தாய்லாந்தில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
இவ்வாணிபத்தால் சில செல்வந்தராகவும் மாறினர். பல தமிழர்கள் சிறுசிறு வாணிபங்களில்
ஈடுபட்டனர். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாங்காக் நகரம் அமைக்கப்பட்ட
காலத்தில் வாதேவமுனி எனும் தமிழர் அரசகுருவாகப் பணியாற்றினார். பழைய தாய்லாந்தில்
ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர் கள் வைத்திருந்த கம்பெனியில் தமிழர்கள் சேர்ந்து
பணியாற்றினார் கள். பொதுவாகப் பிள்ளை, செட்டியார், நாயுடு (நாட்டி), படையாட்சி,
வாண்டையார் சாதியைச் சேர்ந்த தமிழர்கள் தாய்லாந்தில் குடியேறினார்கள். இவர்களில்
பலர் உள்ளூர் தாய்லாந்து பெண்களையே திருமணம் செய்து கொண்டனர். இன்று மிகக் குறைவான
செட்டியார் குடும்பங்களே தாய்லாந்தில் இருக்கின்றன. இச்செட்டியார் சந்ததியினர் இன்று
பணம் வட்டிக்குக் கொடுப்பதில்லை, வாணிபம் செய்வதில்லை படித்துப் பட்டம் பெற்று
வேலைக்குப் போகின்றார்கள். இவர்களுக்கு இந்தியாவில் உறவினர் யாரும் இப்போது இல்லை.
இவர்கள் தமிழக சமயச் சடங்குகளைப் பின்பற்றுகின்றனர். அப்புராவ் எனும் தமிழர் ஓர்
பணக்காரர்.
யூனிசெம் எனும் மருந்து பொருள் தொழிற்சாலை வைத்திருக்கிறார்.
முன்பு தாய்லாந்து தமிழர்களில் செட்டியார்களின் கையே ஓங்கியிருந்தது. இவர்களது மூன்றாவது நான்காவது தமிழ்ப் பரம்பரையினர் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் இழந்து விட்டார்கள். இங்கு வளர்ந்த இளம்பரம்பரையினருக்குத் தமிழ் கற்றுத் தரவில்லை. முன்பு பல தமிழர்கள் கூலியாட்களாகத்தான் தாய்லாந்திற்கு வந்தார்கள். கடலை விற்பது, செய்தித்தாள்கள் போடுவது, காவலராய் பணிபுரிவது போன்ற தொழில்களைத்தான் செய்து வந்தார்கள். தாய்லாந்து அரசாங்கத்தின் கட்டாயக் கல்வி, இலவசக் தொடக்கக் கல்வி வாய்ப்புகள் மூலம் இத்தமிழர்களின் வாரிசுகளுக்குக் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்தது. வேலை வாய்ப்பு கிடைத்தது. சிலர் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர்களாகப் பணி புரிகின்றனர். இப்போது தாய் தமிழரின் இளம் பரம்பரையினர்களில் 50 சதவீதம் பேர்கள் கல்லூரிகளில் படித்தவர்களாக உள்ளனர்.
கல்லூரிகளில் படிக்காதவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாக இருக்கின்றது. படித்தவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய கம்பெனி களில் பணிபுரிகின்றனர். பாங்காக்கிலிருந்து 50 கி.மீ தொலைவில் ஆசியாவில் மிகப் பெரியதான ஆசியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி எனும் கல்லூரி உள்ளது. இங்கு 20 அல்லது 25 தமிழ்
மாணவர்கள் படிக்கின்றனர்.
பெரும்பான்மையான தமிழர்கள் வாணிபத்தில் ஈடுபட்டிருக்கின்றார் கள். சுமார் 1000 பேருக்கு மேல் ஏற்றுமதி-இறக்குமதி தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சிலர் சிறுதொழிற்சாலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அரசுத் துறைகளில் சுமார் ஒரு சதவீதம் தமிழர்கள் பணிபுரிகின்றனர். தமிழர்களுடைய வாரிசுகள் சிலர் உயர் பதவிகளில் உள்ளனர். இளம் பரம்பரையினர்களில் சுமார் 50 சதவீதத்தினர் அரசுத் துறைகளில் பணிபுரிகின்றனர். மீதி 50 சதவீதத்தினர் வாணிபம் செய்கின்றனர். படித்தவர்களில் பெரும் பான்மையோர் தாய்லாந்து நாட்டுக் குடிமக்களாக இருக்கின்றனர்.
