சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3300
Word
English & Tamil Meaning (பொருள்)
முறைக்கட்டு
muṟai-k-kaṭṭun. <>முறை+கட்டு.Marriage between persons of specific relationship, as being accordance with the caste rules ;
சாதிவழக்கத்திலுள்ள உறவுமுறைப்படிபுரியும் விவாகம்.(J.)
முறைக்காய்ச்சல்
muṟai-k-kāyccaln. <>id.+.Intermittent fever ;
இடைவிட்டு முறையக வரும் சுரம். முறைக்காய்ச்ச றப்பாதவிடமாய் (அறப். சத. 49).
முறைக்காரன்
muṟai-k-kāraṉn. <>id.+.See முறைகாரன்
.
முறைக்காற்று
muṟai-k-kāṟṟun. <>id.+.Trade winds; monsoon ;
பருவக்காற்று. (J.)
முறைகாரன்
muṟai-kāraṉn. <>id.+.1. One employed to attend to a job, by turns;
முறைப்படி வேலைபார்ப்போன். (கோயிலொ. 78.)
2. See முறைமாப்பிள்ளை. Colloq.
.
3. One who is entitled to an office, as in a temple;
கோயில் முதலியவற்றில் வேலைசெய்யும் உரிமையுடையவன். (சங். அக.)
முறைகேடு
muṟai-kēṭun. <>id.+.1. Injustice;
நீதித்தவறு.
2. Unbecoming act;
தகுதியற்ற செயல். (W.)
3. Irregularity, disorder;
ஒழுங்கீனம். Loc.
4. Depravity, indecency;
துர்நடத்தை. (W.)
முறைச்சுரம்
muṟai-c-curamn. <>id.+.See முறைக்காய்ச்சல்
.
முறைசிற
-
த்தல்
muṟai-ciṟa-v. intr. <>id.+.To excel;
ஒன்று ஒன்றனிற் சிறந்துவருதல். நுவலுங் காலை முறைசிறந் தனவே (தொல். பொ. 3).
முறைசெய்
-
தல்
muṟai-cey-v. tr. <>id.+.1. To do justice;
இராசநீதி யளித்தல். முறைசெய்து காப்பாற்று மன்னவன் (குறள், 388).
2. To punish, as the guilty;
தண்டித்தல். கழுவிலேற்றி முறைசெய்க வென்று கூற (பெரியபு. திருஞான. 853).
முறைசெய்வோர்
muṟai-ceyvōrn. <>id.+.Executive officers;
கட்டளை நிறைவேற்றும் ஏவலாளர். வேந்தன்...விட்டனன் முறைசெய்வோரை (திருவாலவா. 13, 10).
முறைத்தண்ணீர்
muṟai-t-taṇṇīrn. <>id.+.See முறைநீர். Loc.
.
முறைத்துப்பார்
-
த்தல்
muṟaittu-p-pār-v. <>முறை-+. intr.To stare;
ஏறவிழித்து நோக்குதல் --intr.
1. To stare in bewilderment, as cattle, horses;
குதிரை முதலியன வெருண்டு நோக்குதல். (W.)
2. See முறை-, 2.
.
முறைநிரனிறை
muṟai-niraṉiṟain. <>முறை+. (Rhet.)Arrangement of a series of verbs in the same order as their respective nouns, opp. to etir-niraṉiṟai;
பெயர்களை நிறுத்த முறைக்கேற்ப அவற்றிற்குரிய வினைமுதலியவற்றை அடைவே நிறுத்துகை. (மாறனலங். 172.)
முறைநிலைப்பெயர்
muṟai-nilai-p-peyarn. <>id.+. (Gram.)See முறைப்பெயர். (தொல். சொல். 165.)
.
முறைநீர்
muṟai-nīrn. <>id.+.Water allowed to irrigate fields, in turn or in a regulated manner;
வயலுக்கு முறைப்படிவிடப்படும் பாசனநீர். (C. G.)
முறைப்படு
-
தல்
muṟai-p-paṭu-v. intr. <>id.+.1. To be in order; to be systematised;
அடைவுபடுதல். முறைப்படச் சூழ்ந்து (குறள், 640).
2. To complain;
முறையிடுதல். அழியச் செய்யா நின்றார்களென்று...முறைப்பட்டால் (திவ். திருப்பா. 11, திவ். பக். 127).
முறைப்பாடு
muṟaippāṭun. <>முறைப்படு- [T. mura.]1. See முறையீடு. பேய்முறைப்பாடு (தக்கயாகப். 7-ஆம் உறுப்பு).
.
2. Duty, tax;
அரசிறை. (Insc.)
முறைப்பாடுதீர்
-
த்தல்
muṟaippāṭu-tīr-v. intr <>முறைப்பாடு+.To become reconciled to each other and resume friendly relations in the presence of a deity ;
இருவர் தமக்குள்ள விரோதத்தைத் தெய்வத்தின்முன் தீர்த்துக்கொண்டு சிநேகமாதல். Loc.
முறைப்பு
muṟaippun. <>முறை-. [T. K. muri, M. murai, Tu. murei.]1. Stiffness, as of a corpse;
விறைப்பு. முறைப்பு ஏறவில்லை. Colloq.
2. High price, as of goods;
விலையின் ஏற்றம். Loc.
3. Haughtiness; impudence;
செருக்கு. (W.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3300 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், muṟai, intr, முறை, த்தல், நோக்குதல், order, முறைப்படு, முறைப்பு, முறைப்பாடு, திவ், stare, தொல், kāraṉn, முறைக்காய்ச்சல், முறைகாரன், colloq, குறள், முறைநீர்