சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 862
Word
English & Tamil Meaning (பொருள்)
காதலவர்
kātalavarn. <>காதல்1.1. Wife, children, etc., as objects of one's affection;
அன்புக்குரிய மனைவிமக்கள் முதலியோர்.
2. Relatives;
சுற்றத்தார். கைம்மகவோடுங் காதலவரொடும் (பரிபா. 15, 47).
காதலன்
kātalaṉn. <>id. [K. kādal.]1. Lover, suitor;
அன்புள்ளவன். (பிங்.)
2. Husband;
கணவன். காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி (மணி. 2, 42).
3. Intimate friend, choice associate;
நண்பன். தீயின்காதலன் (கந்தபு. திருவவ.10).
4. Son;
மகன். அறத்தின் காதலன் (பாகவ. 1,6,1).
காதலான்
kātalāṉn. <>id.See காதலன். கரைகாணாக் காதலான் (கம்பரா. குகப். 26). காதலான் காதல்போல (சீவக. 1666).
.
காதலி
1
-
த்தல்
kātali-11 v. tr. <>id.1. Love, delight in; to be fond of, to be warmly attached to;
அன்புகூர்தல். காதலித் தாதுநா மென்னு மவாவினை (நாலடி, 181).
2. To long for, desire;
விரும்புதல். புராணந் தன்னைக் காதலித் தோதுவார் (கந்தபு. பாயி. நூற்பய.).
காதலி
2
kātalin. <>காதல்1.1. A beloved woman, sweetheart;
அன்புகொண்டவள்.
2. Wife;
மனைவி. காதலிதன்னொடு கைதொழுதெடுத்து (மணி. 13, 20).
3.Daughter;
மகள். காதலிதன் காதலனைக் கண்ணுற்றான் (நள. கலிநீ. 67).
காதலித்தவன்
kātalittavaṉn. <>காதலி-.See காதலித்தோன். (சூடா.)
.
காதலித்தோன்
kātalittōṉn. <>id.Friend, lover;
அன்பன். (பிங்.)
காதலோன்
kātalōṉn. <>காதல்1.1. Lover, husband;
தலைவன். தாம்வந்தனர்நங் காதலோரே (ஐங்குறு. 270).
2. Son;
மகன். (ஐங்குறு.)
காதவடி
kātavaṭin. <>காது1+அடி.See காதடி. Vul.
.
காதவம்
kātavamn.Banyan. See ஆல்1. (மூ.அ.)
.
காதற்பரத்தை
kātaṟ-parattain. <>காதல்1+.(Akap.) Woman of the courtezan class warmly attached to a hero and not residing in his quarters, dist. fr. iṟ-parattai;
சேரிப்பரத்தையின் மகளாய்த் தலைவனது காதற்குரிமை பூண்டு அவனையே சார்ந்திருப்பவள். (ஜங்குறு. 90, உரை.)
காதற்பாங்கன்
kātaṟ-pāṅkaṉn. <>id. +.Intimate friend of the hero;
தலைவனுக்கு உற்ற நண்பன். மன்னவன்றனக்குக் ... காதற்பாங்க னாதலின் (மணி, 28, 125).
காதற்பிள்ளை
kātaṟ-piḷḷain. <>id. +.Foster child;
அபிமானபுத்திரன். அரசர் காதற்பிள்ளையாய் (பெரியபு. தடுத்தாட்.6).
காதற்றமுறி
kātaṟṟa-muṟin. <>காது1 + அறு1 +.Cancelled bond written on a palmyra leaf;
செலுத்தற்குரியதைத் தீர்த்துக் கிழித்துவிட்ட ஓலைப்பத்திரம். (W.)
காதற்றோழி
kātaṟṟōḻin. <>காதல்1+.Confidante of a heroine;
தலைவியின் அன்புக்குரிய பாங்கி. (திருக்கோ. 50, அவ.)
காதறு
-
தல்
kātaṟu-v.intr. <>காது1+ அறு2-.1. To have the perforated lobe of the ear cut or torn;
காதின் துளை அறுதல்.
2. To becancelled, as a bond, by mutilation;
பத்திரம் தீர்க்கப்பெற்றுக் கிழிபடுதல்.
3. To snap, as the thong of a sandal;
செருப்பின் வாரறுதல். Loc.
4. To have the eye of a needle broken;
ஊசித்துளை முறிதல். காதற்ற வூசியும் வாராதுகாணும் (பட்டினத். திருப்பா. பொது. 10).
5. To have that part of the sling snapped from which the stone is generally thrown;
கவணிற் கல்வைக்கும் இடம் அற்றுப்போதல். காதறு கவண தேய்க்கும் (ஐங்குறு. பக். 143, பாட்டு, 1).
6. To become inimical;
பகைகொள்ளுதல். (யாழ். அக்.)
காதறு
-
த்தல்
kātaṟu-v. tr. <>id.+அறு2-.1. To rend the ear, as by tearing off the ear-rings;
காதின் துளையை அறுத்தல். காதறுத்த கூலி கைமேலே. (W.)
2. To cancel a bond, as by mutilating it;
பத்திரத்தை அறுதியாகத் தீர்த்துக் கிழித்துவிடுதல்.
காதறுப்பான்
kātaṟuppāṉn. <>id. +.A sore that appears around the ear;
காதைச் சுற்றி வரும் புண். (W.)
காதறை
kātaṟain. <>id. + அறு1-.1. One whose ear has been out off or mutilated;
காதறுபட்ட ஆள்.
2. Cavity of the ear;
காதுக்குழி.
காதறைகூதறை
kātaṟai-kūtaṟain.A disreputable woman;
ஒழுக்கங் கெட்டவள். Loc.
காதறைச்சி
kātaṟaiccin. <>id. + அறு2-.Quarreisome woman, as one who rends the ear;
சண்டைபிடிப்பவள். (யாழ்.அக.)
காதன்
kātaṉn. <>ghāta.Murderer;
கொலைசெய்பவன். (W.)
காதன்மை
kātaṉmain. <>காதல்1.1. Affection, attachment;
அன்பு. காதன்மை கந்தா (குறள், 507).
2. Desire;
ஆசை. காதன்மை கையல்லதன் கட்செயல் (குறள், 832).
காதா
kātān. <>U. khāta.Current account in a person's name; ledger;
பற்றுவரவுக்கணக்கு. (C.G.)
காதாங்கி
kātāṅkin.Indian guttapercha. See பாற்சொற்றிப்பாலை. (மலை.)
.
காதார
kātāraadv. <>காது1 + ஆர்1.1. With one's own ears;
தன்காதிற் பட. காதாரக் கேட்ட சாட்சி.
2. To the full satisfaction of the ears;
தன் செவிப்புலன் நிரம்ப. அவர் உபந்யாசத்தைக் காதாரக் கேட்டுக் களித்தேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 862 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காதல்1, காது1, woman, friend, அறு2, காதலி, காதறு, காதலான், bond, kātaṟ, ஐங்குறு, காதலன், lover, காதன்மை, அறு1, hero, kātaṟu, ears, காதாரக், குறள், யாழ், காதின், தீர்த்துக், காதலித், husband, intimate, பிங், அன்புக்குரிய, wife, affection, நண்பன், கந்தபு, attached, desire, warmly, த்தல், மகன், காதலித்தோன்