சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 352
Word
English & Tamil Meaning (பொருள்)
இழுக்கு
iḻukkun. <>இழுக்கு-. [M. iḻuku.]1. Evil, vice, wickedness;
பொல்லாங்கு. (பிங்.)
2. Disgrace, reproach;
நிந்தை. தன்குலத்துக் கிழுக்குவைத்தான். (W.)
3. Imperfection, flaw, defect;
வழு. இழுக்குடைய பாட்டிற் கிசைநன்று (நல்வ.31).
4. Inferiority, basensss;
தாழ்வு. இழுக்கான பொன்னைப் புடத்தில்வைத்தெடுப்பார்கள்.
5. Forgetfulness;
மறதி. (திவா.)
6. Slippery ground;
வழுக்கு நிலம். நூழிலு மிழுக்கும் (குறிஞ்சிப்.258).
இழுகு
-
தல்
iḻuku-5 v. intr.1. To waft, blow, as the wind;
வீசுதல். தென்ற லிழுக மெலிந்து (கம்பரா ஊர்தேடு. 174).
2. To extend, spread over;
பரத்தல். மழைக்குல மிழுகித் திக்கெலாம் (கம்பரா. இராவணன்வதை. 62).
3. To settle, as particles of dust;
பதல். சீறடி கதுவுந்துக ளிழுகப் பெற்றனன் (உபதேசகா. சூராதி. 73).
4. To procrastinate, linger; to be tardy; -tr. [K. eḻavu, M. iḻu.] cf. இழிசு-.To daub; to smear, rub over, as mortar;
தாமதித்தல். (J.) பூசுதல். வெண் சுதை யிழுகிய மாடத்து (மணி. 6, 43).
இழுகுணி
iḻukuṇin. <>இழுகு-+. (W.)1. Procrastinating person, sluggard;
சோம்பேறி.
2. Miser;
உலோபி.
இழுகுபறை
iḻuku-paṟain. <>id.+.Small drum shaped like an hour-glass;
துடிப்பறை. (அகநா. 19, உரை.)
இழுங்கு
iḻuṅkun. prob. இழுங்கு-.Separation, withdrawal;
நீங்குகை. (சீவக. 3093, உரை.)
இழுத்துக்கொண்டுநில்(ற்)
-
த(ற)ல்
iḻuttukkoṇṭu-nil-v. intr. <>இழு-+.To pull against; to draw away from each other, as refractory oxen in yoke;
இகலிமாறுபடுதல். Colloq.
இழுத்துப்பறி
-
த்தல்
iḻuttu-p-paṟi-v. <>id.+. tr.To take away by force;
வலிந்து கொள்ளுதல். அடர்ந்தியம னிழுத்துப்பறிக்கில் (அருட்பா. 5, வேட்கை, 4).
1. To put forth great and protracted effort;
பெரும்பிரயாசப்படுதல். இழுத்துப்பறித்து அந்தக் காரியம் நடந்தது.
2. To struggle, against, contend;
போராடுதல். அவனோடு இழுத்துப்பறித்துக்கொண்டுநிற்கிறான்.
இழுத்துவிடு
-
தல்
iḻuttu-viṭu-v. tr. <>id.+. Colloq.1. To protract, delay, continue putting off indefinitely;
காரியத்தை நீட்டித்து விடுதல்.
2. To drag, as into court;
வலிந்து தொடர்புண்டாக்குதல். அவனை அந்த வழக்கில் இழுத்துவிட்டார்கள்.
3. To make public, as one's faults;
வெளிப்படுத்துதல். இரகசியத்தை யெல்லாம் இழுத்து விட்டான்.
4. To bring about, cause, produce;
புதிதாய் உண்டாக்குதல். இம்மருந்து வயிற்றுவலியை இழுத்துவிட்டது.
இழுது
iḻutun. [M. viḻutu.]1. Butter;
வெண்ணெய். இழுதார்மென் பள்ளிமேல் (சீவக. 1576).
2. Ghee;
நெய். இழுதமை யெரிசுடர் விளக்கு (சீவக. 2630).
3. Fat, grease;
நிணம். இழுதுடை யினமீன் (கம்பரா. வருண. 29).
4. Honey;
தேன். இழுதார் . . . பூ (சீவக.3137).
5. Thick semi-liquid substance;
குழம்பு. சேறிழுது செய்யினுள் (பெரியபு. திருநாட்.12).
இழுதை
iḻutain. prob. இழி-.1. Ignorance;
அறிவின்மை. இழுதை நெஞ்சமி தென்படுகின்றதே (தேவா. 1203, 8).
2. Devil;
பேய். (சங். அக.)
3. Untruth, falsehood;
பொய். (சங். அக.)
இழுப்பறை
iḻuppaṟain. <>இழுப்பு+அறை.Drawer;
செருகுபெட்டியின் அறை. (W.)
இழுப்பாட்டம்
iḻuppāṭṭamn. <>id.+.1. Tardiness, procrastination, lingering;
கால தாமதம்.
2. Uncertainty;
நிச்சயமின்மை. (J.)
இழுப்பாட்டியம்
iḻuppāṭṭiyamn. <>id.+.See இழுப்பாட்டம். (J.)
.
இழுப்பாணி
1
iḻuppāṇin. <>id.+ ஆள்.One who delays or postpones; a lingerer;
தாமதிப்போன். (J.)
இழுப்பாணி
2
iḻuppāṇin. <>id.+āṇi.Movable peg which fastens the yoke to the beam of the plough;
ஏர்க்காலை நுகத்திற் பூட்டும் முளை. (J.)
இழுப்பு
iḻuppun. <>இழு-. [T. īdupu.]1. Drawing, pulling;
இழுக்கை.
2. Attraction;
கவர்ச்சி.
3. Spasm, convulsion;
இசிவுநோய்.
4. Asthma;
சுவாசகாசம். (தைலவ. தைல. 117.)
5. Force of a current of water;
நீரிழுப்பு.
6. Procrastination, delay;
காலதாமதம். காரியம் இன்னும் இழுப்பிலே யிருக்கிறது.
7. Deficiency, insufficiency;
குறைவு. செலவுக்குப் பணம் இழுப்பாயிருக்கிறது.
8. Doubtfulness, uncertainty;
நிச்சயமின்மை. அவன் வார்த்தை இழுப்புத்தான்.
இழுப்புப்பறிப்பா
-
தல்
iḻuppu-p-paṟippā-v. intr. <>id.+.1. To be in a state of scuffling and struggling; to be in a problematical or unsettled condition;
போராட்டமாதல்.
2. To be scarcely enough;
போதியதும் போதாததும் ஆதல்.
இழுப்பும்பறிப்புமா
-
தல்
iḻuppum-paṟippumā-v. intr. <>id.+.See இழுப்புப்பறிப்பா-
.
இழுப்புமாந்தம்
iḻuppu-māntamn. <>id.+.Disorder of digestion in children accompanied by fits;
மாந்தவகை. (சீவரட்.)
இழுபறி
iḻu-paṟin. <>id.+.Scuffle, struggle;
போராட்டம். அவனோடு பெரிய இழுபறியாயிருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 352 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சீவக, intr, கம்பரா, iḻuku, procrastination, இழுப்பாட்டம், இழுப்பு, uncertainty, இழுதை, delay, இழுப்பாணி, iḻuppu, இழுப்புப்பறிப்பா, iḻuppāṇin, அவனோடு, நிச்சயமின்மை, வலிந்து, இழுங்கு, prob, iḻu, over, இழுகு, yoke, colloq, காரியம், இழுக்கு, force, iḻuttu, struggle