சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3220
Word
English & Tamil Meaning (பொருள்)
முக்குழிச்சட்டி
mu-k-kuḻi-c-caṭṭin. <>id.+குழி+.A pan with three depressions for baking cakes in oil;
பணிகாரஞ்சுடும் மூன்று குழியுள்ள சட்டிவாகை. Loc.
முக்குழிப்பாய்ச்சு
-
தல்
mu-k-kuḻi-p-pāyccu-v. tr. <>id.+id.+.1. To transplant seedlings in triangular shapes;
முக்கோண வடிவாக நடவு அமையும்படி நாற்று நடுதல். Loc.
2. To entrap and ruin;
தந்திரத்தால் கேட்டுக்குள்ளாக்குதல். அவனை முக்குழிப்பாய்ச்சிவிட்டான். Loc.
முக்குளம்
1
mu-k-kuḷamn. <>id.+.The confluence of the rivers, the Jumna, the Sarasvatī and the Ganges;
கங்கை யழனை சரசு வதிநதிகள் கூடுமிடம். (W.)
முக்குளம்
2
mukkuḷamn.The 20th nak-ṣatra.
See முற்குளம். (W.)
முக்குளி
1
-
த்தல்
mukkuḷi-v. intr. prob. முங்கு- + குளி-. [T. pukkiḷintsu.]To dive;
முழுகுதல். (திருச்செந். பிள்ளை. செங்கீ. 10).
முக்குளி
2
mukkuḻin.Large-flowred purslane.
See கோழிமுளையான். (பதார்த்த. 607.)
முக்குளிப்பான்
mukkuḷippāṉn. prob. முக்குளி-.1. Dabchick, a small grebe, Podiceps philippensis;
சிறுபறவைவகை. (W.)
2. A kind of disease;
நோய்வகை. (சங். அக.)
முக்குற்றங்கடிந்தோன்
mukkuṟṟaṅ-kaṭintōṉn. <>முக்குற்றம்+.The Buddha, as having eradicated mukkuṟṟam;
[முக்குற்றத்தையும் ஒழித்தவன்] புத்தன். (திவா.)
முக்குற்றம்
mu-k-kuṟṟamn. <>மூன்று+.The three evils pertaining to the soul, viz., kāmam, vekuḻi, mayakkam;
காமம் வெகுளி மயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்கள். (பிங்.) முக்குற்ற நீக்கி (நாலடி, 190).
முக்குறுணிப்பிள்ளையார்
mu-k-kuṟuṇi-p-piḷḷaiyārn. <>id.+ குறுணி+.See முக்குறுணியரிசிப்பிள்ளையார்.
.
முக்குறுணியரிசிப்பிள்ளையார்
mu-k-kuṟuṇi-y-arici-p-piḷḷaiyārn. <>id.+.An image of Gaṇēša to whom an offering prepared of three kuṟuṇi of rice is make;
மூன்றுகுறுணியரிசி சமைத்து நிவேதிக்கப்பெறும் விநாயகமூர்த்தி.
முக்குறும்பு
mu-k-kuṟumpun. <>id.+.See முக்குற்றம். காம முதலா முக்குறும்பற (கம்பரா. விராதன். 2).
.
முக்கூட்டரத்தம்
mukkuṭṭarattamn. <>முக்கூட்டு+அரத்தம்1.Red colour produced by chewing betel, arecanut and lime;
வெற்றிலை பாக்குச் சுண்ணாம்புகளை மெல்லுதலால் உண்டாஞ் செந்நிறம். முக்கூட்டரத்த வொண்பசை விலங்கி (பெருங்.நரவாண.1, 205).
முக்கூட்டு
mu-k-kūṭṭun. <>மூன்று+கூட்டு.1. A medicine compounded of three drugs;
மூன்று சரக்குக்களாலாகிய மருந்து. கைபுனைந்தியற்றிய முக்கூட்டமிர்தும் (பெருங். இலாவாண. 4, 19).
2. Oven, as formed of three stones or lumps of earth placed triangularly;
[மூன்றுகட்டிகளைக் கூட்டியமைத்தது] அடுப்பு. (W.)
3. The 2nd nakṣatra.
See பரணி. (பிங்.)
4. See முக்கூட்டேண்ணைய். Loc.
.
முக்கூட்டுநெய்
mu-k-kūṭṭu-neyn. <>முக்கூட்டு+.See முக்கூட்டெண்ணெய். Loc.
.
முக்கூட்டெண்ணெய்
mukkūṭṭeṇṇeyn. <>id.+.A mixture of ghee, castor oil and gingili oil;
பசுவினெய் ஆமணக்கெண்ணெய் நல்லெண்ணைய் ஆகிய மூன்றுஞ் சேர்ந்த மருந்தெண்ணைய். (பதார்த்த. 163.)
முக்கூடல்
mu-k-kūṭaln. <>மூன்று+கூடு-.1. A place where three rivers meet, generally considered sacred;
மூன்றுநதிகள் கூடும் புண்ணியத்துறை. திருமுக்கூட வென்றிசைப்ப (கருவூர்ப்பு. ஆமிரா. 45).
2. A shrine in Tinnevelly District at the confluence of the Tāmiraparuṇi, the Cittirānati and the Uppōtai, sacred to Viṣṇu;
திருநெல்வேலி ஜில்லாவில் சித்திராநதியும் உப்போடையும் நாமிரபருணியுடன் கூடும் இடத்துள்ளதோர் விஷ்ணுஸ்தலம்.
முக்கூடற்பள்ளு
mukkūṭaṟ-paḷḷun. <>முக்கூடல்+.A paḷḷu poem on Viṣṇu at Mukkuṭal, by Eṉṉayiṉā-p-pulavar, 17th cent.;
முக்குடல் அழகர் பேரில் என்னயினாப்புலவரால் 17-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பள்ளு.
முக்கை
mu-k-kain. <>மூன்று+கை.Three, a term used in games;
மூன்று. Colloq.
முக்கைப்புனல்
mu-k-kai-p-puṉaln. <>id.+.The three handfuls of water poured out as offerings to the manes;
மூன்றுமுறை குடங்கையால் நீர்முகந்து பீதிரர்க்குச் செய்யும் நீர்க்கடன். குருதியால் முக்கைப்புனலுகுப்பன் (கம்பரா. மாயாசனக. 91).
முக்கோட்டை
mu-k-kōṭṭain. cf. மூக்கோட்டை.A shrine of Durgā who is said to endow Her votaries with poetic power;
வழிபட்டோர்க்குக் கவித்துவ சக்தியை அளிக்கும் துர்க்கையின் கோயில். பாடுவித்த முக்கோட்டை யிருகிறபடி (ஈடு, 4, 5, 2).
முக்கோடியேகாதசி
mu-k-kōṭi-y-ēkāytacin. prob. மூன்று+கோடி+ēkādašī.The 11th titi of the bright fortnight of Mārkaḻi;
மார்கழிமாதத்துச் சுக்கிலபட்சத்தில் வரும் ஏகாதசி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3220 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், three, மூன்று, prob, முக்குற்றம், முக்கூட்டு, முக்குளி, kuṟuṇi, sacred, முக்கூடல், முக்கூட்டெண்ணெய், கூடும், shrine, முக்கோட்டை, viṣṇu, பெருங், முக்குளம், பிங், confluence, பதார்த்த, kuḻi, piḷḷaiyārn, கம்பரா, முக்குறுணியரிசிப்பிள்ளையார், rivers