சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3615
Word
English & Tamil Meaning (பொருள்)
வாருண்டம்
1
vāruṇṭamn.A fabulous eight-legged bird.
See எண்காற்புள். (பிங்.)
வாருண்டம்
2
vāruṇṭamn. <>vāruṇda. (யாழ். அக.)1. Excretion from the eyes;
பீளை.
2. Excretion from the ears, wax;
குறும்பி.
வாருணதீர்த்தம்
vāruṇa-tīrttamn. vāruṇa+.See வாருணஸ்நானம். தெண்ணீர் படிந்த துளைந்தாடல் . . . வாருணதீர்த்தம் (கூர்மபு. நித்தியகன்ம. 5).
.
வாருணப்படை
vāruṇa-p-paṭain. <>வாருணம்1+.The mystic arrow whose presiding deity is Varuṇa.
See வருணாஸ்திரம். மூர்த்தமொன்றினில் வாருணப் படையினை முருக்கி (கந்தபு. மூன்றுநாட், 91)
வாருணம்
1
vāruṇamn. <>vāruṇa.1. That which relates to Varuṇa;
வருணனுக்குரியது.
2. West;
மேற்கு. (பிங்.)
3. The 13th of the 15 divisions of a day;
பகல் பதினைந்து முகூர்த்தத்துள் பதின்மூன்றாவது. (விதான. குணாகுண. 73, உரை.)
4. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.;
உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (பிங்.)
5. Sea;
கடல். (பிங்.)
6. A species of horse whose chest or belly is white in colour;
மார்பிலேனும் வயிற்றிலேனும் வெண்மை நிறமைந்த குதிரைவகை. அந்த மைவண்ணப்பரியின்பேர் வாருணமாம் (திருவிளை. நரிபரி. 115).
7. Round-berried cuspidate-leaved lingam tree.
See மாவிலிங்கம்2, 1. வாருண மென்போதில் (காஞ்சிப்பு. சிவ. 61).
வாருணம்
2
vāruṇamn. <>vāruṇī.Spirituous liquor;
கள். (பிங்.)
வாருணஸ்நானம்
vāruṇa-snāṉamv. <>vāruṇa+.Bathing, as in rivers, tanks, etc.;
நதி முதலியவற்றின் நன்னீரில் ஸ்நானஞ் செய்கை. (சித்.சிகா.விபூதி.12, உரை.)
வாருணி
1
vāruṇin. <>vāruṇi.Sage Agastya;
அகத்தியமுனிவன். (அபி. சிந்.)
வாருணி
2
vāruṇin. <>vāruṇī.1. The daughter of Varuṇa;
வருணன் மகள். வருணனாருனை வாருணி யென்ன (காஞ்சிப்பு. வீராட். 44).
2. The consort of Varuṇa;
வருணனது தேவி.
3. See வருணம்2. (சங். அக.)
.
4. The sōma plant;
ஆட்டாங்கொடி. (தைலவ.)
5. The 24th nakṣatra.
See சதயம். (W.)
6. See வாருணம் 1, 2.
.
வாருதி
vārutin.Sal ammoniac;
நவச்சாரம். (சங்.அக.)
வாருவகை
vāruvakain. perh. வார்4.Water;
நீர். (சங்.அக.)
வாரூணி
vārūṇin. <>vāruṇi. (யாழ். அக.)See வாரூணி1.
.
2. The 25th nakṣatra.
See பூரட்டாதி.
வாரெழுத்தாணி
vār-eḻuttaṇin. <>வாரு-+.A kind of iron style for writing;
எழுத்தாணிவகை. (W.)
வாரை
1
vārain. <>வார்1-.1. Bamboo;
மூங்கில். வாரை கான்ற நித்திலம் (கந்தபு .ஆற்று.5).
2. Pole for carrying loads;
காவுதடி. (W.)
3. See வாரி2, 1,2.
.
4. Rafter, beam;
கைமரம். (W.)
5. Anything long and narrow;
நீண்டு ஒடுக்கமானது.
6. Flat fish, brownish or purplish black, attaining 16 in. in length, Settodes crumer;
கருஞ்சிவப்பு நிறமும் 16 அங்குலவளர்ச்சியுமுள்ள மீன்வகை.
வாரை
2
vārain. <>ஆவாரை.Tanner's senna.
See ஆவிரை. (சங்.அக.)
வால்
1
vāln. <>bāla.1. Youth, tenderness;
இளமை. தாலப் புல்லின் வால்வெண் டோட்டு (சிலப். 16, 35)
2. Purity;
தூய்மை. (பிங்.) ஊர்திவால்வெள் ளேறே (புறநா. 1).
3. Whiteness;
வெண்மை. பணிமொழி வாலெயிறு (குறள், 1121).
4. Goodness;
நன்மை. வாலிதை யெடுத்த வளிதருவங்கம் (மதுரைக். 536).
5. Greatness;
பெருமை. (பிங்.) அரக்கர்தம் வாலிய புரமூன்று மெரித்தான் (தேவா. 1049, 9).
6. Abundance;
மிகுதி. (சூடா.) வாலிதின் விளைந்தன வைவனம் வெண்ணெல் (மலை படு. 115).
வால்
2
vāln. <>vāla.1. Tail;
விலங்குகளின் பின்புறம் நீண்டு தொங்கும் உறுப்பு. எறிந்தவேன்மெய்யதா வால்குழைக்கு நாய் (நாலடி, 213).
2. Anything long or elongate;
நீளமானது.
3. Mischievous person;
¢சேட்டை செய்பவ-ன்-ள்.
4. Mischief;
சேட்டை. Loc.
வால்
3
vāln.See வாலுழுவை. வட்டவாலுடனே கூட்டி (பாலவா. 774).
.
வால்கரண்டி
vāl-karaṇṭin. <>வால்2+.See வாற்கிண்ணம். Loc.
.
வால்கனி
vālkaṉin. <>U.. valākhāṇa.Balcony;
மேன்மாடத்தில் முன்புறமாக நீண்டுள்ள அட்டாலை .
வால்கிண்ணம்
vāl-kiṇṇamn. <>வால்2+.See வாற்கிண்ணம். Loc.
.
வால் தரகு
vāl-tarakun. <>id.+Tax on cattle, as calculated at so much per tail;
கால் நடைகளுக்கு விதிக்கும் வரி. Loc.
வால் நட்சத்திரம்
vāl-naṭcattiramn. <>id.+.Comet;
தூமகேது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3615 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பிங், vāruṇa, வால், vāl, varuṇa, வாருணி, வாரை, வாருணம், vāln, வால்2, nakṣatra, vārain, anything, வாற்கிண்ணம், tail, நீண்டு, vāruṇi, vāruṇī, வாருணதீர்த்தம், excretion, யாழ், vāruṇṭamn, வாருணஸ்நானம், கந்தபு, வாருண்டம், காஞ்சிப்பு, வெண்மை, vāruṇamn, vāruṇin