அந்தமானில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
அமைப்புக்கள் :
1. அந்தமான் தமிழர் சங்கம் போர்ட் பிளேயர்
2. தமிழர் சங்கம், மாயா பந்தர், டிக்லிபூர், லிட்டில் அந்தமான்
3. தமிழ்க் கல்விப் பாதுகாப்புக்குழு, போர்ட் பிளேயர்
4. அநிகார் தமிழ் எழுத்தாளர் பேரவை, போர்ட் பிளேயர்
5. கலை இலக்கிய மன்றம், விவேகானந்தபுரம்
6. தமிழ் இலக்கிய மன்றம், போர்ட் பிளேயர்
7. முத்தமிழ் இலக்கிய மன்றம், இரங்கத்
அந்தமான் தமிழர் சங்கம், தமிழ் இலக்கிய மன்றம் போன்ற அமைப்புகள் தமிழர்களின் இலக்கியப் பசியைக் களைவதில் பெரும் பங்காற்றி வருகின்றன. இதே போல ரெங்கத், மாயாபந்தர், டிக்லிட்பூர், கேமல் பே, கச்சால், வெம்பாலிர்கஞ் போன்ற இடங்களில் உள்ள தமிழ் அமைப்புக்கள் இனரீதியான மக்களை ஒருங்கிணைக்கவும் தமிழ் கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் பணியாற்றுகின்றன.
தமிழ் இலக்கிய விழாக்கள் நடத்துவதில் தமிழ் இலக்கிய மன்றத்தின் பணி குறிப்பிடத்தக்கதாகும். பாரதி-பாரதிதாசன் விழா, தமிழ்ப்புத்தாண்டு, முத்தமிழ்விழா, புலவர் விழா, சிலப்பதிகார விழா எனப் பல விழாக்களை அது நடத்தி வழிகாட்டியுள்ளது. இவ்விழாக்களில் குன்றக்குடி அடிகளார், பாவலர் பெருஞ்சித்திரனார், க.ப. அறவாணன், அவ்வை நடராசன், பேராசிரியர் தமிழ்க்குடிமகன், பேராசிரியர் வளனரசு, டாக்டர். ந. சஞ்சீவி போன்றோர் பங்கெடுத்துக் கொண்டு தீவு மக்களுக்கு இலக்கியச் சமய விருந்தளித்திருக்கிறார்கள்.
தமிழர் சாதனைகள்
இரண்டு தீக்குச்சி தயாரிக்கும் மர ஆலைகளைத் தமிழர்கள் நடத்தி வருகின்றனர். 4 திரையரங்குகளில் 2 தமிழர்களுடையது. இது தவிர வர்த்தக சங்கத் தலைவராக கந்தசாமி இருந்துள்ளார். இவரின் தந்தை கன்னியப்ப முதலியார் 1920-இல் மிடில் அந்தமானில் வியாபாரத்தைத் தொடங்கி இருக்கிறார். கந்தசாமி 'லாங் ஜலண்டில்' அண்ணாவுக்குச் சிலை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர். கே.ஆர். கணேஷ் அந்தமான் எம்.பியாகவும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். க. கந்தசாமி இன்று மக்கள் கட்சி தலைவராகவும், பிரதேசக்கவுன்சில் உறுப்பினராகவும் இருக்கிறார். பெரும் வணிகராக லிங்கவேல் இருக்கிறார்.
"தீவின் 44 ஊராட்சி மன்றங்களில் ஒரு தமிழர் மட்டுமே தலைவராக இருக்கிறார். போர்ட் பிளேயர் நகராட்சியில் 11 உறுப்பினர்களில் தமிழர் மூவர். ஒருவர் நியமன உறுப்பினர். இதுபோல முப்பதுபேர் கொண்ட பரிந்துரை மன்றத்தில் ஒரே ஒரு தமிழர் மட்டுமே உறுப்பினராகவும் பரிந்துரைஞராகவும் இருக்கிறார்" என்று சுப. சுப்பிரமணியம் 94-ம் ஆண்டு நிலவரத்தை விளக்குகிறார்.
94-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலவரத்தை பத்திரிக்கையாளர் முகவை முத்து விளக்குகிறார்: இப்போதைய நிலைப்படி போர்ட் பிளேயர் நகராட்சித் தலைவர் தமிழர். அமைச்சர் அந்தஸ்தில்
அதுகூட முதலமைச்சர் அந்தஸ்தில் தமிழர். மிகப்பெரிய அதிகாரிகளாக-மாவட்ட ஆட்சித் தலைவராகக் கூட தமிழர்.
பத்திரிக்கை ஆசிரியராக - ஆளுங்கட்சிக்காரராக தமிழர். பெரிய பெரிய வணிகராக தொழிலதிபராக தமிழர். சற்றேறக் குறைய தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும் இங்கே உண்டு. அந்தமான் தீவில் முதன்முதலாக கட்சிக் கொடிகட்டி அரசியல் கூட்டம் போட்டவன் தமிழன்தான். முதன் முதலாகப் போராட்ட நடத்தியவன் தமிழன் தான். முதல் துப்பாக்கிச் சூட்டுக்கு மூன்று பே உயிரை தியாகம் செய்தவனும் தமிழன். சரித்திரப் பிரசித்திப் பெற்ற செல்லுலார் சிறைச் சாலையில் (சுதந்திர இந்தியாவில்) முத முதல் சிறைவாசம் அனுபவித்த அரசியல் கைதி தமிழன்" என்கிறார்.
