சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3740
Word
English & Tamil Meaning (பொருள்)
வினைவர்
viṉaivarn. <>id.1. Workers, doers, agents;
தொழிலினர். வேந்துபிழைத் தகன்ற வினைவராயினும் (பெருங். உஞ்சைக். 38, 94).
2. Mediators;
சந்துசெய்விப்பவர். நட்பாக்கும் வினைவர்போல் (கலித். 46, 8).
3. Ministers;
அமைச்சர். கொலையஞ்சா வினைவரால் (கலித். 10).
வினைவலம்படு
-
த்தல்
viṉai-valam-paṭuv. intr. <>id.+ வலம்1 +.To bring a business to a successful conclusion;
எடுத்துக்கொண்ட செயலை வெற்றிபெறச் செய்தல். வினைவலம்படுத்த வென்றியொடு (அகநா. 74).
வினைவலர்
viṉai-valarn. <>id.+ வலன்2.1. Those who do an act under orders, as of a king;
பிறரேவிய காரியங்களைச் செய்வோர். அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் (தொல். பொ. 23).
2. Skilled workmen;
தொழில்செய்வதில் வல்லமையுள்ளோர். வினைவல ரியற்றிய ... புகையகல் (பெருங். உஞ்சைக். 42, 88).
வினைவலி
viṉai-valin. <>id.+ வலி1.1.The difficulty of an undertaking, as besieging or capturing a fort;
அரண்முற்றுதல் அரண்கோடல் முதலிய தொழில்களின் அருமை. வினைவலியுந் தன் வலியும் (குறள், 471).
2. See வினைத்திட்பம். (W.)
.
3. The power of karma;
ஊழ்வினையின் வலிமை.
வினைவழிச்சேறல்
viṉai-vaḻi-c-cēṟaln. <>id.+ வழி + செல்-.(Akap.) See வினைவயிற் பிரிதல். (யாழ். அக.)
.
வினைவளர்
-
த்தல்
viṉai-vaḷar-v. intr. <>id.+.To create ill-will, enmity or spite;
பகைவிளைத்தல். (W.)
வினைவாங்கு
-
தல்
viṉai-vāṅku-v. intr. <>id.+.To indicate the line of action; to direct the affairs, as of a state;
காரியத்தைப் புலப்படுத்தல். பேதையோன் வினைவாங்க (கலித். 27).
வினைவிநாசன்
viṉai-vinācaṉn. <>id.+.God, as the destroyer of karma;
[தீவினையை யொழிப்பவன்] கடவுள். (யாழ். அக.)
வினைவிளை
-
த்தல்
viṉai-viḷai-v. intr. <>id.+.To do a wicked act;
பொல்லாங்கு செய்தல். (யாழ். அக.)
வினோத்தி
viṉōttin. <>vinōkti. (Rhet.)A figure of speech in which a thing or fact is said to lose its importance if it is not accompanied by another thing or fact;
ஒரு முக்கியப் பொருள் பிறிதொரு முக்கியப்பொருளோடு பொருந்தாதாயின் முக்கியத் தன்மையைப் பெறாதெனக் கூறும் அணிவகை. (மாறனலங். 236, பக். 355.)
வினோதக்கூத்து
viṉōta-k-kūttun. <>வினோதம் +. (Nāṭya.)Dance performed in the presence of kings in celebration of their victories;
அரசர் முன்பு நடிக்கும் வெற்றிக்கொண்டாட்டக் கூத்து. (சிலப். 3, 13, உரை, பக். 81.)
வினோதபைரவம்
viṉōta-pairavamn. <>vinōda +.A medicinal pill ;
மருந்துக்குளிகை வகை. (பதார்த்த. 1209.)
வினோதம்
viṉōtamn. <>vinōda.1. See விநோதம். அரனுரைத்த சொல் வினோதம் (கம்பரா. அகலிகை. 51). வாளியின் வினோத முறவெய்தனன் (பாரத. வாரணா. 60).
.
2. Desire;
அவா. (யாழ். அக.)
3. Quaintness, quixotism;
இயற்கைக்கு மாறானது. (யாழ். அக.)
வினோதன்
viṉōtaṉn. <>vinōda.1. Votary, devotee;
ஒன்றில் ஈடுபட்டு அதிலேயே பொழுதுபோக்குபவன். (யாழ். அக.)
2. Jolly person ;
உற்சாகி.
வினோதி
1
-
த்தல்
viṉōti-11 v. intr. <>வினோதம்.To be playful;
விளையாடுதல். மெல்ல நடந்து வினோதித்து (திருக்காளத். பு. தாருகா. 17).
வினோதி
2
viṉōtin. <>vinōdin.See வினோதன். (யாழ். அக.)
.
விஜ்ஞானம்
vijāṉamn. <>vi-jāna.See விஞ்ஞானம். (மணி. 30, 16, அரும்.)
.
விஜ்ஜதை
vi-j-jatain. <>வி2 +. [K.ijjate.]See விஜ்ஜோடு.
.
விஜ்ஜோடு
vi-j-jōṭun. <>id.+. [T.vijjōdu, K. ijjōdu.]That which does not match or equal, in a pair;
இணையொவ்வாதது. (C.G.)
விஜய
vijayan. <>Vijaya.The 27th year of the Jupiter cycle. See விசய.
.
விஜயகேசரி
vijaya-kēcarin.<>vijaya +.One who is a great victor;
வெற்றியில் மிக்கோன்.
விஜயதசமி
vijaya-tacamin. <>id.+ dašamī.The 10th titi of the bright fortnight after the mahālaya amāvāsyā.
See விசயதசமி.
விஜயம்
vijayam.n. <>vijaya.See விசயம்2.
.
விஜயயாத்திரை
vijaya-yāttirain. <>id.+.1. Festival to a God or Goddess on the vicayatacami day for the success of devotees in all their affairs;
காரியங்கள் கைகூடுமாறு விசயதசமியன்று தெய்வத்தை நோக்கிக் கொண்டாடப்படும் திருவிழா.
2. The procession of the idol on the vicaya-tacami day towards a vaṉṉi tree, as a sign of victory;
விசயதசமியன்று வெற்றிக்குறியாக வன்னிமரமுள்ள. இடத்திற்குக் கோயில்மூர்த்தியை எழுந்தருளச்செய்யும் ஊர்கோலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3740 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், viṉai, யாழ், vijaya, intr, வினோதம், த்தல், vinōda, கலித், வினோதன், viṉōta, விஜ்ஜோடு, விசயதசமியன்று, fact, வினோதி, affairs, வினைவலர், செய்தல், பெருங், பாங்கினும், karma, உஞ்சைக், பொருள், thing