தாய்லாந்தில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
தாய்மொழியில் Poet pratu sivaalai (சிவாலயத்தின் நுழைவாயிலைத் திறப்பது), Pit pratu
krlilaat (கைலாசத்தின் நுழைவாயிலை அடைப்பது), loripavai (லோரிப்பாவை) என்று
அழைக்கப்படும் பாடல்கள் முறையே சம்பந்தர் இயற்றிய திருமுறையில் உள்ள முதல் பதினாறு
பாடல்கள், சுந்தரர் இயற்றிய திருமுறையில் உள்ள முதல் பத்துப்பாடல்கள், அப்பர்
இயற்றிய நாலாவது திருமுறையில் உள்ள முதல் பத்துப் பாடல்கள், வைணவ ஆண்டாள் இயற்றிய
திருப்பாவை என்பன ஆகும்.
இன்று திருப்பாவை, திருவெம்பாவை திருவிழா தலைநகர் பாங்காக்கிலுள்ள பிராமணர் கோவிலில் டிசம்பர் கடைசி வாரத்திலிருந்து ஜனவரி முதல் வாரம் வரை 15 நாட்கள் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் தமிழ்ப் பாசுரங்களான திருப்பாவை, திருவெம்பாவை ஓதப்படுகின்றன. இவை பழந்தமிழ் பாடல்களாகவே தாய்லாந்து இசை வடிவத்தில் ஒலிக்கப்பட்டு வருகின்றன. சித்திரையில் தேவாரம், திருவாசகம் பாடல்களும் இவ்விதம் ஓதப்படுகின்றன. புத்தர் கோயில்களில் தாய் பிராமணர்கள் அந்தத் தமிழ்ப் பாடல்களை தவறாமல் சைவ-வைணவ நெறியொலிகளுடன் இசைப்பாக்களாகப் பாடி வரும் மரபும் வழக்கமும் இன்று வரை தொடர்கிறது. பாவைத் திருவிழா பாங்காக்கில் நடப்பதற்கு முன் தாய்லாந்தின் முன்னைய தலைநகரங் களாகிய ஆயுதத்திலும், சுயோதத்திலும், மற்றைய நகரங்களிலும், நகர ஜீதர்மராஜா என்ற இடத்திலும் நடந்தன என்பதனைக் காட்ட அவ்விடங்களில் ஊஞ்சல் கம்புகள் இன்றும் நின்று நிலவுகின்றன.
திருப்பாவை, திருவெம்பாவை விழாவின் போதும், மன்னர் முடிசூட்டுவிழா முதலிய சடங்குகளின் போதும் வழங்கும் மந்திரங்கள் ஓலைச் சுவடியில் முற்காலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. இந்தச் சுவடியை தமிழ்நாட்டிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மைக்ரோ பிள்ம் (micro-film) செய்து வாங்கி வைத்திருக்கின்றது. 418
பக்கமுள்ளதில் ஏறுக்குறைய 53 பக்க அளவு தமிழ்ப் பாடல்கள் நிறைந்துள்ளன.
தாய்லாந்தில் பிள்ளையார், சிவன், பெருமாள் மூவருக்கும் தனித்தனியே கோவில்கள் உள்ளன. இங்குள்ள பெருமாளின் பெயர் சுகோதயப் பெருமாள். சுகோதயம் என்பது தாய்லாந்தின் பெயர். சுகோதயம் என்றால் இன்ப விடியல் என்று பொருள். இக்கோயில் களில் வழிபாடு நடத்தி வைக்கும் தாய் பிராமணர்கள் அரசப் புரோகிதர்களாகப் பாராட்டப் பெறுகின்றார்கள். ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்று விழங்கும் பஞ்ச பிரம்ம மந்திரங்களின் பெயர்களையே தத்தம் பெயர்களாகக் கொண்டுள்ளனர். எனவே ஆகம வழக்கு தாய் லாந்தில் பரவியிருந்தது தெளிவாகின்றது. இப்புரோகிதர்கள் ஒரு காலத்தில் இராமநாதபுரத்திலிருந்து வந்து தாய்லாந்தில் குடியேறியவர்கள்.
