சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3815
Word
English & Tamil Meaning (பொருள்)
வெறிப்பாட்டு
veṟi-p-pāṭṭun. <>id.+பாட்டு1.Song sung in veṟi-y-āṭṭu;
வெறியாட்டில் நிகழும் பாடல். (பரிபா. 5, 15, உரை.)
வெறிப்பு
1
veṟippun. <>வெறி4-.1. Dazzle, glare;
கண்கூச்சம். கோல வெறிப்பினான் . . . மாலைக்கண் கொண்டவே (சீவக. 2397).
2. Longing in consequence of privation;
ஏக்கறவு. (W.)
3. Jarring;
கர்ணகடூரம். அந்தப்பாட்டு வெறிப்பாயிருக்கிறது.
4. Drunkenness;
மதுமயக்கம். (W.)
வெறிப்பு
2
veṟippun. <>வெறி5-.Famine;
பஞ்சம். (W.)
வெறிபிடி
-
த்தல்
veṟi-piṭi-v. intr. <>வெறி3+.See வெறிகொள்-.
.
வெறிமலர்
veṟi-malarn. <>id.+.1. Fragrant flower;
வாசனையுள்ள பூ. (திருக்கோ. 96, உரை.)
2. Flower offered to a god;
தெய்வத்துக்குரிய பூ. (திருக்கோ. 96, உரை.)
வெறிமுண்டன்
veṟi-muṇṭaṉn. <>id.+.Mad fellow;
பித்துப்பிடித்த தடியன். Colloq.
வெறியயர்
-
தல்
veṟi-y-ayar-v. intr.<>id.+.See வெறியாடு-. வேலன் வெறியயர் வியன்களம் பொற்ப (அகநா. 97).
.
வெறியன்
1
veṟiyaṉn. <>id.1. Drunkard;
குடிவெறி யுள்ளவன்.
2. Madman;
பயித்தியக்காரன்.
3. Furious person ;
உக்கிரமானவன்.
வெறியன்
2
veṟiyaṉn. <>வெறு-மை.Empty, destitute person;
யாதும் அற்றவன். வெறியரன்றோ குணங்களான் விரிஞ்சன் முதலா மேலானோர் (கம்பரா. உருக்காட்டு. 111).
வெறியாட்டாளன்
veṟiyāṭṭāḷaṉn. <>வெறியாட்டு+.Priest dancing under possession by Skanda;
வெறியாடல் புரியும் வேலன். (பு. வெ. 9, 41, உரை.)
வெறியாட்டு
veṟi-y-āṭṭun. <>வெறி3+.1. Dance of a priest possessed by Skanda;
வேலனாடல். (பு. வெ. 1, 21, தலைப்பு.)
2. Frantic or mad play;
களியாட்டம். வெறியாட்டுக் காளாய் (தாயு. கற்புறு. 2).
வெறியாட்டுப்பறை
veṟiyāṭṭu-p-paṟain. <>வெறியாட்டு+பறை3.Drum of kuṟici tract, used in veṟi-y-āṭṭu;
வெறியாட்டில் முழக்கும் குறிஞ்சிநிலப் பறை. (இறை. 1, பக். 17.)
வெறியாடல்
veṟiyāṭaln. <>வெறியாடு-.See வெறியாட்டு.
.
வெறியாடு
-
தல்
veṟi-y-āṭu-v. intr. <>வெறி3+.To dance under possession by Skanda ;
வெறியாட்டாடுதல்.
வெறியாள்
veṟi-y-āḷn.<> id.+ஆள்2.See வெறியாட்டாளன். (குறுந். 366.)
.
வெறியெடு
-
த்தல்
veṟi-y-eṭu-v. intr. <>id.+.To conduct a veṟi-y-āṭṭu-,
வெறியாட்டு நிகழ்த்துதல். தமர்வெறி யெடுப்புழி அதனை விலக்கக் கருதிய தோழி (ஐங்குறு. 28, உரை).
