சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 503
Word
English & Tamil Meaning (பொருள்)
ஊழியமறியல்
ūḻiya-maṟiyaln. <>உழியம்+மறி-.Rigorous imprisonment;
கடுங்காவல். (J.)
ஊழியன்
ūḻiyaṉn. <>id.1. Slave;
அடிமை.
2. Servant;
பணியாள்.
ஊழியான்
ūḻiyāṉn. <>ஊழி.1. One who lives to a great age;
நெடுங்கால வாழ்க்கை யுடையான். ஊழியா ரெளிதினிற் கரசுதந் துதவுவார் (கம்பரா. நட்புக்கோட். 4).
2. God, One who will live through the final destruction of the world;
பிரளயகாலத்தும் அழியாமலிருக்குங் கடவுள். (தேவா. 270, 5.)
ஊழில்
ūḻiln. <>ஊழ்2-.Filthy mire;
அருவருப்புறு சேறு. (பிங்.)
ஊழிலை
ūḻ-ilain. <>id.+.Dead, dry leaves;
இலைச்சருகு. கோடை தூற்றக் கூடிய வூழிலை (ஞானா. 28, 12).
ஊழுறு
-
தல்
ūḻ-uṟu-v. tr. <>id.+.To scoop out;
குடைதல். காழியர் மோதகத் தூழுறு விளக்கமும் (சிலப். 6, 137, அரும்.)
ஊழை
ūḻain. <>id.Bile;
பித்தம். (பிங்.)
ஊளன்
ūḷaṉn. <>ஊளை. [M. ūḻan.] Jackal,Fox;
நரி. (பிங்.)
ஊளா
ūḷān.A carnivorous marine fish, dark leaden colour, Sphyraena acutipinnies;
நெடுவாய்மீன்.
ஊளான்
ūḷāṉn.Sea-bream, greyish silvery, Crenidens indicus;
கடல்மீன் வகை.
ஊளி
ūḷin. prob. உளை1-.1. Sound;
சத்தம். (ஈடு, 7,4,4.)
2. Hunger;
பசி. ஊளியெழவுலகமுண்ட வூணே (திவ். திருவாய். 7,4,4, பன்னீ.)
ஊளை
1
ūḷain. <>ஊளை1-. [T. ūḷa, K. ūḷ, M. ōḷi.] Howl of a dog or jackal, bleat of a sheep when diseased; cry of a person in anguish, applied contemptuously;
நரிமுதலியவை இடுஞ்சத்தம். ஊளைப் பெருநரி வவ்விய வூனை (தணிகைப்பு. களவு. 617.)
ஊளை
2
ūḷain. <>ஊழல்.Offensive smell;
தீநாற்றம். ஊளைமோர்.
ஊளைக்காது
ūḷai-k-kātun. <>id.+ காது.Purulent or mucopurulent discharge from the ear, Otorrhoea;
சீவடியுங் காது.
ஊளைச்சதை
ūḷai-c-catain. <>id.+.See ஊழற்சதை.
.
ஊளைமூக்கு
ūḷai-mūkkun. <>id.+.Running nose;
சளிபிடித்த நாசி.
ஊளையிடு
-
தல்
ūḷai-y-iṭu-v. intr. <>ஊளை1+.To howl as jackal or dog;
நாய் நரி முதலியவை சத்தமிடுதல். முதிர்நரிக ளூளையிடின் (சூத. எக்கி. பூ. 46, 20).
ஊற்றங்கோல்
ūṟṟaṅ-kōln. <>ஊன்று-+.[T. ūtakola.] Staff to lean on;
ஊன்றுகோல். ஒல்லையுயிர்க் கூற்றங்கோலாகி (சிறுபஞ். 57).
ஊற்றம்
1
ūṟṟamn. <>ஊன்று-. [T. ūta, M. ūṟṟam.]1. Walking-stick, crutch, prop;
பற்றுக்கோடு. உண்முதற் பொருட்கெலா மூற்ற மாவன (கம்பரா. கிளை. 74).
2. Stability, immobility;
உறுதியாயிருக்கை.
3. Strength, power;
வலிமை. ஊற்றமுடையாய் (திவ். திருப்பா. 21).
