சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 436
Word
English & Tamil Meaning (பொருள்)
உயிர்க்கட்டை
uyir-k-kaṭṭāin. <>உயிர்2+.Body;
உடல். (W.)
உயிர்க்கணம்
uyir-k-kaṇamn. <>id. +.Vowels;
உயிரெழுத்துக்கூட்டம்.
உயிர்க்கழு
uyir-k-kaḻun. <>id.+.A form of stake for impalement designed to prolong the agony;
கழுவகை. உயிர்க்கழு வினவா முன்னர் (திருவாலவா. 38, 27).
உயிர்க்கிழவன்
uyir-k-kiḻavaṉn. <>id.+.Husband, considered as the lord of his wife's life;
கணவன். தன்னுயிர்க் கிழவனை யடைந்து (திருவிளை. மலயத். 9).
உயிர்க்குயிர்
uyirkkuyirn. <>id.+.God, who is the soul of the soul;
கடவுள். உயிர்க் குயிரா யங்கங்கே நின்றான்கோயில் (தேவா. 575, 4).
உயிர்க்கொலை
uyir-k-kolain. <>id.+.1. Taking of animal or human life;
சீவவதை. ஊனைவிரும்பி யுயிர்க்கொலை யெண்ணுவான் (சிவதரு. பாவ. 75).
2. Taking of life by gradual dis-memberment of limbs and organs;
சித்திரவதை. நற்கொலை யாகக் கொல்லவொண்ணாது, உயிர்க்கொலை யாகக் கொல்லவேணும் (ஈடு, 9, 9, 1).
உயிர்குடி
-
த்தல்
uyir-kuṭi-v. tr. <>id.+.To devour life, said of bloodthirsty demons and malevolent deities;
உயிரைப்போக்குதல். வானவரை யெல்லாந்தின் றுயிர்குடித்து (கந்தபு. சூரபன். வதை. 455).
உயிர்ச்சூது
uyir-c-cūtun. <>id.+.Gambling with living animals as stakes, a term used to denote that kind of gambling involved in cock-fight, ram-fight, etc.;
ஆடு கோழி முதலியவற்றைப் போர்பொருத்தியாடுகை. (சங். அக.)
உயிர்ச்சேதம்
uyir-c-cētamn. <>id.+.Loss of life;
பிராணிகளின் அழிவு. Colloq.
உயிர்த்தறுவாய்
uyir-t-taṟuvāyn. <>id.+.Great emergency, critical juncture, extreme danger;
ஆபத்துச்சமயம். (W.)
உயிர்த்தானம்
1
uyir-t-tāṉamn. <>id.+. sthāna.Seat of life, any vital part of the body;
உயிர்நிலை.
உயிர்த்தானம்
2
uyir-t-tāṉamn. <>id.+ dāna.See உயிர்ப்பிச்சை.
.
உயிர்த்தீ
uyir-t-tīn. <>id.+.The three vital fires which sustain life, viz. உதராக்கினி, காமாக்கினி, கோபாக்கினி;
உயிருக்காதாரமான மூன்று வகைத் தீ. (சூடா.)
உயிர்த்துணை
uyir-t-tuṇain. <>id.+.1. Friend in need; 2. Intimate friend, dear as life;
ஆபத்திலுதவுபவன்-ள் பிராணசினேகி-தன்-தை. ஆருயிர்த்துணையாய் வந்த (பாரத. இராச. 28).
உயிர்த்துணைவன்
uyir-t-tuṇaivaṉn. <>id.+.1. He who is an intimate friend;
பிராண சினேகிதன். உங்கள்குலத்தனி நாதற்குயிர்த்துணைவன் (கம்பரா. குகப். 25).
2. Husband;
கணவன்.
உயிர்த்துணைவி
uyir-t-tuṇaivin. <>id.+.1. Sarasvatī;
சரசுவதி. (பிங்.)
2. Wife;
மனைவி.
உயிர்த்தூண்டிற்காரன்
uyir-t-tūṇṭiṟ-kāraṉn. <>id.+.A demon in the temple of the goddess Aṅkāḷammmai, who brings to her the souls of suicides;
ஒரு துர்த்தேவதை. (M. M.)
உயிர்த்தெழு
-
தல்
uyirtteḻu-v. intr <>உயிர்-+எழு-.1. To be revived, restored to life;
மூர்ச்சித்துப்போன பிராணன் வரப்பெற்றெழுதல்.
2. To rise from the dead;
செத்தவன் மீட்டும் உயிர்பெற்றெழுதல். இயேசு மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தார்.
உயிர்த்தோழன்
uyir-t-tōḻaṉn. <>உயிர்2+.Bosom friend, inseparable companion;
பிராண சினேகன்.
உயிர்த்தோழி
uyir-t-tōḻin. <>id.+.A woman's trusted female companion;
பாங்கி. தன்னுடைய வின்னுயிர்த் தோழியால் (திவ். இயற். பெரிய திரும. 62).
உயிர்த்தோற்றம்
uyir-t-tōṟṟamn. <>id.+.Genesis of life in four classes of living organisms, viz. அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம்;
பிராணிகளின் பிறவி. (திவா.)
உயிர்தருமருந்து
uyir-taru-maruntun. <>id.+.Elixir of life;
மிருதசஞ்சீவினி. (திவா.)
உயிர்நிலை
uyir-nilain. <>id.+.1. Body, as the seat of life;
உடம்பு. அன்பின்வழிய துயிர் நிலை (குறள், 80).
2. Nature of soul. See ஸ்வ ஸ்வரூபம்.
மெய்யாமுயிர்நிலையும் (திவ். திருவாய். தனியன்).
3. Seat of life, any vital part of the body;
உயிர்தங்கும் ஸ்தானம். நீயுன துயிர்நிலை கூறாய் (பாரத. பதினெட். 173).
4. (Yōga.) Regulation of breath. See பிராணாயாமம். (குறள், 359, உரை.)
.
உயிர்ப்பலி
uyir-p-palin. <>id.+.1. Sacrifice of life;
சீவபலி.
2. Warrior beheading himself as an offering to the goddess of war, an ancient custom;
வீரன் தன்றலையைக் கொற்ற வைக்குங் கொடுக்கும் பலி. (தொல். பொ. 59, உரை.)
3. Saving a person's life;
உயிர்ப்பிச்சை. ஓருயிர்ப் பலி நீ வழங்குகென்றாள் (பிரமோத்.2, 16).
உயிர்ப்பழி
uyir-p-paḻin. <>id.+.Guilt of murder, vengeance, divine or human, of the foul deed of murder pursuing the murderer to death;
கொலைசெய்தவனைத் தொடரும் பழி. (W.)
உயிர்ப்பிச்சை
uyir-p-piccain. <>id.+.Gift of life, saving one's life;
உயிரையளிக்கை. உயிர்ப்பிச்சை தரவேணுமென்று தெய்வத்தினிடம் வேண்டிக்கொண்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 436 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், uyir, life, friend, உயிர்ப்பிச்சை, vital, seat, soul, intimate, பாரத, part, உயிர்நிலை, goddess, saving, murder, குறள், திவா, companion, திவ், பிராண, உயிர்த்தானம், கணவன், உயிர்க்கொலை, wife, husband, உயிர்2, உயிர்க்கழு, taking, human, fight, பிராணிகளின், living, gambling, யாகக், tāṉamn