வெறியோடு
1
-
தல்
veṟi-y-ōṭu-v. intr. <>id.+.1. To be dazzled, as eyes by excessive brilliancy;
ஒளிமிகுதியாற் கண் வெறித்துப்போதல். பலபூண் மின்னாலுங் கண்கள் வெறியோடி விட்டனவே (பாரத. பதினேழாம்போர். 168).
2. To be in despair; to be inconsolable;
ஆற்றாமையுறுதல். (W.)
வெறியோடு
2
-
தல்
veṟi-y-ōṭu-v. intr. <>வெறி6+.See வெறி5-, 1. இல்லம் வெறியோடிற்றாலோ (திவ். பெரியாழ். 3, 8, 1).
.
வெறிவிலக்கல்
veṟi-vilakkaln. <>வெறி3+. (Akap.)See வெறிவிலக்கு. (ஐங்குறு. 247, உரை.)
.
வெறிவிலக்கு
veṟi-vilakkun. <>id.+. (Akap.)Theme of opposing the veṟ,-y-āṭṭu performed with a view to curing a lovesick Woman under a mistaken impression that she is ill;
தலைவிக்குக் காமத்தாலுண்டான நோயை வேறு காரணத்தாலுண்டானதாகக் கொண்டு அந்நோயைத் தணிக்கவேண்டிச் செய்யும் வெறியாட்டைத் தடுத்து நிற்றலைக் கூறும் அகத்துறை. (மாறனலங். 107, உதா. பக். 204.)
வெறு
-
த்தல்
veṟu-11 v. tr.1. To detest, loathe;
அருவருத்தல். வெறுமின் வினைதீயார் கேண்மை (நாலடி, 172).
2. To hate;
பகைத்தல்.
3. To be angry at;
கோபித்தல். (சூடா.)
4. To dislike;
விரும்பாதிருத்தல்.
5. To renounce; to be free from attachments;
பற்றுவிடுதல். வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே (தேவா. 310,10). -intr.
1. To abound;
மிகுதல். (தொல். சொல். 347.) வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் (புறநா. 53).
2. To be afflicted;
துன்பமுறுதல். எதிரேவருமே சுரமே வெறுப்பவொ ரேந்தலோடே (திருக்கோ. 243, உரை).
வெறுக்கவெறுக்க
veṟukka-veṟukkaadv. <>வெறு-+.In a surfeiting measure;
வேண்டாமென்று தள்ளக்கூடியவளவு மிகுதியாக.
வெறுக்கை
1
veṟukkain. <>வெறு-.1. Aversion, loathing;
அருவருப்பு. தாதுண வெறுக்கைய வாகி (ஐங்குறு. 93).
2. Dislike;
வெறுப்பு.
3. Abundance;
மிகுதி. ஒளியொருவர்க் குள்ள வெறுக்கை (குறள், 971).
4. Wealth;
செல்வம். நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் (பதிற்றுப். 55, 4). (பிங்.)
5. Gold;
பொன். (பிங்.)
6. Life-spring;
வாழ்வின்ஆதாரமா யுள்ளது. பரிசிலர் வெறுக்கை (பதிற்றுப். 38, 9).
7. Offering, as to a superior;
கையுறை. தொடைமலர் வெறுக்கை யேந்தி (சீவக. 2708).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3815 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், veṟi, intr, வெறியாட்டு, வெறுக்கை, வெறி3, வெறு, āṭṭu, திருக்கோ, வெறியாடு, skanda, ஐங்குறு, த்தல், வெறியாடல், dance, akap, பதிற்றுப், பிங், dislike, வெறிவிலக்கு, ōṭu, possession, வெறியோடு, person, சீவக, வெறி5, veṟippun, வெறிப்பு, வெறியாட்டில், flower, வெறியயர், வெறியாட்டாளன், veṟiyaṉn, வெறியன், வேலன், priest