சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 78
Word
English & Tamil Meaning (பொருள்)
அது
2
atupart.1. A gen. ending followed by a neut. sing., as in எனது முகம்;
ஆறாம் வேற்றுமையின் ஓர் உருபு. (நன். 300.)
2. An expletive suff.;
பகுதிப்பொருள் விகுதிகளுள் ஒன்று. உருவினுயிர் வடிவதுவு முணர்ந்திலர் (சி.சி.8,36.)
அதுக்கம்
atukkamn. <>அதுங்கு-.Reduced condition as of a boil;
அதுங்குகை.
அதுக்கு
1
-
தல்
atukku-5 v.tr. caus. of அதுங்கு- [K. adaku, M. atukkuka.]1. To press with the fingers, as a ripe fruit or boil;
அமுக்குதல்.
2. To squeeze, pinch, as the stomach in grief;
பிசைதல், அவ்வயி றதுக்கும் (திருவிளை. வன்னியுங். 41).
3. To bite, as one's lips;
கடித்தல். (கூர்மபு. தக்கன்வே. 32.)
4. To chew;
மெல்லுதல். வாயினிலதுக்கிப் பார்த்து (பெரியபு. கண்ணப்ப. 118).
5. To stuff into the mouth, like a monkey;
வாயிலடக்குதல்.
6. To slap with the hand, beat with a stick;
அடித்தல். தாளிற மூர்க்க ரதுக்கலின் (சீவக. 936).
அதுக்கு
2
atukkun. <>அதுங்கு-.State of being pressed in, as of parts of a vessel;
பாத்திரமுதலியவற்றின் அதுங்கல். Colloq.
அதுக்கெடு
-
த்தல்
atukkeṭu-v.intr. <>அதுக்கு+எடு.To mend a vessel, etc., parts of which have been pressed in;
பாத்திர முதலியவற்றின் அதுங்கலைச் சீர்ப்படுத்துதல். Colloq.
அதுகுபடி
atukupaṭin. <>T.atukubadi.Giving waste land to a cultivator at a low rate of assessment on condition of his cultivating it;
தரிசுநிலத்தைத் தாழ்ந்த வரியில் விவசாயத்துக்கு விடுகை. (W.G.)
அதுங்கு
-
தல்
atuṅku-5 v.intr.To be forced out or in by pressure, to be stuffed in, compressed;
அமுங்குதல்.
அதும்பு
-
தல்
atumpu-tal5 v.intr.To swarm;
மொய்த்தல். முரல்வண் டதும்புங் கொழுந்தேன் (திருவாச.6,36).
அதுலம்
atulamn. <>a-tula.1. That which is unequalled;
ஒப்பற்றது. அசங்க மதுலம் (கைவல்ய. சந்தே. 137).
2. A thousand quintillions;
ஒரு பேரெண். (W.)
அதுலன்
atulaṉn. <>id.One who is unequalled;
ஒப்பற்றவன். வான்மிசை யதுலன் (காஞ்சிப்பு. இரணீச. 5.)
அதெந்து
atentuint. [M. atentu.]'What is that?' as uttered by one in encouragement to dispel the fears of his dependant;
அது என்ன என்று அருளொடு கேட்டற் குறிப்பு. அதெந்துவே யென்றரு ளாயே (திருவாச. 29,1).
அதை
-
த்தல்
atai-11 v.intr.1. To swell, to be puffed up;
வீங்குதல். கால் அதைத்திருக்கிறது.
2. To grow arrogant, become proud;
செருக்குதல். இவனுக் கதைத்துப் போயிற்று. (W.)
3. To rebound, recoil;
தாக்கி மீளுதல். (R.)
அதைப்பு
ataippun. <>அதை-.1. Swelling;
வீக்கம்.
2. Dropsy;
நீர்க்கோப்பு.
3. Rebounding;
தாக்கி மீளல். (W.)
அதைரியம்
a-tairiyamn. <>a-dhairya.Want of fortitude, timidity, dispiritedness.
.
அதோ
atōint. [K. adō, M. atā.]Lo! behold!
சுட்டிக் கவனிக்கச்செய்தற் குறிப்பு. அங் கதோ வுள்கறுத் தழகிற் றேய்ந்தது (சீவக. 2679).
அதோகதி
atō-katin. <>adhas+.1. Low state, degraded condition;
தாழ்நிலை.
2. Hell;
நரகம். (பிங்.)
3. A hell, one of eḻu-narakam, q.v.;
எழு நரகத்தொன்று. (பிங்.)
அதோங்கம்
atōṅkamn. <>id.+aṅga.Part of the body below the waist;
அரையின் கீழ்ப்பட்ட அங்கப்பகுதி. (தைலவ. தைல. 54, உரை.)
அதோசாதி
atō-cātin. <>id.+.Low caste, inferior caste;
கீழ்க்குலம். அதோசாதி யகத்தி னருந்தினனும் (சிவதரு. பரி. 31).
அதோபாகம்
atō-pākamn. <>id.+.Lower part, bottom, foot;
அடிப்பக்கம். பிரமாண்டத் ததோபாகம் (சிவதரு. கோபுர. 30).
அதோமாயை
atō-māyain. <>id.+.Impure Māyā. See அசுத்தமாயை.
(சி. சி. 2, 80, சிவாக்.)
அதோமார்க்கம்
atō-mārkkamn. <>id.+.Lower path, as in religious worship;
தாழ்ந்தநெறி. (சி. சி. 2, 51, சிவாக்.)
அதோமுகசிரம்
atōmuka-ciramn.See அதோமுகம், 2.
(பரத. பாவ. 76.)
அதோமுகம்
atō-mukamn. <>id.+.1. The face that books downwards;
கீழ்நோக்கியமுகம். ஐந்துமுகத்தோ டதோமுகமும் (கந்தர்கலி. 78).
2. (Nāṭya.) Looking down with head bent, one of 14 muka-v-apinayam, q.v.;
தலைகுனிந்து பார்க்கை. (சது)
3. Inverted position;
தலை கீழான நிலை. அதோமுகமாகி...கொம்பர் நாலு மொருவனை (இரகு. சம்புக. 41).
4. Mouth of a river, confluence of a river with sea;
கடற் கழிமுகம். (பிங்.)
அதோமுகி
atō-mukin. cf. adhō-mukhī.Species of Trichodesma. See கவிழ்தும்பை.
(W.)
அதோலோகம்
atō-lōkamn. <>adhas+.Lower world;
கீழுலகம்.
அதோள்
atōḷadv. <>அ.There;
அவ்விடம். (தொல். எழுத். 398, உரை.) Obs.
அதோளி
atōḷiadv.See அதோள்.
(தொல். எழுத். 159, உரை.) Obs.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 78 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், intr, அதுங்கு, பிங், condition, lower, அதுக்கு, caste, part, சிவதரு, அதோசாதி, சிவாக், தொல், எழுத், அதோள், river, அதோமுகம், hell, குறிப்பு, state, pressed, சீவக, mouth, boil, parts, vessel, unequalled, தாக்கி, திருவாச, த்தல், colloq, adhas