வணிகம்/தொழில் புரிவோர் விவரங்கள் :
தீவில் முன்பு குடியேறியவர்கள் அரசு ஊழியம் தேடிக் கொண்டவர்கள். இப்போதெல்லாம் பெரும்பாலும் தனியார் துறையில் தினக் கூலிகளாகவே பணியாற்றுகின்றனர். ஆனால் நல்ல ஊதியம் கிடைக்கிறது. 1970க்கு முன் தீவின் முக்கிய பொறுப்புக்களான வனத்துறை, கப்பல் போக்குவரத்து, காவல்துறை, நீதித்துறை, டாக்டர்கள் என பல பெரிய பொறுப்புகளைத் தமிழர்கள் வகித்தனர். இன்று எல்லா இடங்களிலும் வங்காளிகளும், வடஇந்தியருமே உள்ளனர். இருந்தபோதிலும் தீவின் பெரியதும் சிறியதுமான ஐம்பது விழுக்காட்டு வணிகத்தை தமிழர்களே செய்து வருவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்தே இருக்கிறது.
தமிழர்படும் இன்னல்கள் :
தமிழர்கள் தென் அந்தமானிலும், போர்ட் பிளையரிலும் பெருந்தொகையில் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழரின் தொகையைச் சிதரடிப்பதற்கும் பெரும் முயற்சி நடந்து வருகிறது. கிழக்கு வங்கப் பிரிவினைக்குப் பின்னர் வங்காளிகளின் கள்ளக் குடியேற்றம் நடந்து வருகிறது. பர்மா, இலங்கைத் தமிழர்களை அந்தமானில் குடியேற்றுங்கள் என்றால் வட இந்தியர் ஒப்புவதில்லை. 567 தீவுகளில் 38-இல் மட்டுமே மக்கள் குடியேறியுள்ளனர். மற்றவை காடாகவே இருக்கின்றன. மெல்ல, மெல்ல வங்காளியர் தொகை மட்டும் கூடிக்கொண்டே போகிறது.
தெற்கு அந்தமானில் தமிழர்களின் வீடுகளையும், விளை நிலங்களையும் வங்காளியர் சூறையாடி வருகின்றனர். சூறாவளிப்புயல் மழையில் தமிழர்களின் குடியிறுப்புக்கள் நாசம் செய்யப்பட்டன. மீண்டும் தீவு ஆட்சியாளரிடம் வீடுகட்ட இடம் கேட்டபோது அவர் சொன்னபதில்:
"உங்களுக்கு வீடுகட்ட இடம் வேண்டுமானால் கருணாநிதியிடம், எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்" என்று அன்றைய தீவின் துணை ஆளுனரே பேசியதாகக் கூறப்படுகிறது. ஆளுனரின் நிலையே இது வென்றால் மற்ற பொதுமக்கள் எப்படி இருப்பார்கள்?
தமிழரை இந்திக்காரன் 'ஐயாலோக்' (ஐயா என்று சொல்பவர்); 'கட்டாபானிவாலா' (ரசம் குடிப்பவன்) என்றும் 'ஹே ராவன்' என்றுதான் அழைப்பார்கள். இதுதான் வட இந்தியரின் மன நிலையாக இருக்கிறது.
- ப. திருநாவுக்கரசு
கட்டுரைக்கான ஆதார நூல்கள் :
1. அந்தமான் தீவில் தமிழர் நிலை - முகவை. முத்து.
2. உலகத் தமிழர் - பாகம் 2. இர.ந. வீரப்பன்.
3. பாரெல்லாம் பரந்த தமிழர் - சுப. சுப்பிரமணியம்.
4. இந்தியாவின் ஹவாய் - ஆனந்தவிகடன் 1974.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அந்தமானில் தமிழர் - Tamils in Andaman - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், தமிழ், போர்ட், அந்தமானில், அந்தமான், பிளேயர், இலக்கிய, இருக்கிறார், நாடுகள், வாழும், மன்றம், தீவின், பெரும், தமிழர்களின், கந்தசாமி, அரசியல், தீவில், பெரிய, மட்டுமே, வருகின்றனர், விழா, தமிழர்கள், தகவல்கள், சங்கம், தமிழ்நாட்டுத், andaman, tamils, tamil, அந்தஸ்தில், விளக்குகிறார், முகவை, முத்து, தமிழன், இருக்கிறது, வீடுகட்ட, இடம், | , வங்காளியர், மெல்ல, நடந்து, வருகிறது, நிலவரத்தை, living, பேராசிரியர், தீவு, tamilnadu, நடத்தி, information, அமைப்புக்கள், உள்ள, தலைவராக, countries, வணிகராக, ", persons, உறுப்பினராகவும், மக்கள், முக்கிய, இன்று, சுப்பிரமணியம்