சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3012
Word
English & Tamil Meaning (பொருள்)
மட்கு
-
தல்
maṭku-5 v. intr.1. To be dim, dusky; to be deprived of lustre, glory or brilliance;
ஒளிமங்குதல். நாகத்தின் வஞ்ச வாயின் மதியென மட்குவான் (கம்பரா. அயோமு.12).
2. To lose strength; to become deficient;
வலிகுன்றுதல். தரியலர் முனைமட்க (பாரத .மீட்சி. 176).
3. To be bewildered;
மயங்குதல். மட்கிய சிந்தை (கம்பரா. தைல. 5).
4. To become mouldy; to be foul or dirty;
அழுக்கடைதல். Colloq.
5. To be destroyed;
அழிதல். மதத்தர் மட்கினர் (பிரபோத. 30, 58).
மட்குகை
maṭ-kukain. <>மண்+.Crucible.
See குகை, 4. (சங். அக.)
மட்சாந்து
maṭ-cāntun. <>id.+.Mudplaster used in building walls;
சுவர்கட்ட உதவும் குழைத்த மண்சேறு. (W.)
மட்சிகம்
maṭcikamn. <>makṣika.Fly;
ஈ. (சங். அக.)
மட்சிகை
maṭcikain. <>makṣikā.See மட்சிகம். (சங். அக.)
.
மட்சுவர்
maṭ-cuvarn. <>மண்+.Mud wall;
மண்சுவர்.
மட்டக்கொம்பன்சுறா
maṭṭa-k-kompaṉ-cuṟān. <>மட்டம்1+.Hammer-head shark, grey, attaining several feet in length, zygaenatudes;
பழுப்பு நிறமுள்ளதும் பலவடிகள் நீண்டு வளர்வதுமான மீன்வகை.
மட்டக்கோல்
maṭṭa-k-kōln. <>id.+.1. Rule, ruler, mason's smoothing rule;
கொத்து வேலைக் கருவிகளி லொன்று. (W.)
2. See மட்டப்பலகை, 1. Loc.
.
மட்டங்கட்டு
-
தல்
maṭṭaṅ-kaṭṭu-v. tr. <>id.+.1. To ascertain the evenness or level of a surface by line or rule;
தளம் முதலியவற்றான் ஏற்றத்தாழ்வைக் கயிறு மட்டப்பலகை முதலியவற்றால் அறிதல்.
2. To balance at the scales;
தராசின் தட்டுக்களைத் தடைப்பொருளிட்டுச் சமனாக்குதல்.
மட்டச்சாவாளை
maṭṭa-c-cāvāḷain. <>id.+. [T. maṭṭasāvada.]Ribbon-fish, burnished silver, attaining 25 in. in length, Trichiurus muticus;
வெண்மை நிறமுள்ளதும் 25 அங்குலம்வரை வளர்வதுமான சாவாளைவகை.
மட்டச்சுவர்
maṭṭa-c-cuvarn. <>id.+.Dwarf wall; breast wall;
சிறுசுவர். (C. E. M.)
மட்டச்சுறா
maṭṭa-c-cuṟān. <>id.+.Shark, grey, very ferocious, attaining 9 ft. in length, Carcharias gangeticus;
சாம்பனிற முடையதும் 9 அடிவரை வளர்வதும் கொடியதுமான சுறாமீன்வகை.
மட்டசுத்தம்
maṭṭa-cuttamn. <>id.+.1. That which is well-proportioned and smoothly formed;
நன்கமைந்தது. (W.)
2. Entireness, absoluteness;
முழுமை. (J.)
மட்டஞ்செய்
-
தல்
maṭṭa-cey-v. tr. <>id.+.1. To level, as the ground; to trim evenly, as a garland;
சமமாக்குதல். கத்திரிகையால் மட்டஞ்செய்த மாலையினை (பு. வெ. 3, 3, கொளு, உரை).
