சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 824
Word
English & Tamil Meaning (பொருள்)
கற்றோர்நவிற்சியணி
Kaṟṟōr-naviṟci-y-aṇin. <>கல் - +. (Rhet.)Figure of speech in which enhancement of merit is attributed to a seeming cause ;
குணமிகுதிக்குக் காரணமாகாததைக் காரணமாக்கிச் சொல்லும் அலங்காரம். (அணியி. 63.)
கற
-
த்தல்
kaṟa-12 v. tr. [K. M. kaṟa.]1. To milk ;
பால்கறத்தல். ஆவின்பாலைக் கறந்துகொண்டாட்டக்கண்டு (தேவா. 192, 3).
2. To yield milk, as a cow ;
பால்கொடுத்தல். இந்தப் பசு எத்தனைபடி கறக்கும்?
3. To misappropriate, as another's property; to extort ;
கவர்தல். எதிரி சொத்துக்களை யெல்லாம் கறந்துகொண்டான். Loc.
கறக்கு
-
தல்
kaṟakku-5 v. tr.1. To spin, as yarn ;
நூன்ழறுக்கேற்றுதல். பூணூல் கறக்கினான்.
2. To pinch, jerk so as to cause severe pain ;
நிமிண்டுதல். அவன் துடையைக் கறக்கினான். Loc.
கறகற
-
த்தல்
kaṟa-kaṟa-11 v. intr. Onom .1. To utter a rattling sound ;
ஒலித்தல்.
2. To crackle in the mouth, as a crisp cake ;
கடித்தற்கு நறுழறுவென்றிருத்தல். முறுக்குக் கறகறத்திருக்கிறது.
3. To irritate the throat, as phlegm ;
தொண்டையறுத்தல்.
கறகற
kaṟa-kaṟan. [T. karakara.] Onam.expr. signifying rattling sound ;
ஒர் ஒலிக்குறிப்பு. ஒருவன் கோல்பற்றிக் கறகறவிழுக்கை (தேவா. 1111, 5).
கறகறப்பு
kaṟa-kaṟappun. <>கறகற-.1. Reiterative sound, rattling ;
கறகறவென்று ஒலிக்கை.
2. Crispness ;
கடித்தற்கு நறுமுறுவென்றிருக்கை. தேங்குழல் கறகறப்பாயிருக்கிறது.
3. Rattling in the throat ;
தொண்டையறுப்பு.
4. Misunderstanding ;
மனஸ்தாபம். அவர்களுக்குள் கொஞ்சம் கறகறப்பு உண்டு. Loc.
5. Importuning, teasing ;
தொந்தரவுசெய்கை (w.)
கறங்கல்
kaṟaṅkaln. <>கறங்கு-.1. Sounding ;
ஒலிக்கை. (பிங்.)
2. Whirling ;
சுழற்சி. (பிங்.)
3. Devil, vampire ;
பேய். (அக.நி.)
4. Curved club, cudgel ;
வளைந்த தடி. (அக. நி.)
கறங்கு
1
-
தல்
kaṟaṅku-5 v. intr.1. To sound;
ஒலித்தல். முரசங் கறங்க (புறநா. 36, 12).
2. [M. karaṅṅu.] To whirl ;
சுழலுதல். பம்பரத்து ... கறங்கிய படிய (கந்தபு. திருநகரப். 28).
3. To sorround, overwhelm, envelop as darkness ;
சூழ்தல். கறங்கிருண் மாலைக்கும் (வள்ளுவமா. 34).
கறங்கு
2
kaṟaṅkun. <>கறங்கு-.1. Whirling, gyration ;
சுழற்சி. (திவா.)
2. Kite, wind-whirl ;
காற்றாடி. கான்முகமேற்ற ... கறங்கும் (கல்லா. கணபதி.).
3. Sound
சத்தம். (பிங்.)
கறங்கோலை
kaṟaṅkōlain. <>கறங்கு + ஓலை.Wind-whirl made of palmyra leaf ;
ஓலைக் காற்றாடி. கறங்கோலை கொள்ளிவட்டம் (திருமந். 2313).
