சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3370
Word
English & Tamil Meaning (பொருள்)
மையம்பாய்
-
தல்
maiyam-pāy-v. intr. <>மையம்1+.To oscillate about the middle point, as the index of a balance;
இருபக்கமுஞ் சாய்தலால் ஒவ்வாமல் நிற்றல். (யாழ். அக.).
மையமண்டபம்
maiya-maṇṭapamn. <>id. +.Building or hall in the middle of a temple tank;
தெப்பக்குளத்தின் நடுவில் அமைந்த மண்டபம். Loc.
மையல்
maiyaln. <>மை-.1. Infatuation of love;
காமமயக்கம். மையல் செய்தென்னை மனங்கவர்ந்தானே யென்னும் (திவ். திருவாய். 7, 2, 6).
2. Madness;
.
3. Overwhelming pride, due to rank, wealth, etc.;
செல்வம் முதலியவற்றால் வரும் செருக்கு. மையல் . . . மன்னன் (சீவக. 589).
4. Must of an elephant;
யானையின் மதம். வேழ மையலுறுத்த (பெருங். உஞ்சைக். 37, 232).
5. Purple stramony.
See கருவூமத்தை. (மலை.)
மையலஞ்சந்தை
maiyala-cantain.The second day in the holding of a fair or market;
சந்தைநடக்கும் இரண்டாம் நாள் (W.)
மையலவர்
maiyalavarn. <>மையல்.Person of deranged minds;
பித்தர். மையலவர் போல மனம் பிறந்த வகை சொன்னார் (சீவக. 2013).
மையலார்
maiyalārn. <>id.1. Magicians;
மாயவித்தைக்காரர். மண்மயக்கு மயக்குடைமையலார் (இரகு. யாகப். 35).
2. See மையலவர்.
.
மையலி
maiyalin. <>id.Witch;
மாயவித்தைக்காரி. (யாழ். அக.)
மையவாடி
1
maiya-vāṭin. prob. மையம்1+.Place hedged around with thorns;
முள் வேலியுள்ள இடம். (யாழ். அக.)
மையவாடி
2
maiya-vāṭin. <>மையம்2+.Burial-ground;
இடுகாடு. Muham.
மையன்மா
maiyaṉ-mān. <>மையல்+மா2.Elephant;
யானை. (இலக். அக.)
மையன்மை
maiyaṉmain. <>id.See மையல், 1, 2. மையன்மை செய்து (திவ். பெரியாழ். 2, 3, 3).
.
மையனோக்கம்
maiyaṉōkkamn. <>id. + நோக்கம்.Mournful look;
துக்கப் பார்வை மையனோக்கம்பட வருமிரக்கம் (தொல். பொ. 260, உரை).
மையா
1
mai-y-ān. <>மை2+ஆ8.Barren cow;
மலட்டுப்பசு. மையாதாங் காத்தோம்பி (அறநெறி. 38).
மையா
2
-
த்தல்
mai-yā-12 v. intr. prob. id. + யா-.1. To be perplexed;
மயங்குதல். மலர் நாணின் மையாத்தி நெஞ்சே (குறள், 1112).
2. To become dim;
ஒளிமழுங்குதல். விண்மே லொளியெல்லா மையாந் தொடுங்கி (பு. வெ. 9, 13).
3. To look wan; to look deserted;
பொலிவழிதல். மாந்தரென்பவ ரொருவருமின்றி மையாந்த வந்நகர் (காஞ்சிப் பு. நகரேற். 101).
மையாடு
-
தல்
mai-y-āṭu-v. intr. <>id. +.1. See மையோலைபிடி-. ஐயாண்டெய்தி மையாடி யறிந்தார் கலைகள் (சீவக. 2706).
.
2. To be blackened, as with poision;
கருமையாதல். மையாடிய கண்டன் (தேவா. 303, 1).
மையான்
mai-y-āṉn. <>id. + ஆன்1.Buffalo, as black;
எருமை. இருணிற மையான் (குறுந். 279).
மையிடு
-
தல்
mai-y-iṭu-v. intr. <>id. +.1. To paint the eyes with collyrium;
கண்ணுக்கு அஞ்சனமெழுதுதல். வடிவேல் விழிக்குமையிட்டாள் (விறலிவிடு.).
2. To apply magic pigment to one's eyes or palm for obtaining a vision of stolen goods or hidden treasure;
புதைபொருள் முதலியவற்றைக் கண்டுபிடிக்க உள்ளங்கையிலேனும் கண்களிலேனும் மந்திரமை போடுதல்.
மையிருட்டு
mai-y-iruṭṭun. <>id. +.Pitch darkness;
காரிருள். Colloq.
மையிருள்
mai-y-iruḷn. <>id. +.See மையிருட்டு. கருகு மையிருளின் கணம் (பெரியபு. இளையான். 15).
.
மையிழுது
mai-y-iḻutun. <>id. +.1. Collyrium, eye-salve;
அஞ்சனவிழுது. மையிழு திழுகி (புறநா. 281).
2. Fat of sheep;
ஆட்டு நிணநெய். (புறநா. அரும்.)
மையுடை
mai-y-uṭain. <>id. + உடை5.Black babul.
See கருவேல். (தைலவ. தைல.)
மையூட்டு
-
தல்
mai-y-ūṭṭu-v. intr. <>id. +.1. See மையிடு-, 1. (W.)
.
2. To ink a written ōla;
ஓலைக்கு மைதடவுதல்.
மையெழுத்து
mai-y-eḻuttun. <>id. +.Writing, in ink;
மையால் எழுதும் எழத்து. மையெழுத்தூசியின் மாண்டதோர் தோட்டிடை . . . கரந்தெழுத்திட்டாள் (சீவக. 1767).
மையெழுது
-
தல்
mai-y-eḻutu-v. intr. <>id. +.See மையிடு-, 1. மையெழுதிப் பொட்டெழுதி (கூளப்ப. 132).
.
மையொற்றி
mai-y-oṟṟin. <>id. +.Blotting paper;
எழதுமையை ஒற்றும் காகிதம். Mod.
மையோலைபிடி
-
த்தல்
mai-y-ōlai-piṭi-v. intr. <>மை2+ஓலை +.To handle an ōla written and inked, in commencing one's study;
கற்கத் தொடங்கும்போது மைதடவிய எழத்துள்ள ஓலையைக் கைக்கொள்ளுதல். ஜயாட்டை நாளை எண்ணாகப் பெற்று மையோலை பிடித்துக் கலைகள் கற்றார் (சீவக. 2706, உரை). மையோலை பிடித்த இளைய புலவரது (பரிபா. 11, 88, உரை).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3370 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், intr, மையல், சீவக, மையிடு, யாழ், மையலவர், maiya, மையோலை, black, மையான், eyes, collyrium, கலைகள், மையிருட்டு, written, புறநா, மையன்மை, elephant, திவ், middle, மையம்1, மையவாடி, vāṭin, த்தல், மையா, prob, மையோலைபிடி