சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 568
Word
English & Tamil Meaning (பொருள்)
ஏழாங்கடைசி
ēḻ-āṅ-kaṭaicin. <>ஏழ்+ஆம்+.Harvest festival, regarded as the last of the seven processes of cultivation, the master going in procession with torches and drums to his house, followed by the labourers, where they prostrate themselves before him and receive each a marakkāl of paddy,
அறுவடைக்காலத்தின்முடிவிலேசெய்யுங் கொண்டாட்டம்.
ஏழாங்காப்பு
ēḻ-āṅ-kāppun. <>id.+.Bracelets or anklets of a particular pattern, of copper and silver wire twisted together, put on the legs of a baby on the seventh day after birth, as an amulet;
குழந்தை பிறந்த ஏழாநாளில் அணியுங் காப்பு. Loc.
ஏழாங்காய்விளையாட்டு
ēḻāṅ-kāy-viḷai-yāṭṭun. <>id.+.An indoor game played by girls. See ஈரி1. (W.)
.
ஏழாங்கால்
ēḻ-āṅ-kāln. <>id.+.The first post for erecting the marriage shed planted seven days before the date of the wedding;
விவாகத்துக்கு ஏழுநாளின்முன்பு நடும் பந்தற்கால். (W.)
ஏழாநாட்காப்பு
ēḻā-nāṭ-kāppun. <>id.+.See ஏழாங்காப்பு.
.
ஏழிசை
ēḻ-icain. <>id.+.The seven notes of the diatonic scale, viz.,
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்; சத்தசுரம். (திவா.)
ஏழிசையெழுத்துக்கள்
ēḻ-icai-y-eḻut-tukkaḷn. <>id.+.The seven long vowels of the alphabet significative of the seven notes of the diatonic scale;
சத்தசுரங்களின் குறியீடாக வழங்கும் ஏழு தெட்டுயிர். (திவா.)
ஏழிசைவாணர்
ēḻ-icai-vāṇarn. <>id.+.Gandharvas, noted for their superb music;
கந்தருவர். ஏழிசை வாணருஞ் சித்தரும் (சேதுபு. விதூம. 4).
ஏழில்
ēḻ-iln. <>id.+ இல்.1. Music, as consisting of seven notes;
இசை. ஏழி லியம்ப வியம்பும்வெண் சங்கெங்கும் (திருவாச. 7, 8).
2. Name of a hill which belonged to Nannan, an ancient chief of the Tamil country;
நன்னன் என்னுந் தலைவனது மலை. நன்னனேழினெடுவரை (அகநா. 152).
ஏழிலைக்கிழங்கு
ēḻ-ilai-k-kiḻaṅkun. <>id.+.Topioca, whose leaves divide at the top into several forks. See மரவள்ளி.
.
ஏழிலைப்பாலை
ēḻ-ilai-p-pālain. <>id.+.Seven-leafed milk plant, m.tr., Alstonia scholaris;
மரவகை. (L.)
ஏழிலைம்பாலை
ēḻilai-m-pālain. <>id.+. [M. ēlilampāla.]See எழிலைப்பாலை.
பூத்த வேழிலைபாலையைப் பொடிப்பொடி யாகத் தேய்த்த (கம்பரா. வரைக். 6).
ஏழு
ēḻun. [T. ēdu, K. M. ēḻu, Tu, eḷu.]The number seven;
எ என்னும் எண்.
ஏழுதீவு
ēḻu-tīvun. <>ஏழு+.The seven ring-shaped continents accg. to Hindu mythology. See எழுதீவு.
.
ஏழுநரகம்
ēḻu-narakamn. <>id.+.See எழுநரகம்.
.
ஏழுபெண்பருவம்
ēḻu-peṇ-paruvamn. <>id.+.The seven well defined stages of a woman's life, viz.,
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்; பெண் மக்கட்குரிய எழுவகைப்பருவம். (திவா.)
ஏழுலகம்
ēḻ-ulakamn. <>ஏழ்+.The seven worlds, either the celestial seven or the subterranean seven;
மேலேழுகம் அல்லது கீழேழுலகம்.
ஏழை
ēḻain. cf. எளிமை.1. Foolish, silly person; one of weak intellect;
அறிவிலா-ன்-ள். ஏமுற்றவரினு மேழை (குறள், 873).
2. Ignorance, simplicity; harmlessness; mental weakness;
அறியாமை. ஏழைத்தன்மையோவில்லை தோழி (கலித். 55, 23, உரை).
3. Woman;
பெண். எருதேறி யேழையுடனே (தேவா. 1171, 2).
4. Indigent person, poor wretch, helpless fellow;
தரித்திரன். (சூடா.)
ஏழைக்குறும்பு
ēḻai-k-kuṟumpun. <>ஏழை+.Mischief perpetrated under an exterior cloak of simplicity;
பேதைபோலக் காட்டிச் செய்யும் குறும்பு.
ஏழைச்சனங்கள்
ēḻai-c-caṉaṅkaḷn. <>id.+.The poor;
எளியோர்.
ஏழைத்தன்மை
ēḻai-t-taṉmain. <>id.+.1. State of ignorance;
அறியாமையாகிய குணம். ஏழைத்தன்மையோ வில்லை தோழி (கலித். 55, 23).
2. State of poverty;
வறுமைநிலை.
ஏழைமை
ēḻaimain. <>ஏழை.1. Ignorance, simplicity;
அறியாமை. (தொல். பொ. 274.)
2. Poverty;
வறுமை.
ஏழைமைகாட்டு
-
தல்
ēḻaimai-kāṭṭu-v. intr. <>ஏழைமை+.To be timid, cowardly, effeminate;
கோழைத்தனமாதல். (W.)
ஏழையாளன்
ēḻai-y-āḷaṉn. <>ஏழை+.Poor, miserable man;
தரித்தரன். பாம்பென வுயிர்க்கு மேழையாளனை (தமிழ்நா. 168).
ஏழொத்து
ēḻ-ottun. <>ஏழ்+. (Mus.)Variety of time-measure;
தாளவகை. (திவ். திருவாய். 2, 6, பதிகத்தலைப்பு.)
ஏளனம்
ēḷaṉamn. <>hēlana.Mockery, jeer;
இகழ்ச்சு. (சூடா.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 568 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், seven, ēḻ, ēḻai, ēḻu, திவா, poor, notes, ignorance, simplicity, கலித், அறியாமை, தோழி, ஏழாங்காப்பு, ஏழைமை, poverty, state, சூடா, பெண், icai, scale, diatonic, ஏழிசை, music, ilai, kāppun, woman, tamil, pālain, person