சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 718
Word
English & Tamil Meaning (பொருள்)
கந்தவுத்தி
kanta-v-uttin. <>gandha + yukti.See கந்தவர்க்கம். கந்தவுத்தியினாற் செறித்தரைப்போர் (மணி. 28, 15).
.
கந்தழி
kantaḻin. <>skandha + அழி-.1. Supreme Being, Divine Essence;
பரம்பொருள். கொடி நிலை கந்தழி வள்ளி யென்ற . . . மூன்றும் (தொல். பொ. 88).
2. (Puṟap.) Theme of celebrating the destruction of Bana's fortress by Kṟṣṇa;
கண்ணன் வாணனது சோநகரத்தை அழித்ததைக் கூறும் புறத்துரை. (பு. வெ. 9, 40.)
கந்தளம்
kantaḷamn. [T. kattaḷamu.]Armour for the body, coat of mail;
கவசம். (பிங்.)
கந்தன்
1
kantaṉn. <>Pkt. Kanda <>Skanda.Skanda. the youngest son of šiva;
முருகக் கடவுள். (திவா.)
கந்தன்
2
kantaṉn. <>nir-granṭha.Arhat, who has conquered the senses;
அருகன். கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம் (சிலப். 11, 5).
கந்தன்
3
kantaṉn.1. A mineral poison, one of 32;
சீர்பந்த பாஷாணம். (மூ. அ.)
2. A prepared arsenic;
சூதபாஷாணம். (மூ. அ.)
3. A prepared arsenic;
சோரபாஷாணம். (சங். அக.)
கந்தன்பாட்டு
kantaṉ-pāṭṭun. <>skanda +.A kind of dance in masquerade;
ஒருவகை வரிக்கூத்து. (சிலப். 3. 13, உரை.)
கந்தனை
kantaṉain. prob. gandha-nākulī.Lesser Galangal. See சிற்றரத்தை. (தைலவ. தைல. 39.)
.
கந்தாசாரம்
kantācāramn. prob. கந்து + ஆசாரம்.Lease in which the lessor reveices one-fourth, and the lessee three-fourths, of the produce, each party paying half the kist;
காற்பாகம் மேல்வாரதாருக்கும் முக்காற்பாகம் குடிகட்குமாக ஒழங்கு செய்து இருவரும் சமபாகமாக வரி செலுத்தும் படி விடும் குத்தகை. (G, Sm. D. i, 242.)
கந்தாடை
kantāṭain.Name of a family of Brāhmans;
ஒரு பார்ப்பனக் குடி. வாதூலகோத்திரத்து . . . கந்தாடை வாசுதேவச்சதுர்வேதி (S.I.I. ii, 526).
கந்தாத்திரி
kantāttirin. cf. dhātrī.Emblic myrobalan. See நெல்லி. (மலை.)
.
கந்தாயம்
kantāyamn.1. Astrological period of four months;
வருஷத்தின் மூன்றில் ஒரு பாகம்.
2. Instalment
தவணை. இப்பொன் பத்தும் மூன்றுகந்தாயமாகத் தரக்கடவராகவும் (S.I.I. i, 104).
3. [T. kandāyamu, K. Tu. kandāya, M. kandāyam.] Assessement, kist paid in cash in a lump sum or by instalments;
தவணைப்படி செலுத்தும் வரி. (C.G.)
4. Profit, income from lands either in kind or in money;
ஆதாயம். (C.G.)
5. Harvest season;
அறுவடைக்காலம். (W.)
கந்தார்த்தம்
kantārttamn. perh. gandharva + artha.A kind of poem set to music;
ஓர் இசைப்பட்டு.
கந்தாரம்
1
kantāramn. prob. kāntara.A kind of intoxicating liquor;
மது. தெறிப்ப விளைந்த தீங்கந்தாரம் (புறநா. 258, 2).
கந்தாரம்
2
kantāramn. <>gāndhāra.A musical mode;
ஒரு பண். கந்தாரஞ்செய்து களிவண்டு முரன்றுபாட (சீவக. 1959).
கந்தாவகன்
kantāvakaṉn. <>gandha + ā-vaha.See கந்தவகன். கந்தாவகன் மொய்ம்புறு காளை (பாரத. நான்காம். 9).
.
கந்தானனசிரம்
kantāṉaṉa-ciramn. <>skanda + ānana +.(Nāṭya.) A gesture in dancing consisting in turning the head alternately, so as to be able to see forwards and backwards;
முன்னும் பின்னும் மாறிமாறிப் பார்க்கும் சிரவபிநயம். (பரத. பாவ. 76.)
கந்தி
-
த்தல்
kanti-11. v. intr. <>gandha.To waft a fragrant smell;
மணத்தல். தாதகித்தார் கந்தித்த மார்பன் (குலோத். கோ.291).
கந்தி
1
kantin. <>gandhin.1. Spices,aromatics;
வாசனைப்பொருள். குங்கும மேனையகந்திகள் கூட்டி (கந்தபு. அவைபுகு. 31).
2. Areca palm. See கழகு.
கந்திகள் . . . பாளைவிரித்து (கந்தபு. யுத்த முதனாட். 38).
கந்தி
2
kantin. prop. mr-granṭha. [K.kanti.]Female ascetic among the Jains;
ஆரியாங்கனை. கறந்தபாலனைய கந்தி (சீவக. 2649).
கந்தி
3
kantin. prop. gandhaka.1. Sulphur;
கந்தகம். (மூ. அ.)
2. A mineral poison, one of 32;
கந்தகபாஷாணம். (மூ. அ.)
கந்தி
4
kantin. <>T. kandi.Dhal. See துவரை. (இராசவைத்.)
.
கந்தி
5
kantin.Emerald;
மரகதம். (சங். அக.)
கந்திகை
kantikain. cf. vandaka.Beetlekiller. See சிறுதேக்கு. (தைலவ. தைல. 66.)
.
கந்தியுப்பு
kanti-y-uppun. <>gandhaka +.See கந்தகவுப்பு. (பார்த்த. 1100.)
.
கந்திரி
1
kantirin. <>U. kandūrī.A Muhammadan festival held in honour of a deceased holy person as the annual festival held at Nagore in honour of the saint Mīrān Sahib;
ஒரு முகம்மதியபண்டிகை. (G. Tj. D. i, 243.)
கந்திரி
2
kantirin. <>U. kamtarin.Beggar;
பிச்சைக்காரன். Madr.
கந்திருவர்
kantiruvarn. <>gandharva.See கந்தருவர். கந்திருவ ரங்காதரித் தின்னிசைபாட (அஷ்டப். திருவரங்கத்தந். 1).
.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 718 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கந்தி, kantin, kind, gandha, skanda, கந்தன், kanti, prob, kantaṉn, கந்தாவகன், சீவக, prop, festival, honour, kantirin, கந்திரி, kantāramn, gandhaka, கந்தபு, செலுத்தும், mineral, poison, சிலப், granṭha, கந்தழி, prepared, arsenic, gandharva, கந்தாடை, kist, தைலவ, கந்தாரம்