2. To beautify, render attractive;
செவ்விதாகச் செய்தல். மணிச்செய் கடிப்பினை மட்டஞ் செய்து (பெருங். உஞ்சைக். 34, 199).
மட்டத்தரம்
maṭṭa-t-taramn. <>id.+. (W.)1. Inferior quality;
தாழ்ந்த தரம்.
2. Medium quality;
நடுத்தரம்.
மட்டத்தாரை
maṭṭa-t-tārain. <>id.+.Anything smooth-edged, as a diamond;
கூர்மையற்ற விளிம்புடையது. கட்டினவைரம் மட்டத்தாரை அறுநூற்று முப்பத்தாறும் (S. I. I. ii, 78).
மட்டத்தாரைச்சப்படி
maṭṭa-t-tārai-c-cappaṭin. <>மட்டத்தாரை+.Flat diamond with smooth edges;
மழுங்கிய விளிம்புடைய தட்டை வைரம். மட்டத்தாரைச்சப்படி முப்பத்திரண்டும் (S. I. I. ii, 78).
மட்டத்தாரைச்சவக்கம்
maṭṭa-t-tārai-c-cavakkamn. <>id.+.Square-shaped diamond with smooth edges;
மழுங்கிய விளிம்புடையதும் சதுரவடிவுள்ளதுமான வைரக்கல். மட்டாத்தாரைச் கவக்கம் நூற்றறுபத்தொன்பதும் (S. I. I. ii, 78).
மட்டத்திருக்கை
maṭṭa-t-tirukkain. <>மட்டம்1+.Ray-fish, greenish-brown, Rhinoptera adspersa;
செம்பசுமை நிறமுள்ள திருக்கை மீன்வகை.
மட்டத்துருத்தி
maṭṭa-t-turuttin. <>id.+.1. A kind of squirt;
நீர் முதலியன வீசுங்கருவிவகை. சுண்ணத்தையுஞ் சந்தனத்தையும் ... மட்டத்துருத்தியாலும் நெடுந் துருத்தியாலும் சிதற (சீவக. 86, உரை).
2. A kind of hand-bellows;
கம்மக்கருவிவகை. Loc.
3. A small-sized perfuming pot;
நறுமணம் புகைக்கும் கலம். (W.)
மட்டந்தட்டு
-
தல்
maṭṭan-taṭṭu-v. tr. <>id.+.1. To remove inequalities, as in level or weight;
சமமாக்குதல். (W.)
2. To bring down another's pride; to redicule;
கருவமடக்குதல். Colloq.
மட்டநூல்
maṭṭa-nūln. <>id.+.Measuring line;
சமநிலை பார்ப்பதற்கு உதவும் நூல்.
மட்டப்பலகை
maṭṭa-p-palakain. <>id.+.1. Measuring-rod; carpenter's rule;
சமனறியுந் தச்சுக்கருவி. (W.)
2. Mason's smoothing plane;
மணியாசிப்பலகை. Loc.
3. Mason's level, wooden frame with plumb line;
சமநிலைகாட்டுங் கொத்துக்கருவி.
4. Levelling staff;
உயர்வு தாழ்ச்சிகளைக் காட்டவுதவும் அளவு கோடிட்ட பலகை. Mod.
5. A kind of flat sled for carrying soil from one part of a field to another;
வயலில் மண்கொண்டு செல்லும் தட்டுப்பலகை. (G. Tp. D. I, 141.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3012 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், maṭṭa, level, rule, smooth, diamond, மட்டத்தாரை, mason, line, மட்டப்பலகை, length, attaining, kind, maṭ, wall, quality, சமமாக்குதல், measuring, மழுங்கிய, fish, flat, மட்டத்தாரைச்சப்படி, edges, tārai, smoothing, மட்டம்1, shark, cuṟān, cuvarn, மட்சிகம், grey, நிறமுள்ளதும், உதவும், கம்பரா, மீன்வகை, வளர்வதுமான, colloq