கறடிகை
kaṟaṭikain. cf. கறண்டிகை.Component part of an ornament, as of a crown bracelet or anklet ;
ஒர் ஆபரணவுறுப்பு. முத்தின் சூடகமொன்றில் ... கறடிகை ஆறும் (S.I.I. ii, 211).
கறடு
kaṟaṭun. <>கரடு. [T. karāṭi.]Crude or inferior pearl ;
தாழ்தரமான முத்துவகை. ஒப்பு முத்துங் குறுமுத்துங் ... கறடும் நிம்பொளமும் (S.I.I. ii, 143).
கறண்டிகை
kaṟaṇṭikain. cf. கறடிகை.Component part of a crown ;
முடியுறுப்புள் ஒன்று. கறண்டிகையிற் கோத்த வடம் (S.I.I. ii, 90).
கறண்டிகைச்செப்பு
kaṟaṇṭīkai-c-ceppun. <>கரண்டகம் +.A chunam-box ;
சுண்ணாம்புக் கரண்டகம். (S.I.I. ii, 5.)
கறந்தமேனியாய்
kaṟanta-mēṉi-y-āyadv. <>கற-+.1. In a pure unadulterated condition, as fresh milk; in a pure state; guilelessly; innocently ;
வேறுகலப்பின்றிப் பரிசுத்தமாய்.
கறப்பற்று
kaṟa-p-paṟṟun. <>கறள் + பற்று.Formation of rust ;
துருப்பிடிக்கை. (J.)
கறப்பு
kaṟappun. <>கற-.Milking ;
கறக்கை .
கறம்
kaṟamn. <>கறு-. cf. khara.Severity, harshness ;
கொடுமை. கறம்படு மனத்தின் (திருவாலவா, 37, 51).
கறமன்
kaṟamaṉn.That which is withered and dried ;
காய்ந்து வறண்டது. (யாழ்.அக.)
கறல்
kaṟaln. [T. kaṟṟa.]Firewood, fuel ;
விறகு. (பிங்.)
கறவாத்தேனு
kaṟavā-t-tēṉun. <>கற- + ஆ neg. +.Intractable cow ;
உதைகாற் பசு. (பிங்.)
கறவு
kaṟavun. <>id. cf. kara.Tribute ;
கப்பம் கஞ்சன்கடியன் கறவெட்டு நாளி லென்கைவலத் தாதுமில்லை (திவ். பெரியதி. 10, 7, 10).
கறவை
kaṟavain. <>id. [K. kaṟāvu, M. kaṟavu.]1. Milking, as a cow ;
கறக்கை. பசுவின்கறவை நின்றுவிட்டது.
2. Milch cow ;
பாற்பசு. கறவைகள் பின்சென்று (திவ். திருப்பா. 28).
கறவைக்கலம்
kaṟavai-k-kalamn. <> கறவை +.Milk pail ;
பால்கறக்கும் பாத்திரம். (சீவக. 69, உரை.)
கறவையான்
kaṟavai-y-āṉn. <>id. + ஆன்.Milch cow
பாற்பசு. (w.)
கறள்
kaṟaln. <>கறு-. [K. kaṟal.]Rust, dross, stain ;
கறை. (J.)
கறளை
kaṟaḷain. cf. குறள்.1. Defect in stature, undersizedness ;
வளர்ச்சியின்மை.
2. Dwarf ;
குள்ளன்
3. Anything dwarfish, stunted in growth, as beast, fowl or tree ;
வளர்ச்சியற்றது. (w.)
4. [M. karaḷa.] Fruit not grown to full size ;
பருக்காத காய்.
5. Cystitis ;
கட்டிவகை. Loc.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 824 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், kaṟa, பிங், கறங்கு, rattling, milk, sound, கறடிகை, whirl, கறகற, கரண்டகம், part, கறண்டிகை, component, crown, கறக்கை, கறவை, milch, kaṟavai, திவ், kaṟaln, rust, milking, கறள், சுழற்சி, கடித்தற்கு, throat, ஒலித்தல், intr, தேவா, கறக்கினான், கறகறப்பு, kaṟappun, wind, காற்றாடி, த்தல், whirling, ஒலிக்கை, கறங்கோலை