சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 466
Word
English & Tamil Meaning (பொருள்)
உவை
uvaiimpers. demonst. pron. <>உ4.They or those things that are near you, or yonder, at a distance not far off;
உங்குள்ளவை. (திவ். திருவாய். 1,1,4.)
உவைச்சன்
uvaiccaṉn. <>உவச்சன்.See உவச்சன், 1. (S.I.I.ii, 275.)
.
உவையம்
uvaiyamn. <>ubhaya.See உபயம், 1.
உவையம் முறுமுலகின் (கம்பரா. நிகும். 156).
உழ
-
த்தல்
uḻa-4 v. intr.1. To suffer; to experience sorrow, pain, trouble of fatigue;
வருந்துதல். அருந்துத லின்றி யலைகட லுழந்தோன் (மணி. 16, 74).
2. To be accomplished, as in an art;
பழகுதல். (சீவக. 597.)
3. To try, make an effort; To conquer;
பிரயாசப்படுதல். செயற்றலைநின்றுழப்பவர்கள் (தணிகைப்பு. நாட்டு. 130). -tr. வெல்லுதல். பாடகச் சீறடி பரற்பகையுழவா (சிலப். 10, 52).
உழக்கு
1
-
தல்
uḻakku-5 v.tr.1. To disturb, stir up;
கலக்குதல். பேரகழியி னுழக்கிய கரிகள் (நைடத. நகர. 2).
2. To trample down, tread upon;
மிதித்தல். அவரைக்கழலவுழக்கி (கலித். 106, 18).
3. To ravage, devastate;
கொன்று திரிதல். சினஞ்சிறந்து களனுழக்கவும் (மதுரைக். 48).
4. To plough; To play
உழுதல். (பிங்.) -intr. விளையாடுதல். உரவுத்திரையுழக்கியும் (பட்டினப். 101).
உழக்கு
2
uḻakkun. [M. uḷakku.]1. Measure of capacity, 2 ollocks=1/4 of a measure;
காற்படி. உழக்கேயுண்டுபடைத்தீட்டி (தேவா. 1154, 4).
2. Dice box;
கவறிட்டுருட் டும் உழக்கு. பவள வுழக்கிற் கோதை புரள (சீவக. 927).
உழக்குருட்டு
-
தல்
uḻakkuruṭṭu-v. intr. <>உழக்கு+உருட்டு-.To indulge in gambling at dice;
சூதாடுதல். Loc.
உழக்கோல்
uḻa-k-kōln. <>உழவு+.Goad used to drive oxen when ploughing, ox goad;
தாற்றுக்கோல். இல்லையாகில் உழக்கோலாலே தகர்க்கிறோம். (ஈடு, 6,4,5).
உழத்தி
uḻattin. <>id.Woman of the uḷavan, i.e. ploughman caste;
உழவச்சாதிப்பெண். (தொல். பொ. 20, உரை.)
உழத்திப்பாட்டு
uḻatti-p-pāṭṭun. <>உழத்தி+.Species of agricultural poem;
உழவுச் செய்திகளைக்கூறும் ஒரு பிரபந்தம். (பன்னிருபா. 333.)
உழப்பறையர்
uḻa-p-paṟaiyarn. <>உழு-+.A sub-division of Paṟaiyas, who earn their livelihood by serving as plough-men;
உழுதுசீவிக்கும் பறையர். உழப்பறைய ரிருக்கும் கீழைச்சேரியும். (S.I.ii.)
உழப்பன்
uḻappaṉn. <>உழப்பு-.Quibbler;
போலி நியாயம் பேசுவோன். (J.)
உழப்பு
1
-
தல்
uḻappu-5 v.tr. caus. of உழம்பு-.1. To confuse, disconcert, embroil, mix altogether, nonplus;
வார்த்தையால் மழுப்புதல். உழப்பிப்போட்டாய் குறியைக்குழப்பியே போட்டாய் (குற்றா. குற. 73, 2).
2. To sophisticate;
போலிவாதஞ்செய்தல்.
3. To delay, protract;
காலங்கடத்துதல். பரிசி லுழப்புங் குரிசிலை (பன்னிருபா. 353).
உழப்பு
2
uḻappun. <>உழ-. [M.uḻappu.]1. Suffering;
வருத்தம். சென்ற தேஎத் துழப்புகனி விளக்கி (தொல். பொ. 146).
Mental disquiet;
மனச்சஞ்சலம். உள்ளமறிவாயுழப்பறிவாய் (தாயு. பரா பரக். 33)
3. Effort, close appliccation, exertion;
முயற்சி. (திவா.)
4. Practice, habit;
பழக்கம். உறுபடை யுழப்பினை யுணர்வுறாததோர் சிறுவரை (கந்தபு. சிங்க. 210).
5. Strength;
வலிமை. (சூடா.)
6. Zeal, enthusiasm;
உற்சாகம். (சூடா.)
உழப்பெருது
uḻapperutun. <>id.+.Team oxen;
உழுமெருது. உழப்பெருது பொன்றப்புடைத்துழுது (சீவக. 2783).
உழபுலவஞ்சி
uḻa-pula-vacin. <>உழு- +. (Puṟap.)Theme of describing the setting fire to an enemy's country;
பகைவர் நாட்டைச் சுட்டெரித்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 3,14.)
உழம்பு
-
தல்
uḻampu-5 v. intr.1. To make a confused hullabaloo of many noises;
பலவொசை கலந்தொலித்தல். (திவா.)
2.To be disturbed, disconcerted, thrown into disorder;
குழம்புதல். (W.)
உழமண்
uḻa-maṇn. <>ūṣa+.See உழைமண்.
.
உழல்(லு)
-
தல்
uḻal-3 v. intr. [K.M. uḷal.]1. To oscillate, swing; to be in motion;
அசைதல். சிறுகாற்றுழலும் (கல்லா. கண.)
2. To whirl, revolve;
சுழலுதல். (பிங்.)
3. To wander, roam about;
அலைதல். ஆட்பார்த் துழலு மருளில் கூற்றுண்மையால் (நாலடி, 20).
4. To lose condition or status, become poor;
நிலைகெடுதல். அந்தக் குடி உழன்றுபோயிற்று. Loc.
உழலை
uḻalain. <>உழல்-.1. Cylindrical beam of wood, in an oil or sugarcane press, by the revolution of which the oil or juice is expressed;
செக்கு முதலியவற்றின் உழலைமரம். (W.)
2. Horizontal bar of wood in a doorway or across a road;
குறுக்கு மரம். உழலைமரத்தைப்போற் றோட்டன (கலித். 106).
3. Cross bar;
கணையமரம். வேழம்...உழலையும் பாய்ந்திறுத்து (பு. வெ. 12, வென்றிப். 8).
4. See உழலைமரம். Loc.
.
5. Great thirst;
பெருந்தாகம். (தைலவ. தைல. 58.)
உழலைத்தடி
uḻalai-t-taṭin. <>உழலை+.See உழலை, 2.
உழலைத்தடி கோத்தாற்போலேயிருக்கிற எலும்புகள் (ஈடு.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 466 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், intr, uḻa, உழக்கு, உழப்பு, உழலை, சீவக, திவா, uḻappu, சூடா, உழம்பு, wood, உழலைத்தடி, உழலைமரம், உழல், உழப்பெருது, உழத்தி, பிங், plough, கலித், உவையம், measure, dice, தொல், உவச்சன், oxen, goad, பன்னிருபா