சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3825
Word
English & Tamil Meaning (பொருள்)
வேண்டாமை
vēṇṭāmain. <>id.+ id.+.1. Aversion, dislike;
வெறுப்பு. வேண்டுதல் வேண்டாமையிலான் (குறள், 4).
2. Absence of desire; contentment;
அவாவின்மை. வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை (குறள், 363.)
வேண்டார்
vēṇṭārn. <>id.+ id.+.1. See வேண்டாதார், 1.
.
2. Enemies;
பகைவர். வேண்டார் பெரியர் விறல்வேலோன் றானிளையன் (பு. வெ. 10, பொது. 6).
வேண்டாவெறுப்பு
vēṇṭā-veṟuppun. <>id.+ id.+.Indifference, unconcern;
உபேட்சை. அவன் அந்தக் காரியத்தை வேண்டாவெறுப்பாய்ச் செய்கிறான்.
வேண்டி
vēṇṭiperp. <>id.For the sake of;
பொருட்டு. அதை எனக்கு வேண்டிச் செய்.
வேண்டிக்கேள்
-
தல் [வேண்டிக்கேட்டல்]
vēṇṭi-k-kēḻ-v. tr. <>id.+.To beseech;
மன்றாடிக்கேட்டல். (யாழ். அக.)
வேண்டிக்கொள்(ளு)
-
தல்
vēṇṭi-k-koḻ-v. tr. <>id.+.To solicit, pray for, request;
பிரார்த்தித்தல்.
வேண்டிய
vēṇṭiyaadj. <>id.1. Indispensable;
இன்றியமையாத.
2. Required;
தேவையான.
3. Sufficient;
போதுமான.
4. Many;
மிகுதியான. வேண்டிய நாள் என்னோடும் பழகிய நீ (தாயு. மண்டலத். 10).
வேண்டியது
vēṇṭiyatun. <>id.1. That which is indispensable;
இன்றியமையாதது. பயிருக்கு வேண்டியது மழை.
2. That which is required;
தேவையானது. பானை செய்யக் குயவனுக்கு மண்ணோடு சக்கரமும் தண்டமும் வேண்டியது.
3. That which is sufficient;
போதுமானது.
4. That which is abundant;
மிகுதியானது.
5. See வேணது, 2.
.
வேண்டியமட்டும்
vēṇṭiya-maṭṭumadv. <>வேண்டிய+.1. As much as is indispensable;
அவசியமான அளவில்.
2. As much as is required;
தேவையான அளவில்.
3. Sufficiently;
போதுமான அளவில்.
4. Abundantly;
மிகுதியாக.
வேண்டியவன்
vēṇṭiyavaṉn. <>id.+.1. Friend, favourite;
பிரியத்துக்குரியவன்.
2. Well-wisher, interested person;
ஒருவனது நன்மையை நாடுபவன். அரசனுக்கு மந்திரி வேண்டியவன்.
வேண்டியிரு
-
த்தல்
vēṇṭi-y-iru-v. intr. <>id.+ இரு-To be necessary or indispensable;
இன்றியமையாததா யிருத்தல். இந்தக்காலத்திற்குப் படாடோபம் வேண்டியிருக்கிறது.
வேண்டு
-
தல்
vēṇṭu-5 v. cf. வேள்-. [K. bēdu.] tr.1. To want, desire;
விரும்புதல் பகலோடு செல்லாது நின்றீயல் வேண்டுவன் (கலித். 145).
2. To beg, entreat, request;
பிரார்த்தித்தல். வேண்டித்தேவ ரிரக்கவந்து பிறந்ததும் (திவ். திருவாய். 6, 4, 5). (பிங்.)
3. To listen to with eagerness;
விரும்பிக் கேட்டல். அன்னைவாழி வேண்டன்னை (ஐங்குறு. 101).
4. To buy, purchase;
விலைக்கு வாங்குதல். (நாமதீப. 705.)
5. To be indispensable; to be necessary;
இன்றியமையாததால். வேண்டுமே காக்கை கடிவதோர் கோல் (நாலடி, 41).
வேண்டுகோள்
vēṇṭu-kōḷn. <>வேண்டு-+ கொள்-.Supplication, request, entreaty;
பிரார்த்தனை. வென்றுபத்திரஞ் செய்துநின் வேண்டுகோளென்றார் (திருவிளை. விறகு. 51).
வேண்டுநர்
vēṇṭunarn. <>id.Those who wish for or desire a thing;
விரும்புவோர். வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட (திருமுரு. 248).
வேண்டும்
vēṇṭumv. opt. <>id.1. Verb meaning 'will be required' or 'will be necessary, indispensable';
இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை. வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும் (சீவக. 201).
Verb in the future tense used in all genders, numbers and persons, meaning (a) 'will be required';
இன்றியமையாதது என்ற பொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும் எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:
(b) 'will stand in relation to';
உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்ன வேண்டும்?
Auxilliary verb meaning 'must';
அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.
வேண்டுமென்று
vēṇṭum-eṉṟuadv. <>வேண்டும் + என்-.1. Intentionally;
முழுமனதோடு. அதை வேண்டுமென்று செய்தேன்.
2. Wilfully;
பிடிவாதமாய். பலர் தடுக்கவும் வேண்டுமென்று அந்தக் காரியத்தைச் செய்கிறான்.
வேண்மாள்
vēṇmāln. Fem. of வேண்டுமான்.Woman of Vēḷir-tribe;
வேளிர்குலப் பெண். வேண்மாள் அந்துவஞ் செள்ளை (பதிற்றுப். 9-ஆம் பதி.).
வேண்மான்
vēṇ-māṉn. <>வேள் + மான்2.Male member of Vēḷir-tribe;
வேளிர் குலத்து மகன். நன்னன் வேண்மான் (அகநா. 97).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3825 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், indispensable, வேண்டும், required, meaning, request, அளவில், vēṇṭi, வேண்டியது, வேண்டிய, desire, வேண்டுமென்று, வேண்மான், tribe, ஐம்பால், vēḷir, குறிக்கும், உரியதாய், வேண்டுநர், எதிர்கால, வேண்மாள், வரும், வினைமுற்று, மூவிடத்திற்கும், இன்றியமையாதது, அந்தக், செய்கிறான், அவன், வேண்டார், வேண்டாமை, குறள், பிரார்த்தித்தல், தேவையான, வேண்டு, vēṇṭu, வேண்டியவன், போதுமான, sufficient, வேள்