சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 859
Word
English & Tamil Meaning (பொருள்)
காணம்
2
kāṇamn. <>K. gāṇa.1. Oilpress;
செக்கு. (சூடா.)
2. A measure of capacity, as much as will fill an oil-press;
ஒரு செக்களவுகொண்ட முகத்தலளவை. (W.)
காணம்போடு
-
தல்
kāṇam-pōṭu-v. tr. <>காணம்2 +.1. To extract oil by an oil-press, as from coconuts, etc.;
செக்காட்டி எண்ணெய் எடுத்தல். காணம்போடுகிறதற்காகத் தேங்காய் உடைக்கிறார்கள்.
2. To eat frequently, as children;
அடிக்கடி தின்றுகொண்டே யிருத்தல். Loc.
காணல்
kāṇaln. <>காண்-.1. Beholding;
காண்கை. காணலுறுகின்றேன் (திவ். இயற். 4, 41).
2. Seeing with the mind's eye; thinking, considering;
மனத்தால் குறிக்கை. (சூடா.)
3. Reverencing, worshipping;
வணங்குகை. (உரி. நி.)
காணலன்
kāṇalaṉn. <>id. +. அல் neg.Enemy, as one whose sight is unbearable;
பகைவன். காணலற் செற்ற காளை (பாரத வேத்.20).
காணலிங்கம்
kāṇa-liṅkamn. <>gāṇa +.šiva-lingam established by the elestial hosts of šiva;
சிவகணங்களால் தாபிக்கப்பட்ட சிவலிங்கம். (சைவவி. 203.)
காணன்
kāṇaṉn. <>kāṇa.One-eyed man;
ஒற்றைக்கண்ணன். கூனன் காண னிருகண்ணுமில்லான் (சைவச ஆசாரி.10).
காணா
kāṇān.A small reptile;
சிறுபாம்பு.
காணாக்கடி
kāṇā-k-kaṭin. <>காண்-+ ஆ neg. +.1. Bite or sting of a reptile in the dark;
இன்னது கடித்ததென்று அறியமுடியாத விஷக்கடி. Colloq.
2. Bite of a reptile named kāṇā;
சிறு பாம்புக்கடி.
காணாக்கண்ணிடு
-
தல்
kāṇā-k-kaṇṇiṭu-v. tr. <>id.+<>id.+.To overlook, connive;
பார்த்தும் பாராததுபோலுதல். இவன்செய்த குறையைத் தான் காணாக்கண்ணிட்டிருக்கையன்றிக்கே (ஈடு, 6, 10, 10).
காணாக்காட்சி
kāṇā-k-kāṭcin. <>id. + id.+.A rare spectacle, wonderful sight, exhibition, as not seen before;
அற்புதக்காட்சி.
காணாக்கிரகணம்
kāṇā-k-kirakaṇamn. <>id.+<>id.+.Invisible eclipse;
பாதாளக்கிரகணம். (W.)
காணாக்கிரகம்
kāṇā-k-kirakamn. <>id.+ id.+ graha.See காணாக்கோள். (W.)
.
காணாக்கோல்
kāṇā-k-kōln. <>id.+id.+.Arrow shot unseen;
தெரியாதுவந்து தைக்கும் அம்பு. காணாக்கோலாகவந்து தைக்கிறபடி (திவ். இயற். திருவிருத்.75, வயா.).
காணாக்கோள்
kāṇā-k-kōḷn. <>id.+ id.+.Phenomena of the heavens, sometimes visible and sometimes not, opp. to kāṇuṅ-kōḷ. See கரந்துறைகோள்.
.
காணாசி
kāṇācin. <>காணியாட்சி. T. K. [kāṇāci.]See காணியாட்சி. (C.G.)
.
காணாத்தலம்
kāṇā-t-talamn. <>காண்-+ஆ neg.+.Private parts genitals, as kept concealed from view;
ஆண்பெண்குறிப்பொது. (W.)
காணாதம்
kāṇātamn. <>kāṇāda.(Phil.) The Vaišeṣika system of philosophy. See கணாதமதம்.
.
காணாபத்தியம்
kāṇāpattlyamn. <>gāṇapatya.See காணபத்தியம். Colloq.
.
காணார்
kāṇārn. <>காண்- + ஆ neg.1. cf. kāṇa. Blind men;
குருடர். காணார் கேளார் கான்முடப்பட்டோர் (மணி. 13, 111).
2. Enemies;
பகைவர்.
காணாவுயிர்
kāṇā-v-uyirn. <>id. + id.+.An insect too small to be seen;
நுண்ணிய உடம்புள்ள பிராணி. காணாவுயிர்க்குங் கையற்றேங்கி (மணி 3, 89).
காணி
1
kāṇin. <>id. [T.K.M. Tu. kāṇi.]1. The fraction 1/80;
ஓரெண். முந்திரிமேற் காணிமிகுவதேல் (நாலடி, 346).
2. A land measure = 100 kuḻi, or 1.32 acres nearly;
100 குழியளவுள்ள நிலம்.
3. cf. kṣōṇī. Land;
நிலம். ஊரிலேன் காணியில்லை (திவ். திருமாலை, 29).
4. Landed property, estate, possession;
காணியாட்சி. (W.)
5. Right of possession; hereditary right;
பரம்பரையுரிமை. மனுமுறைக் காணிவேந்தரை (சேதுபு. இராமதீ. 48).
6. A weight, = 1/40 of a macāṭi;
ஒரு மஞ்சாடிநிறை. (S.I.I. ii, 65, Ft.)
காணி
2
kāṇin. <>பொன்னாங்காணி.A plant growing in damp places. See பொன்னாங்காணி. (தைலவ. தைல.)
.
காணிக்கடன்
kāṇi-k-kaṭaṉn. <>காணி1+.Land-tax;
நிலவரி. இவ்வூர் இறை கட்டின காணிக்கடன் (S.I.I. iii, 35).
காணிக்காரன்
kāṇi-k-kāraṉn. <>id. + [M. kāṇikkāraṉ.]1. Hereditary proprietor of land, coparcener in village lands held in common;
கிராமப்பங்காளி. Loc.
2. A hill tribe in the Tinnevelly district and Travancore; one belonging to that tribe;
தென்பாண்டிநாட்டிலுள்ள ஒரு மலைச்சாதியான். (G.Tn. D. 7.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 859 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், kāṇā, காண், land, kāṇi, காணியாட்சி, reptile, kāṇa, திவ், காணிக்கடன், kāṇin, காணி, tribe, பொன்னாங்காணி, right, possession, நிலம், hereditary, காணார், colloq, இயற், press, measure, சூடா, sight, šiva, காணாக்கோள், gāṇa, bite, small, sometimes