சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3620
Word
English & Tamil Meaning (பொருள்)
வாவு
2
vāvun. <>உவவு.1. The new moon day;
அமாவாசை.
2. The full moon day;
பௌர்ணமி.
3. Holiday, school holiday, vacation, as given especially on the new moon and the full moon days;
விடுமுறை நாள்.
வாவுக்காசு
vāvu-k-kācun. <>வாவு+காசு3.Holiday gift of coins of small value presented by the pupil to the teacher on the new moon and the full moon days, in village schools;
கிராமப்பள்ளிக்கூடங்களிலே வரவுநாட்களில் மாணாக்கர் ஆசியர்க்கு உதவும் பணம்.
வாவுத்தன்
vāvuttaṉn. cf. vāvuṭa.Prow of a vessel;
தோணியின் முன்பக்கம். (W.)
வாவுமுறை
vāvu-muṟain. <>வரவு+.Vacation;
விடுமுறை. Loc.
வாழ்
-
தல்
vāḻ-4 v. intr. [T. K. M. Tu. vāḷu.]1. To be, exist;
இருத்தல். (W.)
2. To live;
சீவித்தல். வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை (குறள், 1124).
3. To flourish, prosper;
செழித்திருத்தல். வாழ்க வந்தணர் வானவ ரானினம் (தேவா. 1177, 1).
4. To be happy;
மகிழ்தல். செம்பொற் குன்றினைக்கண்டு வாழ்ந்து (திருவலவா. 61, 18).
5. To live the life of a married woman;
சுமங்கலியாக இருத்தல். Colloq.
6. To shape one's life according to a definite set of rules;
விதிப்படி ஒழுகுதல். தந்திரத்து வாழ்து மென்பார் (ஆசாரக். 35).
வாழ்
vāḻn. <>வாழ்-. T. K. vāḷi.]Regularity, order;
முறைமை. (பிங்.)
வாழ்க்கை
vāḻkkain. <>id.1. Livelihood, living;
சீவிக்கை. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை (குறள், 435).
2.Life-time; career;
வாணாள். நெடுவாழ்க்கை (ஆசாரக். 3).
3. Married life;
இல்வாழ்க்கை. பழியஞ்சிப் பாத்தூ ணுடைத் தாயின் வாழ்க்கை (குறள், 44).
4. Wife;
மனைவி. (யாழ். அக.)
5. Happy state;
நல்வாழ்வுநிலை. (யாழ். அக.)
6. Wealth, felicity, prosperity;
செல்வநிலை. (பிங்.)
7. Village; town;
ஊர். (சூடா.)
8. Agricultural town;
மருதநிலத்தூர். (திவா.)
வாழ்க்கைத்துணை
vāḻkkai-t-tuṇain. <>வாழ்க்கை+துணை1.Wife;
மனையாள். தற்கொண்டான். வளத்தக்காள் வாழ்க்கைத்துணை (குறள்,51).
வாழ்க்கைப்படு
-
தல்
vāḻkkai-p-paṭu-v. intr. <>id.+.To be married; to become a wife;
விவாகமாதல். வாழ்க்கைப்பட்டாள் . . . கயற்கண்ணியே (தனிப்பா. ii, 1, 1).
வாழ்க்கைப்படுத்து
-
தல்
vāḻkkai-p-paṭuttu-v. tr. Caus of வாழ்க்கைப்படு-.To give in marriage ;
கலியாணஞ் செய்து கொடுத்தல். (சீவக. 1490, உரை.)
வாழ்கிறவள்
vāḻkiṟavaln. <>வாழ்-.1. Married woman living with her husband;
கணவனோடு வாழ்பவள். Colloq.
2. Married woman;
சுமங்கலி.
வாழ்ச்சி
vāḻccin. <>id.1. Living;
வாழ்க்கை. நிலையின் வாழ்ச்சியின் (தொல். சொல். 80). நின் தாளிணைக்கீழ் வாழ்ச்சி (திவ்.திருவாய்.3,2,4).
2. Prosperity, wealth, felicity;
செல்வநிலை.
3. Felicity of victory;
வெற்றியாகிய செல்வம். வேந்து மெய்ம்மறந்து வாழ்ச்சி (பதிற்றுப். 56, 7).
வாழ்ச்சிப்படுத்து
-
தல்
vāḻcci-p-paṭuttu-v. tr <>வாழ்ச்சி+.To cause to prosper;
வாழவைத்தல். வாய்மொழி மருங்கினான் அவனை வாழ்ச்சிப் படுத்தலின் (தொல்.பொ. 90, உரை).
வாழ்த்தணி
vāḻttaṇin. <>வாழ்த்து+அணி. (Rhet.)Figure of speech expressing benediction of special benefits desired by the poet for particular persons;
இன்னார்க்கு இன்ன நன்மை இயைகவென்று முன்னியது விரிக்கும் அலங்காரவகை. (தண்டி. 86, தலைப்பு.)
வாழ்த்தாரம்
vāḻttāramn. <>id.+prob. ஆர்1-.Benediction, used in irony;
வாழ்த்து. Loc.
வாழ்த்தியல்
vāḻttiyaln. <>id.+. (Puṟap.)Theme describing the praise bestowed on a chief by a bard;
தலைவனைப் புலவன் வாழ்த்தும் புறத்துறை. (புறநா. 2, துறைக்குறிப்பு.)
வாழ்த்து
-
தல்
vāḻttu-5 v. tr. Caus. of வாழ்-. [K. bāḷisu.]1. To felicitate, congratulate, bless;
ஆசிகூறுதல்.
2. To praise, applaud;
துதித்தல். வாழ்த்த வாயு நினைக்க மடநெஞ்சும் (தேவா, 1203, 7).
3. To sing songs of benediction;
மங்களம் பாடுதல். (யாழ். அக.)
வாழ்த்து
vāḻttun. <>வாழ்த்து-.1. Benediction, felicitation;
ஆசி.
2. Praise;
துதி. அவளுயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி (திவ். இயற். பெரியதிருவந். 40).
3. Invocation or praise of the deity at the beginning of a religious or literary work, one of three maṅkaḷācaraṇai, q.v.;
நூலின் தொடக்கத்துக் கூறப்படும் மங்களாசரணை மூன்றனுட் கடவுளை வாழ்த்துகை. வாழ்த்து வணக்கம் வருபொரு ளிவற்றினென்று ஏற்புடைத்தாகி (தண்டி. 7). (தொல்.பொ.421, உரை).
4. Singing songs of benediction;
மங்களம் பாடுகை. (சங். அக.)
5. See வாழ்த்தணி. (தண்டி. 86.)
.
வாழ்த்துரை
vāḻtturain. <>id.+உரை6.Benediction;
ஆசீர்வாதம். மூத்தவர் பின்னவர்க்கு வாழ்த்துரை பேசல்வேண்டும் (காஞ்சிப்பு. ஒழுக்கப். 12).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3620 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், benediction, வாழ்த்து, married, வாழ்க்கை, வாழ், life, குறள், praise, வாழ்ச்சி, woman, wife, vāḻkkai, தண்டி, தொல், felicity, யாழ், living, full, holiday, விடுமுறை, vāvu, caus, வாழ்க்கைப்படு, paṭuttu, திவ், days, மங்களம், வாழ்த்துரை, songs, vacation, village, வாழ்த்தணி, வாழ்க்கைத்துணை, prosper, வாவு, பிங், ஆசாரக், தேவா, colloq, live, இருத்தல், செல்வநிலை, town, prosperity, intr, wealth, happy