சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 605
Word
English & Tamil Meaning (பொருள்)
ஒல்லொல்லி
ollollin. Redupl. of ஒல்லி.Extreme thinness;
மிக்கவொல்லி.
ஒல்வழி
ol-vaḻiadv. ஒல்லு-+.1. In a suitable place;
பொருந்தியவிடத்து. ஒல்வழி யொற்றிடை மிகுதல் (தொல். எழுத். 114).
2. At the suitable time;
பொருந்தியகாலத்தில்.
ஒலரி
olarin. cf. ஒன்றி.A small fresh water cyprivoid fish, greenish, Amblypharyngodon melettina;
சிறுமீன் வகை.
ஒலி
1
-
தல்
oli-4 v. intr.To shoot forth; to be luxuriant; to prosper, thrive;
தழைத்தல். ஒலிந்த கூந்தல். (பதிற்றுப்.31, 24).
ஒலி
2
-
த்தல்
oli-11 v. intr.See ஒலி1-.
ஒலி1-. (புறநா. 137, 6.)
ஒலி
3
-
த்தல்
oli-11 v. [T. uliyu, K. uli, Tu. uri.] intr.1. To sound, as letter; to roar, as the ocean;
சத்தித்தல். ஒலித்தக்கா லென்னாமுவரி (குறள், 763).
2. To wash, as clothes; - tr. To remove, as dirt; to clean;
ஆடைவெளுத்தல். ஊரொலிக்கும் பெருவண்ணார் (பெரியபு. திருக் குறிப்புத்தொண்ட. 113). விளக்குதல். உதிர்துக ளுக்க நின்னாடையொலிப்ப (கலித். 81, 31).
ஒலி
olin. <>ஒலி3-. [T. alivu, K. uli, M. oli.]1. Sound, noise, roar; articulate sound;
ஓசை. (திவா.)
2. Thunder, thunderbolt;
இடி. (பிங்.)
3. Wind;
காற்று. (திவா.)
4. Word, speech;
சொல். நின் னுருவமு மொலியு மகாயத்துள (பரிபா. 4, 31).
5. Loud or audible recitation of a mantra;
பிறர்கேட்கச் செபிக்கை. (சைவச. பொது. 151, உரை.)
ஒலிக்குறிப்பு
oli-k-kuṟippun. <>ஒலி+.A symbol of a sound; onomatopoetic term, as
கலகலெனல்; அனுகரணவோசை.
ஒலிசை
olicain. perh. ஒலி1-.Presents given by the near relations of the bride to the bridgeroom on the fourth day of the marriage;
மணமகனுக்கு மணமகள் சுற்றத்தார் கல்யாணத்தின் நான்காநாளிற் கொடுக்கும் வரிசை. (W.)
ஒலிப்பு
olippun. <>ஒலி3-.Sonorousness, roar;
பெருஞ்சத்தம். சொன்கறை யொலிப்புடைமுனி (இரகு. இரகுவுற். 30).
ஒலிமுகம்
oli-mukamn.See ஒலிமுகவாசல்.
.
ஒலிமுகவாசல்
oli-muka-vācaln. prob. corr. of புலிமுகவாயில்.Outer gate of a city, fort or temple, where the guard is stationed;
நகரம் அல்லது கோயிலின் முன்புறவாயில். (விவிலி. 2, இரா. 7:17.)
ஒலிமுகவாயில்
oli-muka-vāyiln.See ஒலிமுகவாசல். (W.)
.
ஒலியந்தாதி
oli-y-antātin. <>ஒலி+.Poem of 30 stanzas of antāti type having 16 or 8 kalai to each line;
ஓரடிக்குப் பதினாறு அல்லது எட்டுக்கலைகள் தொடுத்த பல்சந்த வகுப்புக்கள் அந்தாதியாக முப்பது கூடிய தொரு பிரபந்தம். (வெண்பாப். செய். 13.)
ஒலியல்
1
oliyalan. <>ஒலி1-1. Luxuriance;
தழைக்கை. ஒலியற்கண்ணிப் புலிகடிமாஅல் (புறநா. 201, 15).
2. Shoot, sprout;
தளிர். (புறநா. 202, 10, உரை.)
3. Garland of flowers;
மாலை. மல்லிகை யொலியல் சூடினார் (சீவக. 2682).
4. Chaplet of flowers;
வளையமாலை. கண்ணி யொலியன்மாலையொடு பொலியச் சூடி (புறநா. 76, 7).
5. Fly whisk;
ஈயோட்டுங்கருவி. ஒலியலுங் கவரியும் புரள (திருவிளை. நரிபரி. 40).
ஒலியல்
2
oliyaln. <>ஒலி3-.1. Cloth, garment;
ஆடை. (பிங்.)
2. Skin, hide;
தோல். (பிங்.)
3. Street;
தெரு. (பிங்.)
4. River;
நதி. அவ்வொலியற் கொப்பாகுவதோ வுவராழியதே (கந்தபு. காளிந்தி. 6).
ஒலியலந்தாதி
oliyal-antātin. <>ஒலி+.See ஒலியந்தாதி. (வெண்பாப். செய். 13, உரை.)
.
ஒலியன்
oliyaṉn. <>ஒலியல்.Cloth;
ஆடை. (கோயிலொ. 88.)
ஒலியெழுத்து
oli-y-eḻuttun. <>ஒலி4+.(Gram.) An articulate sound considered as a symbol of a certain state of consciousness, dist. fr.
வடிவெழுத்து; ஒலிவடிவான எழுத்து. (நன். 256, மயிலை.)
ஒலியொலியென்றொலி
-
த்தல்
oli-y-oliy-eṉṟoli-v. intr. <>ஒலி2-+.To yield abundantly;
மிக்கபயன் தருதல். மரம் ஒலியொலியென்றொலிக்கிறது. (W.)
ஒலிவடிவு
oli-vaṭivun. <>ஒலி+. (Gram.)The sound-configuration of an articulate sound, dist. fr. வரிவடிவு;
எழுத்துக்குள்ள சத்தரூபமான வடிவம். (நன். 89, விருத்.)
ஒலிவு
olivun. <>Lat. oliva.European Olive, s. tr., Olea europaea;
ஒருவகை மரம்.
ஒலுகு
olukun. prob. ஒல்கு-.Bolster, cushion for the back of a chair;
திண்டு. Loc.
ஒலுங்கு
oluṅkun. <>உலங்கு1. Big mosquito;
பெருங்கொசுகு.
ஒலோவு
-
தல்
olōvu-5 v. intr. <>lōpa.To be wanting, deficient, lacking;
குறைவாதல். கீறுமுடை கோவணமிலாமையி லொலோவிய தவத்தர் (தேவா. 413, 10).
ஒவ்வாப்பக்கம்
ovvā-p-pakkamn. <>ஒ-+ஆ neg.+.(Log.) Strained or forced comparison; incongruity;
தர்க்கத்தில் பொருந்தாத பக்ஷம். (W.)
ஒவ்வாமை
ovvāmain. <>id.+id.1. Unlikeness, inequality;
ஒப்பாகாமை.
2. Discord, disagreement;
இசையாமை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 605 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், sound, intr, புறநா, ஒலி1, பிங், ஒலியல், ஒலிமுகவாசல், ஒலி3, articulate, roar, த்தல், மரம், செய், வெண்பாப், dist, flowers, cloth, gram, antātin, symbol, shoot, suitable, ஒல்வழி, திவா, word, அல்லது, prob, muka, ஒலியந்தாதி