சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3590
Word
English & Tamil Meaning (பொருள்)
வாதாம்
vātām,n. cf. vātāma.See வாதுமை, 1. Madr.
.
வாதாயனம்
vātāyaṉam,n. <>vātāyana.1. Window;
சாளரம். என்றூழ். வாதாயனங்க டொறும் வந்துபுகலின்றே (கந்தபு. நகர்புகு. 47). (பிங்.)
2. Hall; pavilion;
மண்டபம். (யாழ். அக.)
வாதாரி
vātāri,n. <>vātāri.1. Castor plant.
See ஆமணக்கு. (மலை.)
2. Margosa;
வேம்பு. (நாமதீப. 301.)
வாதாவி
vātāvi,n. <>Vātāpi.1. See வாதாபி, 1.
இளவல் வாதாவி யென்போன் (கந்தபு. வில். வாதா. வதைப். 2).
2. Bādāmi, the capital of the Western caḷukyas;
மேலைச்சளுக்கியரின் தலைநகர். வடபுலத்து வாதாவித் தொன்னகரந் துகளாக (பெரிய. பு. சிறுத்தொண். 6).
வாதானுவாதம்
vātāṉuvātam,n. <>vāda + anu-vāda.Argument and reply;
தருக்கத்தில் நிகழும் தடைவிடைகள். (யாழ். அக.)
வாதி
-
த்தல்
vāti-,11 v. tr. <>bādh.1. To torment, affict, trouble;
வருத்துதல். மாவலி வாதிக்க வாதிப்புண்டு (திவ். திருவாய். 7, 5, 6).
2. To hinder, obstruct;
தடுத்தல். தத்தங் குடிமையான் வாதிக்கப்பட்டு (நாலடி, 66).
வாதி
vāti,n. <>bādhin.Tormentor;
வருத்துபவன். அன்றயன் சிரமொன்றற வாதியே (சிவதரு. கோபுர. 223).
வாதி
-
த்தல்
vāti-,11 v. tr. <>vāda.To argue, dispute; to asseverate;
வாதாடுதல்.
வாதி
vāti,n. <>vādin.1. One who advocates;
எடுத்துப்பேசுபவன்.சோற்றுத் துறையர்க்கே வாதியாய்ப் பணிசெய் (தேவா. 391, 4).
2. Disputant, debater;
தருக்கிப்பவன். வாதிகையன்ன கவைக்கதி ரிறைஞ்சி (மலைபடு. 112).
3. Complainant, plaintiff; opp. to pirati-vāti;
வழக்குத்தொடுப்போன்.
4. Scholar who by adducing reasons and quoting authorities confutes the statements of his opponent and establishes his own, one of four pulamaiyōr, q. v.;
புலமையோர் நால்வருள், வாதில் ஏதுவும் மேற்கோளு மெடுத்துக்காட்டிப் பிறர் கோள்மறுத்துத் தன்கொள்கையே நிலைநிறுத்துவோன். (யாப். வி. பக். 514.)
5. Alchemist;
இரசவாதி. தோன்றினன் மனமருள் செய்வதோர்வாதி (கந்தபு. மார்க். 116.)
6. (Mus.) See வாதிஸ்வரம்.
.
வாதிகம்
vātikam,n. <>vātiga.See வாதிங்கணம் (மலை.)
.
வாதிகன்
vātikaṉ,n. prob.vāsa.Scent-manufacturer;
நறுமணப்பண்டங்கள் கூட்டுவோன். வாதிகர் கடைத்தலை வாசச்சுண்ணமும் (பெருங். இலாவாண. 2, 95).
வாதிங்கணம்
vātiṅkaṇam,n. <>vatiṅ-gaṇa.Indian kales.
See சேம்பு, 1. (மலை.)
வாதிப்பு
vātippu,n. <>வாதி1-.Trouble, affliction;
துன்பம். முதலை வலைப்பட்டு வாதிப்புண் வேழம் (திவ். பெரியாழ். 2, 10, 8).
வாதிபம்
vātipam,n.Rattan-palm.
See வஞ்சிக்கொடி. (மலை.)
வாதிஸ்வரம்
vāti-svaram,n. <>vādin+. (Mus.)Key-note of a musical measure;
ஒரு இராகத்தின் முக்கிய ஸ்வரம்.
வாது
-
தல்
vātu-,5 v. tr. cf. vadh.To cut, tear open;
அறுத்தல். வாதுவல்வயிறே வாது வல் வயிறே (தொல். பொ. 79, உரை, பக். 292).
வாது
1
vātu,n. cf. வாத்து4.Branch of a tree;
மரக்கிளை. Loc.
வாது
2
vātu,n. <>vāda [T. vādu.]1. Disputation, discussion;
தருக்கம். வாது செயத் திருவுள்ளமே (தேவா. 865, 2).
2. Quarrel, fight;
சண்டை. குகனை வாதுக்கழைத்ததுவும் (தனிப்பா.i, 76, 150).
3. Case or proceeding in court;
நியாயஸ்தல வழக்கு.
4. Vow;
சபதம். (நாமதீப. 667.)
வாதுமை
vātumai.n. cf. vātāma.1. Common almond, m. tr., Prunus amygdalus;
மரவகை. (L.)
2. Indian almond 1. tr., Terminalia catappa;
நீண்ட மரவகை.
வாதுவன்
vātuvaṉ,n. perh. bādh.1. Groom;
குதிரைப்பாகன். காழோர் வாதுவர் (சிலப். 22, 12).
2. Mahout
யானைப்பாகன். (பிங்.)
வாதுளம்
vātuḷam,n. <>Vātula.An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
சிவாகமம் இருபத்தெட்டனுளொன்று. வாதுள முதலிய தந்திரத் தொகுதி (கந்தபு. சூரனமைச். 129).
வாதுளி
vātuḷi,n. <>vādhūla+.One who belongs to vātūla-gōtra;
வாதூலக்கோத்திரத்தான். கோடி மங்கலம் வாதுளி நற்சேந்தன் (அகநா. 179).
வாகதூகம்
vātūkam,n. perh. vātiga.Copper;
செம்பு. (மலை.)
வாதூலகோத்திரம்
vātūla-kōttiram,n. <>Vādhūla+ gōtra,Name of a gōtra. of Brahmans;
பிராமண கோத்திரங்களுள் ஒன்று.
வாதை
vātai,n. <>bādhā.1. Affliction, torment, distress;
துன்பம். வாதைப்படுகின்ற வானோர் (தேவா. 570, 2).
2. Painful disease;
வேதனை செய்யும் நோய். (பிங்.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3590 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், vāti, வாது, vāda, வாதி, கந்தபு, gōtra, vātu, பிங், தேவா, indian, affliction, துன்பம், vātūla, perh, வாதுளி, வாதிங்கணம், மரவகை, vādhūla, almond, vādin, நாமதீப, வாதாவி, vātāri, யாழ், வாதுமை, த்தல், bādh, vātāma, வாதிஸ்வரம், திவ், trouble, torment, vātiga