சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 4019
Word
English & Tamil Meaning (பொருள்)
அஷ்டகணம்
aṣṭa-kaṇamn. <>id.+.The eight mathematical processes;
அட்டகணிதம். (W.)
அஷ்டகிரி
aṣṭa-kirin. <>id.+.The eight imperfections of living beings;
அஷ்டகுலபர்வதம். (W.)
அஷ்டகுற்றம்
aṣṭa-kuṟṟamn. <>id.+.The eight imperfections of living beings;
எண் குற்றம். (W.)
அஷ்டகுன்மம்
aṣṭa-kuṉmamn. <>id.+.Eight kinds of kuṉmam, viz., eri-kuṉmam, catti-kuṉmam, caṉṉi-kuṉmam, cilēṭṭuma-kuṉmam, cūlai-k-kuṉmam, pitta-kuṉmam, valikuṉmam, vāta-kuṉmam;
எரிகுன்மம் சத்திகுன்மம் சன்னிகுன்மம் சிலேட்டுமகுன்மம் சூலைக்குன்மம் பித்தகுன்மம் வலிகுன்மம் வாதகுன்மை என்ற எட்டு வகையான குன்மநோய். (W.)
அஷ்டகை
aṣṭakain. <>aṣṭakā.The eighth tithi of a lunar fortnight;
அட்டமி. (W.)
அஷ்டகோணம்
aṣṭa-kōṇamn. <>aṣṭan+.1. The eight points of the compass;
எட்டுத்திசைகள். (W.)
2. Being crooked, out of shape;
கோணலுருவாக விருக்கை. அந்த சாமான் முற்றிலும் அஷ்டகோணம்.
அஷ்டசுத்தி
aṣṭa-cuttin. <>id.+.(Jaina.)Eight kinds of purification, viz., pariṇāma-cutti, vinaya-cutti, īriyāpata-cutti, piratiṣṭāpaṉa-cutti, cayyācaṉa-cutti, vāk-cutti, pikṣa-cutti, kāya-cutti;
பரிணாமசுத்தி விநயசுத்தி ஈரியாபதசுத்தி பிரதிஷ்டாபனசுத்தி சய்யாசனசுத்தி வாக்சுத்தி பிக்ஷசுத்தி காயசுத்தி என்ற எட்டுவகைச் சுத்திகள். (மேருமந். 145, உரை.)
அஷ்டசுபம்
aṣṭa-cupamn. <>id.+.Aṭṭamankalam, the eight auspicious objects;
அட்டமங்கலம். (R.)
அஷ்டசெல்வம்
aṣṭa-celvamn. <>id.+.Aṣṭaicuvariyam, the eight kinds of prosperity;
அஷ்டைசுவரியம். (R.)
அஷ்டதந்திரவாதம்
aṣṭa-tantira-vātamn. <>id.+tantra+.A disease caused by flatulency, combining eight bad symptoms;
எண்வகைக் கெட்டகுறிகளையுடைய வாதநோய்வகை. (R.)
அஷ்டதனம்
aṣṭa-taṉamn. <>id.+.Eight kinds of possession; viz., rūpam, campattu, vittai, vivēkam, kuṇam, taṉam, nalvaruṇam, vayatu;
ரூபம் சம்பத்து வித்தை விவேகம் குணம் தனம் நல்வருணம் வயது என்ற எட்டு நற்பொருள்கள். (R.)
அஷ்டதானப்பரீட்சை
aṣṭa-tāṉa-p-pariṭcain. <>id.+sthāna+.Diagnosis of a disease from the eightfold symptoms of nāṭi, mukam, malam, mūttiram, kaṇ, nā, carīram, toṉi;
நோயாளியின் நாடி முகம் மலம் மூத்திரம் கண் நா சரீரம் தொனி என்ற எட்டனையுங் கவனித்து நோயை நிதானிக்கை. (W.)
அஷ்டதிக்கு
aṣṭa-tikkun. <>id.+.The eight points of the compass;
எட்டுத்திசைகள். (W.)
அஷ்டபரிபாலனம்
aṣṭa-paripālaṉamn. <>id.+paripālana.Regents of the eight quarters;
அஷ்டதிக்குப்பாலகர். அஷ்டபரிபாலனங்களுக்கும் யாகமண்டபத்துக்கும். (S. I. I. V, 84).
அஷ்டபரீட்சை
aṣṭa-parīṭcain. <>id.+.See அஷ்டதானப்பரீட்சை. (சீவரட்.)
.
அஷ்டபாக்கியம்
aṣṭa-pākkiyamn. <>id.+.The eight supernatural powers attainable by yōga;
அஷ்டமாசித்தி. (R.)
அஷ்டபாகமானியம்
aṣṭa-pāka-māṉiyamn. <>id.+bhāga+.An estate held on payment of only an eighth share of the produce as revenue;
மகசூலில் எட்டிலொன்றைத் தீர்வையாகக் கொடுக்கும் மானியம். (R. T.)
அஷ்டம்
aṣṭamn. cf. அட்டம்.Nutmeg;
சாதிக்காய். (வை. மூ.)
அஷ்டவர்க்கு
aṣṭa-varkkun. <>aṣṭa-varga. (Astrol.)An astrological chart drawn to ascertain the good and bad influencess of the planetary positions;
அஷ்டவர்க்கம். (சோதிட. சிந். 224.)
அஷ்டவித்தியேசுரர்
aṣṭa-vittiyēcurarn. <>aṣṭan+vidyā+īšvara.The eight attendant gods in the īccuram of the cuttatattuvam, viz;, Anantar, Cūkkumar, Civōttamar, Ekanettirar, Ekaruttirar, Tirimūrttar, Cīkaṇṭar, Cikaṇṭi;
சுத்ததத்துவங்களு ளொன்றான ஈச்சுர தத்துவத்திலுள்ள அநந்தர் சூக்குமர் சிவோத்தமர் ஏக நேத்திரர் ஏகருத்திரர் திரிமூர்த்தர் சீகண்டர் சிகண்டி என்ற எண்வகை ஈச்சுரர். (அபி. சிந்.)
அஷ்டவெச்சம்
aṣṭa-eccamn. <>id.+.Eight natural defects of the body, v;z., ūmai, ceviṭu, kuṟaḷ, kūṉ, kuruṭu, muṭam, uṟuppu-mayakkam, uṟuppil-piṇṭam;
ஊமை செவிடு குறள் கூன் குருடு முடம் உறுப்புமயக்கம் உறுப்பில்பிண்டம் என உடலுக்கு இயற்கையிலுண்டாம் எட்டுவகைக் குறைவுபாடு. (R.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 4019 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், aṣṭa, eight, cutti, kuṉmam, kinds, சிந், எட்டுத்திசைகள், அஷ்டதானப்பரீட்சை, disease, symptoms, compass, அஷ்டகோணம், living, imperfections, beings, எட்டு, aṣṭan, eighth, points