சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 892
Word
English & Tamil Meaning (பொருள்)
கால்மட்டம்
kāl-maṭṭamn. <>id.+.Feeling the way with the feet, as a blind man or as in the dark;
கட்பார்வையின்றிக் காலால் தடவிநடக்கை. (J.)
கால்மடக்கு
kāl-maṭakkun. <>id.+.Club foot in which the heel is elevated and the foot bent or turned inward, Talipes equinovarus;
கடப்புக்கால். (M.L.)
கால்மர
-
த்தல்
kāl-mara-v. intr. <>id.+.To get benumbed, as the feet;
பாதம் உணர்ச்சியற்றுக் கட்டைபோலாதல்.
கால்மாடு
kāl-māṭun. <>id.+.1. Cattle as distinguished from mādu meaning gold;
பசு. இராஜராஜதேவர் கொடுத்த கால்மாட்டிலும் (S.I.I. ii, 2, 49).
2. A place near the foot of a bed, or of a person in bed;
காற்பக்கம். Colloq.
கால்மிதி
kāl-mitin. <>id. +.1. A pose of foot in dancing;
அடிவைப்பு.
2. Track, footmark, footprint;
அடிச்சுவடு.
3. Well staircase, steps cut for the feet inside the well;
அடிவைக்கும் வரை. Loc.
4. Door-mat;
காலிற்பட்ட தூசியைத்துடைத்துக்கொள்வதற்கு இடப்படும் தென்னைநார்த்தடுக்கு.
கால்முளை
-
த்தல்
kāl-muḷai-v. intr. <>id. +.To begin to walk, as a child;
குழந்தை நடைகற்கத்தொடங்குதல். Colloq.
கால்மெட்டிடுகை
kāl-meṭṭiṭukain. <>id. +.Putting a ring, mostly of silver, on the bridegroom's toe during marriage;
விவாகத்தில் மணமகன்கால்விரலில் மோதிரமிடுகை. Loc.
கால்மேசு
kā-mēcun. <>id. +. prob. T. mējōdu.Socks or stockings;
மேஜோடு. (J.)
கால்யா
-
த்தல்
kāl-yā-v. <>கால்5+. intr.To be close, crowded;
நெருங்குதல். கால்யாத்த பல்குடிகெழீஇ (பெரும்பாண். 399).-tr.
1.To conceal;
மறைத்தல். சொன்றி...வறைகால்யாத்தது (பெரும்பாண்.133).
2. To fill with water, as a channel;
தேக்குதல். நீர்கால்யாத்தல் (குறள், 1038, உரை.)
கால்வடம்
kāl-vaṭamn. <>கால்1+.Foot ornament strung with pearls;
காலணிவகை. திருக்கால்வட மொன்றிற் கோத்த )S.I.I. ii, 397, 205).
கால்வழி
kāl-vaḻin. <>id. +.1. Footpath;
ஒற்றையடிப்பாதை.
2. Footprint;
காற்சுவடு. யானைக்கால்வழி (புறநா. 368).
3. See கால்வாசி, 2.
.
4. Lineage, family;
வமிசம். நோய்பழியிலாததோர் கால்வழியில் வந்தவளுமாய் (அறப். சத.2).
கால்வளைவி
-
த்தல்
kāl-vaḷaivi-v. tr. <>id. +.Too bend, as the bow;
வளைத்தல், சிலைகால் வளைவித்து (திவ். பெரியதி, 8, 6, 4, ).
கால்வாங்கு
1
-
தல்
kāl-vāṅku-v. intr. <>id. +.1. To have the leg cut off;
காலைவெட்டுதல்.
2. To slip, slide;
கால்வழுக்குதல்.
3. To write the symbol '£' to denote the lengthening of certain vowel consonants in the Tamil alphabet;
உயிர்மெய் நெடில் பெரும்பாலவற்றில் நெடிற்குறியாகக் காலைவரைதல்.
கால்வாங்கு
2
-
தல்
kāl-vāṅku-v. intr.கால்5+.1. To retrace one's steps, withdraw;
பின்வாங்குதல். கண்ணநீரோடேயாய்த்துக் கால்வாங்குவது (திவ். திருமாலை, 15, வ்யா.).
2. To die;
இறத்தல். Colloq.
கால்வாசி
kāl-vācin. <>கால்1+.1. A fourth part, quarter;
நாலில் ஒருபங்கு.
2. Lit., the nature or quality of one's foot as gauged from the weal or woe that accompanies a person's first entry in any concern, the nature of one's entry in any concern on which its good or evil prospects are supposed to depend;
அடிவைத்தபலன். அவன் கால்வாசி நல்லது.
கால்வாய்
kāl-vāyn. <>id. +. [T. kāluva.]A channel branching from a river or tank, for irrigation;
வாய்க்கால் கால்வாய்த்தலையின் கண்கல் போலும் (பாரத முதற்போ.72).
கால்வாய்க்கோமாரி
kāl-vāy-k-kōmārin. <>id. + வாய் +.Disease that affects the foot and mouth of cattle, Eczema epizootica;
கால்நடையின் பாதம்வாய்களிற் காணும் கோமாரி நோய்வகை.
கால்வாயடுப்பு
kālvāy-aṭuppun. <>கால்வாய்+.A fire-place or oven in the form of a ditch, cooking trench;
காடியடுப்பு.
கால்வாயன்
kāl-vāyaṉn. <>கால்1+.One who cannot hold his own in a learned discussion; insufficiently educated person; a person of little knowledge and poor speech;
தெரிந்து பேசும் வன்மையற்றவன். Loc.
கால்விடு
1
-
தல்
kāl-viṭu-v. intr. <>id.+.1. To have the feet crippled;
கால்கள் செயலறுதல்.
2. To place a support, as to a falling roof;
முட்டுக்கொடுத்தல்.
3. To be removed some degrees in relationship;
தூரபந்துவாதல். (C.G.)
கால்விடு
2
-
தல்
kāl-viṭu-v.tr. <>கால்5+.To renounce or give up entirely, to forsake;
அறவொழித்தல்.
கால்விரல்
kāl-viraln. <>கால்1 + [M. kālviral.]Toe;
பாதத்துள்ள விரல்.
கால்விலங்கு
kāl-vilaṅkun. <>id.+.Fetters;
காலுக்கிடும் தளை.
கால்விழு
-
தல்
kāl-viḻu-v. intr. <>id. +.1. To decend, as rainclouds on the horizon;
மழைக்கால் இறங்குதல். கால்விழுந்தமேகம் மழைவெள்ளத்தைத் தரும். (பு.வெ. 9, 16, உரை.)
2. To shed rays of light;
ஒளிவீசுதல். நிலாக்கால் விழுந்தனைய(மீனாட்.பிள்ளைத்.ஊசற்.1).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 892 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், kāl, intr, foot, கால்1, person, த்தல், colloq, கால்வாசி, கால்5, place, nature, vāṅku, entry, concern, viṭu, கால்விடு, கால்வாய், கால்வாங்கு, திவ், steps, footprint, tamil, பெரும்பாண், cattle, channel, meaning