்துள்ளது. சிவனுக்கு எதிரே இராஜகோபுரமும் அதன் வலப் புறம் பிரம்மா கோயிலும் இருக்கின்றன. தாய்மக்கள் சிவனைப் பிராசிவா என்றும் கணேசரைப் பிராபுக்னேட் (ஷ்) என்றும் அழைக்கின்றனர்.
தொடக்கத்தில் தமிழ்ப்பண்டாரம் ஒருவர் இக்கோயிலின் அர்ச்சகராக இருந்தார். மலேசியாவிலுள்ள பினாங்கிலிருந்து வரவழைக்கப்பட்ட மூன்று குருக்கள் தற்சமயம் பணிபுரிகின்றனர். இக்கோவிலுக்கு வரும் பெரும்பான்மையான பக்தர்கள் தாய்மக்களும் சீனர்களும் ஆவர். பக்தர்கள் பக்தியுடன் அளிக்கும் பணம் முதலிய காணிக்கை களிலிருந்து தான் இந்தக் கோயில் ஆதரவுப் பெற்றுக் காப்பாற்றப் படுகின்றது. வேறுபாடின்றி மாரியம்மன் கோவிலில் பலவகை புத்த உருவச் சிற்பங்களை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்களில் நவராத்திரி, சிவராத்திரித் திருவிழா ஒன்பது நாட்கள் இக்கோவிலில் நடைபெறுகின்றன. காவடித் தூக்கல், அலகு குத்தல், தேர் தூக்கல் போன்ற பல்வேறு தமிழ்நாட்டுச் சமய வழிபாட்டு முறைகள் இக்கோவில் திருவிழாவின் போது பின்பற்றப்படுகின்றன. தாய்மக்கள் மாரியம்மன் முன் விழுந்து வணங்குகிறார்கள். மலேசியாவிலிருந்து சிலர் இக்கோவிலுக்கு
வந்து போவதுண்டு.
1988 முதல் சுமார் 1000 இலங்கைத் தமிழர்கள் தாய்லாந்திற்கு வந்திருக்கிறார்கள். இவர்களும் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை பஜனை நடக்கின்றது. தேவாரம், திருவாசகம், வடமொழி சுலோகங்களால் அமைந்த பஜனைப் பாடல்கள் பல இந்திய மொழிகளில் இருக்கின்றன. குறிப்பாகத் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிப் பாடல்கள் இருக்கின்றன. இப்பாடல்களையெல்லாம் தாய்மொழியில் மொழிபெயர்ப்புச் செய்து பஜனையில் பங்கு கொள்ள வரும் தாய்மக்களுக்கு வழங்குகின்றனர். கமலா என்பவர் தொடர்ந்து பலவருடங்களாக இப்பஜனையை நடத்துகின்றார். இவருக்குக் கண்தெரியாது. மேலும் இவர் பகவத் கீதை வகுப்பு ஒன்றையும் நடத்துகின்றார். கீதை அறிவு பரிமாற்ற மையம் (Gita knowledge Sharing Centre) எனும் மையத்தை இவர் நடத்துகின்றார். வட இந்தியர்களும் இவ்வகுப்புக்கு வருகின்றார்களாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய்லாந்தில் தமிழர் - Tamils in Thailand - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், மாரியம்மன், தாய்லாந்தில், கோயில், முதலிய, கணேசர், இருக்கின்றன, சிலைகளும், வாழும், நாடுகள், கட்டினார், தெய்வங்களின், வந்து, மேலும், தாய்லாந்து, நடத்துகின்றார், பிரம்மா, இக்கோவில், தகவல்கள், தமிழ்நாட்டுத், சிவன், இக்கோயிலின், முன், கீதை, கூடார, | , ", மண்டபம், இந்தியர்களும், இவர், வரும், பக்தர்கள், ஒவ்வொரு, தூக்கல், இக்கோவிலுக்கு, என்றும், அழைக்கின்றனர், சிவனுக்கு, தாய்மக்கள், பாடல்கள், வீரன், மீது, information, tamilnadu, திருமால், இந்து, கிடைத்துள்ளன, countries, living, tamils, thailand, tamil, persons, ஆகும், தமிழ்க், மகாமாரியம்மன், கோவில், ஆண்டு, தமிழர்கள், புத்தர், சிவபெருமான், கோயில்கள், பாங்காக், பாங்காக்கில், கோலத்தில், என்பவர்