4. Ardour eagerness;
மனவெழுச்சி. ஊற்றமோடு பறித்தார் (சேதுபு. திருநா. 42).
5. Greatness, eminence;
மேம்பாடு. (திவா.)
6. Training, practice;
பழக்கம். படையூற்றமிலன் (கம்பரா. கையடை. 12).
ஊற்றம்
2
ūṟṟamn. <>ஊறு.1. Hindrance;
இடையூறு. மெல்லடியாரொடு மூற்றமஞ்சா (திருவிளை. திருமணப். 34).
2. Harm, injury;
கேடு. மேல்வருமூற்ற முணர்கில்லாய் (கந்தபு. மார்க். 248).
3. Sensation of touch;
ஸ்பரிசம். தழுவுவா ளுற்றங் காணாள் (திருவிளை. திருமணப். 131).
ஊற்றாணி
ūṟṟāṇin. <>ஊன்று-+ஆணி.Nail which fastens the plough-beam to the plough;
கலப்பையுறுப்பி னொன்று. கலப்பை யூற்றாணி யுளதாயி னுலகுநிலை குலையாதே (ஏரெழு. 5).
ஊற்றாம்பெட்டி
ūṟṟām-peṭṭin. <>ஊற்று-+.See ஊற்றுப்பெட்டி.
.
ஊற்றால்
ūṟṟāln. [T. ūta.]1. Wicker basket for catching fish;
மீன்பறி. (W.)
2. Wicker basket for covering chickens;
கோழி குஞ்சுகளை யடிக்குங்கூடை. (W.)
3. The 4th nakṣatra, whose shape resembles a fish basket-net See உரோகிணி. (பிங்.) .
.
ஊற்றால்கவி
-
த்தல்
ūṟṟāl-kavi-v. intr. <>ஊற்றால்+.To set a wicker basket for catching fish;
மீன்பிடிக்கப் பறியை மூடுதல். (W.)
ஊற்றிரு
1
-
த்தல்
ūṟṟiruv. intr <>ஊற்று2+இரு-.To well up in abundance, as a spring;
ஊற்றுமிகுதல். ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி (திருவாச. 3, 121).
ஊற்றிரு
2
-
த்தல்
ūṟṟiruv. intr <>ஊற்று3 +இரு-.To be devoted;
அபிநிவேசமுண்டாத,. இத்தலை உற்றிருக்க வேணும். (ஈடு).
ஊற்றிறை
-
த்தல்
ūṟṟiṟai-v. intr. <>ஊற்று2+இறை-.To scoop and throw out the water of a spring in the bed of a river until it becomes pure;
ஊற்றிலுள்ள நீரை யிறைத்துச் சுத்தநீர் ஊறச்செய்தல்.
ஊற்றினவெண்ணெய்
ūṟṟiṉa-v-eṇṇeyn. <>ஊற்று-+.Castor-oil obtained by boiling the seeds, dist. fr. ஆட்டினவெண்ணெய், which is cold-drawn;
ஆமணக்கெண்ணெய்.
ஊற்று
1
-
தல்
ūṟṟu-5 v.tr. [M. ūṭṭu.]1. To pour out, cause to flow, spill;
வார்த்தல். ஒழிவுறக் கடத்தினீ ரூற்றி (சேதுபு. கந்தமா. 87).
2. To extract, as oil from the castor seeds by boiling them;
எண்ணெய் வடித்தல். கொட்டைமுத்தினின்று எண்ணெய் ஊற்றுவார்கள்.
3. To pour out, cast away as useless, empty or clear as a vessel of its contents;
வெளியேவிடுதல். கங்கை புடையூற்றுஞ் சடையான். (கம்பரா. கையடை. 12).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 503 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், intr, த்தல், கம்பரா, basket, fish, ūḷai, பிங், jackal, wicker, ஊற்று, ஊன்று, எண்ணெய், castor, boiling, ஊற்றால், catching, pour, spring, seeds, ūṟṟiruv, ஊற்றிரு, ஊற்று2, கையடை, ஊளை1, howl, ūḷain, திவ், ūḻ, scoop, காது, ஊற்றம், திருவிளை, திருமணப், சேதுபு, ūta, ūṟṟamn, plough