தாய்லாந்தில் முன்பு ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் அறுவடை திருவிழாவாக திருவூசல் (ஊஞ்சல்) திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. தாய்லாந்து மக்களிடையே தீபாவளிப் பண்டிகை, கார்த்திகை விளக்கு வழிபாடு ஆகியன வழங்கி வருகிறது. கார்த்திகை மாதத்திலும் ஐப்பசி மாதத்திலும் வாழைத் தண்டை மிதக்க விட்டு, அதில் கொடி, காகிதக் குடை, புகை விளக்கு, பூ பொரி முதலியன வைத்து ஆற்றில் மிதக்க விடுவது தமிழ் நாட்டினரின் பழையதொரு வழக்கம். ஆற்றினைத் தாயாக வழிபடுவோர் இவ்வாறு வழிபடுவதை இன்றும் தமிழ்நாட்டில் காணலாம். வடநாட்டு கங்கையிலும் காணலாம்.
தாய்லாந்தில் அத்தகைய நீர்மாடங்கள் பற்பல விளக்குகளோடு கார்த்திகைத் திங்களில் மிதக்க விடப்படும். அரசர், முதலில் அணி செய்த படகொன்றை மிதக்க விடுவார். பொதுமக்களும் தங்களால் இயன்ற அளவு அழகு வேலைப்பாடுகள் அமைந்த மிதவைகளை மிதக்க விடுவர். ஆற்றுவிழா, கடல்விழா, அறுவடை திருநாள் போன்ற ஆடல் பாடல் இசை விழாக்களோடு பதினெட்டாம் பெருக்கும் தாய்லாந்தில் கொண்டாடப்பட்டு வருவதிலிருந்து அந்நாட்டின் கலாச்சார விழாக்கள் தமிழர் மூலம் பரவியுள்ளன என்று தெரிகிறது.
தாய்லாந்தில் ஸ்ரீதேவ் என்ற இடத்தில் செங்கல்லால் கட்டிய ஒரு வைணவக் கோயில் உள்ளதைக் கண்டுபிடித்துள்ளார்கள். அங்கேயுள்ள அரண்மனைகளிலும் கோயில்களிலும் இந்து மதத்தைச் சார்ந்த வைணவமும் சைவமும் பரவியிருந்தன என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. பௌத்த மதம் பின்னர் பரவியபோது அது மேலோங்கியது. சைவ, வைணவ விக்கிரங்கள் பௌத்தர் கோயிலுக்குள் புகுத்தன. தாய்லாந்தின் கிழக்குப் பகுதியில் திருமாலின் நின்ற கோலச்சிலை ஒன்று கிடைத்துள்ளது. அது பல்லவர் காலத்தில் (கி.பி 8-9 ஆம் நூற்றாண்டு) காஞ்சியில் செய்யப்பட்ட திருமாலின் திருமேனியைப் பெரிதும் ஒத்துள்ளது.
அங்குள்ள மற்றொரு இடிபாட்டின் தெற்குப் பகுதியில் புடைப்புச் சிற்பங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருமாலின் கிடந்த கோலச் சிற்பமும், கண்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடிக்கும் அற்புதக் காட்டுச்சிற்பமும், கவர்ச்சிமிகு புடைப்புச் சிற்பங்களாக விளங்குகின்றன. இவை மாமல்லபுரத்துக் குடைவரைக் கோயில்களில் வீறுடன் விளங்கும் கல்லோவியங்களைப் பெரிதும் ஒத்துள்ளன. மாமல்லப்புரத்துச் சிற்பங்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவற்றையொட்டி தாய்லாந்தின் சிற்பங்கள் அமைக்கப்பட்டிக்கலாம் என்பது சிம்மரின் கருத்தாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய்லாந்தில் தமிழர் - Tamils in Thailand - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தாய்லாந்தில், தமிழர், மிதக்க, பாடல்கள், திருப்பாவை, நாடுகள், தாய்லாந்தின், வாழும், இயற்றிய, உள்ள, வைணவ, தமிழ்ப், தாய், திருவிழா, திருவெம்பாவை, திருமுறையில், தமிழ்நாட்டுத், சிற்பங்கள், தகவல்கள், திருமாலின், வழிபாடு, பெருமாள், | , என்பது, பெயர், சுகோதயம், காலத்தில், அறுவடை, காணலாம், கார்த்திகை, பகுதியில், கொண்டாடப்பட்டு, புடைப்புச், விளக்கு, மாதத்திலும், ஓதப்படுகின்றன, countries, tamilnadu, information, living, persons, tamils, thailand, tamil, pratu, இன்று, ஊஞ்சல், இன்றும், போதும், பிராமணர்கள், கோயில்களில், நாட்கள், தாய்லாந்து, அளவு