தமிழ்-தாய் இன இளம்பரம்பரையினர்களின் உடை உணவுப் பழக்க வழக்கங்கள் தாய்லாந்து நாட்டு மக்களின் உடை உணவுப் பழக்கத்தைப் பின்பற்றியே இருக்கின்றன. பொதுவாகத் தாய்லாந்து மக்கள், தமிழ் மக்களிடையே உள்ள வேறுபாட்டைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கின்றது. வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தமிழ்வழி தாய் பரம்பரையினர் சாம்பார், ரசம், மோர், பாயசம், வடை, அப்பளம், பீன்ஸ் பொரியல், உப்புமா, இட்லி, அப்பம் போன்ற தமிழ்நாட்டு வகை உணவைத் விரும்பிச் சுவைக்கின்றனர். பண்டிகைகளின் போது சைவ உணவு மட்டும்தான் சாப்பிடுவர். வாழை இலையில்தான் (பைதாங்) அன்று சாப்பிடுவர். பொதுவாக இவர்கள் அசைவ உணவு அருந்துவர். பொங்கல் பண்டிகையில் இனிப்புசோறு (கவ்வான்) தயாரிப்பர். முன்பு பொங்கல் அன்று மாடுகளை அலங்கரித்து ஊர்வலம் செல்வர். காளைமாட்டை அடக்குபவர்களுக்குப் பரிசு கொடுப்பர். இன்று இம்மாதிரியான விளையாட்டு இல்லை.
புத்தாண்டு சிறப்பாகக் கொண்டாடப்படும். அன்று இளைஞர்கள் முதியோர்களை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வர். ஒவ்வொரு இந்திய தமிழ்ப் பரம்பரையினர் வீட்டிலும் தீபாவளி சிறப்பாக இரண்டு நாட்கள் கொண்டாடப்படும். தீபாவளியன்று கோவில்களுக்குச் சென்று தமிழ்ப்பாடல்களைப் பாடுவர். தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில்லை. தமிழ்ப் பெண்கள் புடவை கட்டுவதில்லை. தீபாவளி அன்று இந்தியாவிலிருந்து வரவழைக்கப் பட்ட கரையுள்ள வெள்ளை வேட்டியை (பார்கே தோதி) உடுத்துகின்றனர். கோவிலுக்குப் போகும் போது திருநீறு (தொனாறு) மற்றும் குங்குமம், சந்தனம் பூசிக் கொள்கின்றனர்.
தாய்-தமிழ் இளம்பரம்பரையினரில் 95 சதவீதத்தினர் தாய் புத்த சமய திருமணச்சடங்கு முறையையே பின்பற்றுகின்றனர். தமிழ்ப் பண்பாட்டை இழக்காத தமிழகப் பெற்றோர் உயிரோடு இருந்தால் திருமண விழாவின் போது சில இந்துச் சடங்குகள் உண்டு. ஆனால் மிக முக்கிய இந்து, தமிழ்ச் சடங்கு முறையான தாலி கட்டும் முறையை இன்று இவர்கள் பின்பற்றுவதில்லை. மணமகனும் மணமகளும் மோதிரம் மாற்றிக் கொள்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் வழக்கில் இருக்கும் பரிசம் போடுதல், சீதனம், வரதட்சணை அளித்தல் பண்பாடு தாய்லாந்து தமிழரிடையே இல்லை. மணமகன் மணமகள் குடும்பத்தினர் மணமகன், மணமகளுக்கு அன்பளிப்பு அளிப்பர். மிகுதியான இளம்பரம்பரையினர் எவரை வேண்டு மானாலும் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். பெரும்பாலும் தந்தை, தாய் அனுமதியுடன்தான் காதல் திருமணங்கள் நடக்கின்றன. இந்துக்கள் திருமணத்தைப் பெரும்பாலும் மாரியம்மன் கோவிலில் நடத்துவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய்லாந்தில் தமிழர் - Tamils in Thailand - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், தாய்லாந்து, தமிழ், தாய்லாந்தில், தமிழர்கள், தாய், தமிழ்ப், அன்று, எனும், நாடுகள், இன்று, வாழும், முன்பு, பெரும்பாலும், இவர்கள், இல்லை, வாய்ப்பு, கல்வி, பரம்பரையினர், சிலர், சுமார், சதவீதத்தினர், பணிபுரிகின்றனர், செய்து, தீபாவளி, கொள்கின்றனர், தமிழ்நாட்டுத், தகவல்கள், போது, மணமகன், இரண்டு, அல்லது, காதல், இருக்கின்றது, | , உள்ளனர், கொண்டாடப்படும், சாப்பிடுவர், உணவு, பொங்கல், அரசுத், துறைகளில், உணவுப், ஈடுபட்டுள்ளனர், வந்தார்கள், tamilnadu, information, பணியாற்றினார், செட்டியார், countries, living, tamils, thailand, tamil, persons, திருமணம், இருக்கின்றன, வேலை, இளம், பரம்பரையினர்களில், சதவீதம், கிடைத்தது, இங்கு, வாணிபம், இப்போது, பின்பற்றுகின்றனர், கல்லூரிகளில்