சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 4311
Word
English & Tamil Meaning (பொருள்)
மணிப்பவளம்
maṇi-p-pavaḷamn.id.+.Coral;
நற்பவளம். மண்பவளத்தை மணிப்பவளமென்றும் (சரவண. பணவிடு. 204).
மணிப்பாம்பு
maṇi-p-pāmpun. <>id.+.A kind of snake;
பாம்புவகை. Pond.
மணிமலை
maṇi-malain. <>id.+.Rocky hill;
மண்செறியப்பெறாத பாறைகளாலான மலை. தூறுகள் வருக்ஷங்களுண்டாம்படி மண்செறிந்த மலையன்றிக்கே யிருக்கும் மலைகளை மணிமலை யென்னக் கடவதாய் (திவ். பெரியாழ். 3, 2, 3. வ்யா. பக். 539).
மணிமாறு
-
தல்
maṇi-māṟu-v. intr. <>id.+.To trade in gems;
இரத்தினவியாபாரஞ் செய்தல். மணிமாற வந்திடத்தே மாதரசே வரலாமோ (கோவ. க. 96).
மணையில்வைத்துப்பாடு
-
தல்
maṇaiyil-vaittu-p-pāṭuv. tr. <>மணை+வை-+.To decorate and set on a platform, as a girl on auspicious occasions, and sing songs;
பெண்ணை அலங்கரித்து மணையிலிருத்திச் சுபம்பாடுதல்.
மத்தளிப்பு
mattaḷippun. <>Arab. matlab. of மத்தலபு.Intention, object;
எண்ணம். Loc.
மத்தான்காயீ
mattāṉkāyīn. <>E.Martingale;
ஜீப்பூம் மரத்திற்குக் கீழ்ப்புறத்தில் ஆதாரமாக உள்ள கயிறு அல்லது சங்கிலி. (M. Navi.)
மத்திமத்தான்
mattimattāṉn. <>மத்திமம்.Person belonging to the Buddhist sect of mādhyamika;
மாத்யமிகன். வாணாளறுக்கின்ற மத்தி மத்தார் வழிமாற்றுவமே (தேசிகப். 5, 14).
மத்திமம்
mattimamn. <>madhyama.(Poet.) šānta Rasa, the sentiment of tranquility;
நடுவுநிலைமை யென்னுஞ் சுவை. (தொல். பொ. 245, இளம்பூ.)
மத்திமவிம்சதி
mattima-vimcatin. <>id.+.The second period of 20 years from carvacittu to parāpava in the Jupiter cycle;
அறுபது வருஷக் கணக்கில் சர்வசித்து முதல் பராபவ வருஷம் வரையுள்ள இடையிருபது வருஷங்கள். (பஞ்.)
மத்தியம்
mattiyamn. <>madhya.Earth; பூமி.
.
மத்தியானரேகை
mattiyāṉa-rēkain. <>மத்தியானம்+.The great circle passing through the zenith and the northern and southern points of the horizon;
வானுச்சியை அடி வானத்தின் வடக்குத்தெற்கு முனைகளோடு சேர்க்கும் வட்டக்கோடு.
மத்ஸ்யதுவாதசி
matsya-tuvātacin. <>malsya+The tuvātaci tili of the bright fortnight of the lunar month of mārkkaciram;
மார்க்கசிர மாதத்துச் சுக்கிலத் துவாதசி. (பஞ்.)
மதகு
matakun.The mythical mountain cakkaravāḷam,
சக்கரவாளகிரி. மதகோடி யுலகேழு மணநாற (தக்கயாகப். 3).
மதயாணி
matayāṇin.A kind of flower plant;
செடிவகை. (புட்ப. 29.)
மதனகாந்தச்சேலை
mataṉa-kānta-c-cēlain. prob. மதனன்+காந்தம்+.A kind of saree;
புடைவைவகை. (பஞ்ச. திருமுக. 1161.)
மதாந்தன்
matāntaṉn. <>mada + andha.One who is blind with arrogance;
செருக்குடையவன். செல்வத்தின் மதாந்தராகி (சானந்தகணே. நரக. 17).
மதிதெரிகலை
mati-teri-kalain. <>மதி+தெதி-+.The day after the new moon, when the crescent is scarcely visible;
சினீவாலி. (அரு. நி.)
மதில்தேவை
matil-tēvain. <>மதில்+.A tax;
வரிவகை. (S. I. I. vii, 63.)
மதிள்
matiḷn.Wall, as round a fort;
மதில். மதிளிலங்கை யழித்தவனே (திவ். பெருமாள். 8, 9).
மதிளிடு
-
தல்
matiḷ-iṭu-v. tr. <>மதிள்+.1. To surround by fortifications;
சுற்றும் அரணாக மதிற்சுவ ரெழுப்புதல்.
2. To protect;
பாதுகாத்தல். சில தார்மிகர் மதிளிட்டு நோக்கப் பெற்றோமிறே (திவ். திருநெடுந். 9, வ்யா.).
மதினாயன்
matiṉāyaṉn. <>மதில் + நாயன்.Officer in charge of a fort;
கோட்டைத்தலைவன். (T. A. S. ii, 68.)
மதுர்பேணி
matur-pēṇin. prob. madhura+.A kind of sweet cake;
பதர்பேணி. மாமதுரமிக்க மதுர்பேணி (பஞ்ச. திருமுக. 1836).
மதுராந்தகன்மாடை
maturāntakaṉmāṭain. <>மதுராந்தகன்+.An ancient coin;
பழைய நாணயவகை. நாங்கள் கைக்கொண்ட மதுராந்தகமாடையோ டொக்கும் பொன் (S. I. I. iii, 164).
மதோதகம்
matōtakamn. <>madhu+.Hydromel, mixture of honey and water;
தேனும் நீருங் கலந்தது. Pond.
மந்தரச்சக்கரம்
mantara-c-cakkaramn. <>மந்தரம்+.(Pros.) A kind of metrical composition;
சித்திரக்கவிவகை. (யாப். வி. 497.)
மந்தாதிகாரி
mantātikārin.<>manda+.One who belongs to the last class of persons qualified to receive instructions;
கல்விக்குரிய மாணவருள் கீழ்த்தரத்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 4311 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், kind, maṇi, திவ், மதில், மதிள், fort, மதுர்பேணி, திருமுக, மத்திமம், pond, மணிமலை, வ்யா, prob, பஞ்ச