சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 51
Word
English & Tamil Meaning (பொருள்)
அடியந்திரம்
aṭiyantiramn. <>M.aṭiyantaram.Marriage, feast;
கலியாண முதலிய விசேடம். Loc.
அடியவன்
aṭiyavaṉn. <>அடி3. [T.adiyadu, K. adiya.]1. Slave;
அடிமை யாள்.
2. Devotee;
பக்தன். அமரர்நா யகன்றனக் கடியவன். (கந்தபு.சிங்கமுகா.279).
அடியளபெடைத்தொடை
aṭi-y-aḷa-peṭai-t-toṭain. <>id.+. (Pros.)Concatenation in which the initial feet of all the lines of a verse have prolonged vowels or consonants;
அடிகடோறும் முதற்கண் அளபெடைவரத் தொடுப்பது. (காரிகை, உறுப்.18, உரை.)
அடியறி
-
தல்
aṭi-y-aṟi-v.intr. <>id.+.To find out the first or primary cause;
மூல காரணந் தெரிதல். (ஈடு, 1, 1, 8.)
அடியறு
-
தல்
aṭi-y-aṟu-v.intr. <>id.+.To be uprooted, completely removed;
மூலமறுதல்.
அடியறுக்கி
aṭi-y-aṟukkin. <>id. அறு2-.Flat piece of wood by which the potter marks his work and cuts it from the wheel below;
மட்கல மறுக்குங் கருவி. (W.)
அடியனாதி
aṭi-y-aṉātin. <>id.+.Time immemorial, antiquity;
தொன்றுதொட் டுள்ள காலம். Loc.
அடியனேன்
aṭiyaṉēṉn. <>id.A term of humble respect. See அடியேன்.
உன்னடியனேனும் வந் தடியிணை யடைந்தேன் (திவ்.பெரியதி.5, 8, 3).
அடியாகெதுகை
aṭi-y-āketukain. <>id.+ ஆகு+எதுகை.See அடியெதுகைத் தொடை.
(தொல்.பொ.405,உரை.)
அடியார்க்குநல்லார்
aṭiyārkku-nallārn. <>id.+.Name of a commentator or the Cilappatikāram;
சிலப்பதிகார வுரையாசிரியறுளொருவர்.
அடியாறு
aṭi-y-āṟun. <>id.+.Historical succession from ancient times;
தொன்று தொட்ட வரலாறு. Loc.
அடியான்
aṭiyāṉn. <>id. [M.aṭiyān.]1. Slave, servant, devotee, as of a deity;
தொண்டன். (திவ்.திருவாய்.9, 4, 10.)
2. Cultivator of low caste, who assists in cultivating land on condition of receiving a portion of the crop (R.F.);
பண்ணையாள்.
அடியிடு
-
தல்
aṭi-y-iṭu-v.intr. <>id.+. [M.aṭiyiṭuka.]1. To make a beginning, commence an undertaking;
தொடங்குதல். பரிந்தழுவதற்குப் பாவா யடியிட்டவாறு (சீவக.1391).
2. To make the bottom of a basket or the first end of a mat as a beginning;
கூடை முதலியன முடைதற்கு அடியமைத்தல். (W.)
3. To step forward;
அடிவைத்து நடத்தல். தூளாட வடியிட்டு (திருவிளை.மாயப்.6).
அடியியைபுத்தொடை
aṭi-y-iyaipu-t-toṭain. <>id.+. (Pros.)Concatenation in which the final feet of the lines of a verse are the same;
அடிதோறும் இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுப்பது. (காரிகை, உறுப்.18, உரை.)
அடியிரட்டி
-
த்தல்
aṭi-y-iraṭṭi-v.intr. <>id.+.To step without advancing;
இட்ட அடியின்மேல் அடியிடுதல். அடியிரட்டித்திட் டாடு மாட்டு (பு.வெ.2, 8).
அடியீடு
aṭi-y-īṭun. <>id.+ இடு-.1. Beginning;
தொடக்கம்.
2. Slowly treading, as a king;
அடியிட்டு நடக்கை. அருந்திறன் மாக்க ளடியீடேத்த (சிலப்.26, 90).
அடியுணி
aṭi-y-uṇin. <>அடி2+உண்-.One who is beaten;
அடிபட்டவன். (W.)
அடியுரம்
aṭi-y-uramn. <>அடி3+.1. Ancestral property;
பிதிரார்ச்சித சொத்து. (J.)
2. Crop of a year reserved for subsistence during the following year;
முன்வருஷத்துச் சேமதானியம். (J.)
3. Physical strength, power of wealth;
சக்தி. (J.)
4. Manure put in previous seasons;
முன்பு இட்ட எறு.
5. Manure put on the soil around a tree;
மரத்தைச் சுற்றியிடும் எரு. (J.)
அடியுறை
aṭi-y-uṟain. <>id.+.1. Offering to a great personage, as laid at his feet;
பாத காணிக்கை. ஈட்டிய பல்பொருள்க ளெம்பிரான்க்கடியுறையென்று (திவ்.பெரியாழ்.4, 3, 9).
2. Living in reverence, as for a person worthy of respect;
வழிபட்டுறைகை. (கலித்.140, 11.)
3. 'Your obedient servant', as flourishing beneath your feet, an ancient term of humble respect, in the 1st pers.;
'பாதத்தில் வாழ்வேன்' என்னும் பொருளில் வரும் ஒரு வணக்கமொழி. நின்னடிநிழற் பழகிய வடியுறை (புறநா.198).
அடியெடு
-
த்தல்
aṭi-y-eṭu-v.intr. <>id.+.1. To go beyond;
அப்பாற்போதல். (திவ்.இயற் பெரியதிருவந்.30.)
2. To step;
அடிவைத்தல். அடியெடுத்துக் கொண்டென்பால் வரலாகுங்கொல் (சடகோபரந்.28).
அடியெதுகைத்தொடை
aṭi-y-etukai-t-toṭain. <> id.+. (Pros.)Concatenation in which the second letters of all the lines of a verse rhyme;
அடிதோறும் முதற்கண் இரண்டாமெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. (காரிகை, உறுப்.18, உரை.)
அடியேந்திரம்
aṭiyēntiramn. <>M.aṭiyantaram.Marriage, feast. See அடியந்திரம்.
Loc.
அடியேபிடித்து
aṭiyē-piṭittuadv. <>அடி3+From the beginning;
ஆதியிலிருந்து. Colloq.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 51 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், aṭi, intr, beginning, திவ், lines, verse, காரிகை, respect, concatenation, தொடுப்பது, உறுப், அடி3, pros, toṭain, அடிதோறும், aṭiyantaram, ஒன்றிவரத், crop, த்தல், manure, year, இட்ட, servant, feast, slave, devotee, முதற்கண், அடியந்திரம், first, marriage, humble, term, ancient